என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

    • தீ விபத்து ஏற்பட்டதால் குடோனில் வைக்கப்பட்டிருந்த கயிறு மற்றும் நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது.
    • கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மல்லையாபுரத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு ஏராளமான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    இந்த ஆலையில் இன்று திடீரென தீப்பிடித்தது. குடோனில் வைக்கப்பட்டிருந்த கயிறு மற்றும் நார் பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இருந்தபோதும் ஆலையில் இருந்த லட்சகணக்கான பொருட்கள் எரிந்து சாம்பாலானது.

    இப்பகுதியில் உள்ள கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் அடிக்கடி தீ விபத்து நடப்பதால் இதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அக்கரைப்பட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அனுப்பியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன்காரணமாகவே அடிக்கடி தீ விபத்துகள் நடந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×