என் மலர்
நீங்கள் தேடியது "Wildlife affected"
- திருவிழாவில் மலைகிராம கோவில்களில் பல வண்ண விளக்கு களால் அலங்காரிக்கப்பட்டு மைக்செட்டுகள் கட்டப்பட்டுள்ளன.
- திருவிழாவி ற்காக அமைக்கப்பட்டுள்ள மைக் செட்டுகளில் அதிக சத்தம் வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வடமதுரை:
திண்டுக்கல் அருகே வடமதுரை, அய்யலூர், எரியோடு, குஜிலியம்பாறை, பாளையம் மற்றும் அதனை சுற்றி ஏராளமான மலைகிரா மங்கள் உள்ளன. ஆடி மாதத்தில் கிராமங்களில் திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரு கிறது.
கடந்த 3 வருடங்களாக கொரோனா தொற்று கார ணமாக திருவிழாக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது இந்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் பல கிராமங்களில் திருவிழா க்கள் களைகட்டி வருகிறது.
மலைகிராம கோவில்க ளில் பல வண்ண விளக்கு களால் அலங்காரிக்கப்பட்டு மைக்செட்டுகள் கட்டப்பட்டு ள்ளன. இதையொட்டியுள்ள வனப்பகுதியில் முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. திருவிழாவி ற்காக அமைக்கப்பட்டுள்ள மைக்செட்டுகளில் அதிக சத்தம் வருகிறது.
இதனால் வனவிலங்குகள் திசைமாறி ஊருக்குள் வரும் அபாயமும் உள்ளது. மேலும் இடைவிடாது வெடிக்க ப்படும் பட்டாசுகளும் வனவிலங்களுக்கு அச்ச த்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே மலைகிராமங்களில் குறைந்த அளவு ஒலிச்சத்த த்துடன் அமைதியான முறையில் திருவிழாக்கள் கொண்டாட வனத்துறை யினர் உத்தரவிடவேண்டும். பொதுமக்களும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






