என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேடசந்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2 சினை ஆடுகள் பலி
    X

    உயிரிழந்த 2 ஆடுகள்.

    வேடசந்தூர் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 2 சினை ஆடுகள் பலி

    • இன்று காலையில் திடீரென 4 வெறிநாய்கள் சாலையில் ஆக்ரோச மாக சுற்றி திரிந்தன. இவர்கள் வீட்டில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதற தொடங்கின.
    • இப்பகுதி யில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது மக்களை விரட்டி கடிக்கும் வெறிநாய்க ளால் அச்சமடைந்து ள்ளனர்.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் அருகே டொக்கு வீரன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பழனியம்மாள். விவசாயிகளான இவர்கள் கால்நடைகளையும் வளர்த்து வருகின்றனர். ஆடு, மாடு, கோழி ஆகிய கால்நடை களை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் பட்டி அமைத்து கட்டி வைக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலை யில் இன்று காலையில் திடீரென 4 வெறிநாய்கள் சாலையில் ஆக்ரோச மாக சுற்றி திரிந்தன. இதைபார்த்து அப்பகுதி பொதுமக்கள் அலறி ஓடினர். இவர்கள் வீட்டில் புகுந்த வெறிநாய்கள் ஆடுகளை கடித்து குதற தொடங்கின. இதில் சில ஆடுகள் காயத்துடன் தப்பிஓடி விட்டது. 2 சினைஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறியதில் பரிதாபமாக உயிரிழந்தது.

    மிகவும் சிரமமப்பட்டு விவசாய த்துடன் கால்நடைகளை வளர்த்து வந்த முருகேசன் குடும்பத்திற்கு இது வேதனையை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த ஆடுகளை பார்த்து கதறிஅழுதனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இப்பகுதி யில் வெறிநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொது மக்களை விரட்டி கடிக்கும் வெறிநாய்க ளால் அச்சமடைந்து ள்ளனர். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×