என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோரிக்கை அட்டையுடன் பணியாற்றிய மாநகராட்சி அலுவலர்கள்.
திண்டுக்கல்லில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றிய மாநகராட்சி ஊழியர்கள்
- திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர்.
- ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு தங்களது கோரிக்கைகளைதமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து அலுவலகத்தில் பணிபுரிந்து போராட்டம் நடத்தினர்.
அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓவ்வூகியம் வழங்கிட வேண்டும்.பணியிட மாறுதல்கள் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும். அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்திடவேண்டும்.
எல்லை விரிவாக்க பணியாளர்கள் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். செயல்திறனற்ற பணியாளர்கள் ஊதிய விகிதம் 5200-20200+1900 வழங்கிட வேண்டும். பிறதுறை பணிகளை நகராட்சி மாநகராட்சி ஊழியர்கள் செய்ய வலியுறுத்துவதை கைவிட வேண்டும்.
அரசாணை எண் 152, அரசாணை எண் 10ல் விடுபட்ட பணியிடங்களை வழங்கிட வேண்டும். நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சியில் அலுவலர்கள் ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.






