search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடி திருவிழாக்களால் அய்யலூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    ஆட்டுச்சந்தையில் குவிந்த வியாபாரிகள், விவசாயிகள்.

    ஆடி திருவிழாக்களால் அய்யலூர் சந்தையில் ஆடுகள் விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி

    • ஆடி மாதத்தில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இதனால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    • அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன.

    வடமதுரை:

    திண்டுக்கல்-திருச்சி தேசியநெடுஞ்சாலையில் அய்யலூர் பகுதியில் வார ந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் மட்டு மல்லாது திருச்சி, மதுரை, தஞ்சை உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் ஆடு, கோழி கள் வாங்க வருகின்றனர். தற்போது கிராமங்களில் ஆடித்திருவிழாக்கள் களைகட்டி வருகிறது. இன்று ஆடி 18 என்பதால் பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடை பெற்று வருகிறது. மேலும் வண்டிகரு ப்பணசாமி கோவிலில் கிடா வெட்டி பொங்கல் வைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். கிடாவெட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உள்ளதால் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    7 கிலோ கொண்ட ஆடுகள் ரூ.10ஆயிரத்திற்கு விற்பனையானது. நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. அதிகாலை 4 மணிக்கே ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் குவிந்தனர். அதிகளவில் வியாபாரிகள் வந்ததால் 9 மணிக்கே பெரும்பாலான ஆடுகள், கோழிகள் விற்று தீர்ந்தன. அதன்பின்னர் கிடாவெட்டுக்கு ஆடுகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    வருங்காலங்களில் ஆடு, கோழிகளின் விலை உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாகும். எனவே இதற்கு தீர்வு காணவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×