என் மலர்
நீங்கள் தேடியது "நெசவாளர்கள் நூதன போராட்டம்"
- விசைத்தறியில் உற்பத்தி செய்யும் துணிகளை கைத்தறி நெசவுத் துணி என கடைகளில் வைத்து விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றுவதாக கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெசவாளர்கள் மனு அனுப்பும் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
பழனி:
பழனி அருகே அய்யம்பா ளையம் கிராமத்தில் 150 க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பாரம்பரிய கைத்தறி நெசவுத் தொழிலை மேற்கொண்டு கிடை க்கக்கூடிய வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். சமீப காலமாக கைத்தறி நெசவுத் தொழிலை நசுக்கும் வகையில் விசைத்தறி கூடங்கள் அமைக்கப்பட்டு துணிகள் உற்பத்தி செய்ய ப்படுகிறது.
விசைத்தறியில் உற்பத்தி செய்யும் துணிகளை கைத்தறி நெசவுத் துணி என கடைகளில் வைத்து விற்பனை செய்து பொது மக்களை ஏமாற்றுவதாக கைத்தறி நெசவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கூலி ரூ.800 லிருந்து படிப்படியாக குறைந்து தற்போது ரூ.500க்கும் குறைவான கூலி வழங்கப்படுகிறது. நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நூல் விலை ஏற்றத்தை அரசு குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைத்தறி தொழிலாள ர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ காப்பீடு நிறுத்தப்பட்டுள்ளது. நெசவாளர்களுக்கு மீண்டும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மேலும் கைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் வேளாண் கூட்டுறவு சங்கங்கள் போல நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை அமைக்க வேண்டும். மானிய விலை யில் நெசவாளர்களுக்கு தொழில்கடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நெசவாளர்கள் மனு அனுப்பும் போராட்ட த்தில் ஈடுபட்டனர்.
அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்தில் நெசவாளர்கள் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் பிரதமருக்கு கைத்தறி நெசவாளரின் வாழ்வாதாரத்தை மீட்க கோரி கோரிக்கை மனுக்களை அனுப்பினர். நெசவாளர்கள் மனு அனுப்பும் போராட்டம் நடத்தியதால் அய்யம்பா ளையம் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






