என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடை பெறவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம்.

    திண்டுக்கல்:

    பொது விநியோக த்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர்(கு.பொ.) வட்ட வழங்கல் அலுவல கங்களில் நாளை(9-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறை தீர் முகாம் நடைபெ றவு ள்ளது.

    இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரியும், செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொதுவிநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார் ஆகியவை தொடர்பாக மனு அளிக்கலாம்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்படி முகாம்களில் கலந்துக் கொண்டு மேற்காணும் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு கண்டு பயன்பெறலாம் என திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தலைமையில் நடைபெற்றது.
    • விண்கலங்கள் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வு போன்ற வற்றினை புரொஜெக்டர் திரையின் மூலம் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானி களான வேல்முருகன் மற்றும் பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி வேல்முருகன் கூறியதாவது, சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    மேலும் புவி மேற்பரப்பில் உள்ள வளிமண்டலங்கள், கோள்கள், குறுங்கோள்கள், நட்சத்திரங்கள், பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு, விண்வெளி பாதை, விண்கலங்கள் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வு போன்ற வற்றினை புரொஜெக்டர் திரையின் மூலம் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கி கூறினார்.

    மேலும் இடையிடையே மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வி களுக்கு உற்சாகத்துடன் பதில் அளித்த மாணவி களுக்கு உடனுக்குடன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    மேலும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோழியப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியான பேராசிரியர் காளிமுத்து அவர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் திறம்பட படித்து விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும், எந்த துறை சார்ந்து எடுத்து படித்தாலும், திறம்பட கற்க வேண்டும். அறிவியல் உலகத்தில் அறிவு சார்ந்த மாணவிகளாக விளங்க வேண்டும், கற்பதை தெளி வாக புரிந்து கற்றல் வேண்டும் என மாணவி களுக்கு அறிவுரை கூறினார்.

    தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றி உரையாற்றினார். ஆசிரியர் பாண்டியராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணை த்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது.
    • விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலை க்கழகத்தின் வேளாண் அறிவியல் மைத்துக்கு செயல்பாடுகளின் அடிப்படையில் மண்டல அளவில் 2ம் இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரி, யூனியன் பிரதேசத்தில் செயல்படும் வேளாண் அறிவியல் மையங்களை ஐதராபாத்தில் உள்ள வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி பண்பாட்டு நிறுவனம் கண்காணித்து வருகிறது.

    இந்நிறுவனமும் தமிழ்நாடு வேளாண் பல்கலையும் இணைந்து வேளாண் அறிவியல் மைய செயல்பாடு கள் குறித்து ஆய்வு கூட்டத்தை கோவையில் நடத்தின.

    இதில் காந்திகிராம பல்கலையும், வேளாண் அறிவியல் மையத்துக்கு மண்டல அளவில் 2-ம் இடம் கிடைத்துள்ளது. விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருானத்தை உயர்த்தவும் செயல்விளக்கம், ஆலோசனைகளை இந்த மையம் வழங்கி வருகிறது.

    மையத்தின் செயல்பா டுகள், விவசாயிகளின் வெற்றி கதைகளை ஆவணப்படுத்துதல், சுழல் நிதி உற்பத்தி போன்ற வற்றுக்காக இந்த வருது வழங்கப்பட்டது. வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலெட்சுமி இதற்கான விருதினை வழங்கினார்.

    வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் வெங்கட சுப்பிரமணியன், வேளாண் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கலியமூர்த்தி மயங்கி சரியவே தான் வைத்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.
    • கொலை செய்யப்பட்டு கிடந்த கலியமூர்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கொடைக்கானல்:

    புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் கலியமூர்த்தி (வயது23) இவர் கொடைக்கானல் பள்ளங்கி அருகே உள்ள வாழைக்காட்டு ஓடை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார்.

    புதுக்கோட்டை மாவட்டம் மாப்பிள்ளையார் குளம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் மகன் குமரன் (27) என்பவரும் கொடைக்கானலில் உள்ள மற்றொரு தனியார் தங்கும் விடுதியில் பணியாற்றி வந்தார். குமரனை கலியமூர்த்திதான் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் இரவு நேரங்களில் ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். அதேபோல நேற்று இரவு இருவரும் வாழைக்காட்டு ஓடை பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு அருகே மது அருந்தி உள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதை அடுத்து குமரன் அருகே இருந்த கட்டையை எடுத்து கலியமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் கலியமூர்த்தி மயங்கி சரியவே தான் வைத்திருந்த பெல்ட்டை எடுத்து அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்.

    இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அப்போது கொலை செய்யப்பட்டு கிடந்த கலியமூர்த்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்து கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கலியமூர்த்தி மற்றும் குமரன் ஆகிய 2 பேர் மீதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் போலீசில் சிக்காமல் இருக்க கொடைக்கானலில் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

    எனவே கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கொடைக்கானலில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜே.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக எந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது.
    • அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி எனப்படும் கொடைக்கான லில் மலைத் தள விதிகளின் அடிப்படையில் ஜே.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக எந்திரங்கள் இயக்குவதற்கு தடை உள்ளது. விவசாய பயன்பாட்டிற்கு மட்டுமே இந்த எந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

    அதிகாரி களிடம் அனுமதி பெற்ற பின்னரே குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே இந்த எந்திரங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் சமீப காலமாக வணிக பயன்பா ட்டிற்காக மலைகளை உடைத்து சட்டவிரோத செயல்களுக்கும் கனரக வாகனங்களான ஜே.சி.பி., ஹிட்டாச்சி போன்றவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி , பள்ளங்கி மற்றும் நகர்ப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வருவாய்த்துறை அதிகாரிகளின் துணையுடன் இந்த எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஜே.சி.பி., ஹிட்டாச்சி ஆகிய கனரக வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதுடன் வெடிவைத்து பாறைகள் உடைக்கும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படு கிறது.

    எனவே கொடைக்கானலில் ேஜ.சி.பி. மற்றும் ஹிட்டாச்சி எந்திரங்கள் இயக்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தடையை மீறி இயக்குபவர்கள் மீது காவல்துறை மூலம் நட வடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • சிரமங்களை தவிர்க்க விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் மாநில அளவிலான தேசிய நுகர்வோர் மற்றும் உலக நுகர்வோர்கள் தின விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். விழாவில் 2182 பயனாளிகளுக்கு ரூ.14.56 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு தொகை ஆகியவற்றை அமை ச்சர்கள் பெரிய கருப்பன், இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அர.சக்கரபாணி பேசியதாவது:-

    குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு 15 நாட்களில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் 15,06,189 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக த்தில் 26,261 முழு நேர நியாயவிலைக்கடைகள், 10,124 பகுதி நேர நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 36,405 நியாயவிலைக் கடைகள் உள்ளன.

    மேலும் நியாயவிலைக்க டைகளில் கைரேகை பதிவு மூலம் பொருட்கள் வாங்கும்போது சில சிரமங்கள் ஏற்படுகின்றன. அவற்றை தவிர்க்கும் வகையில் விரைவில் கண் கருவிழி மூலம் பதிவு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் என நியாயவிலை கடைக்குச் செல்ல முடியாதவர்கள், பொருட்கள் வாங்க வேறு ஒரு நபரை நியமித்து விண்ணப்பம் அளித்தால், அந்த நபரிடம் பொருட்கள் வழங்கப்படும். அந்த வகையில் தமிழகததில் சுமார் 3.50 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

    நியாய விலைக்கடைகளி ல் தரமான அரிசி, பருப்பு, எண்ணைய், சர்க்கரை போன்ற பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றன. பொதுமக்களுக்கு தரமான அரிசி வழங்க வேண்டும் என்பதற்காக கலர்டாப்ளர் எந்திரம் பொருத்தப்பட்ட அரிசி ஆலைகளில் மட்டுமே நெல் அரவை செய்யப்பட்டு, அரிசி கொள்முதல் செய்ய ப்பட்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் 31,000 பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

    நுகர்வோர் தொடர்பான விழாக்கள், போட்டிகள், பரிசுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட படைப்பாற்றலின் வெளி ப்பாடாக அமைந்துள்ள நிலையில், மாணவ-மாணவிகள் இத்தகைய நிகழ்ச்சிகளில் பெருவாரியாக கலந்து கொண்டு, நிகழ்ச்சிக்கான விவரங்கள் திரட்டுகையில், நுகர்வு தொடர்பான வழிகாட்டுதலும், அதன் விதிமீறல் மற்றும் முறையற்ற வணிகம், நுகர்வோருக்கு சட்டம் வழங்கியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளும் தொடர்ந்து ஆராயப்படு மாகையால், இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு மாணவ, மாணவியரும் எதிர்காலத்தில் முழுமை யான விழிப்புணர்வு பெற்ற நுகர்வோர்களாக திகழ்வா ர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., காந்திராஜன் எம்.எல்.ஏ., மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முகூர்த்த நாட்களில் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
    • பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரி க்கிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் முருகனை தரி சனம் செய்ய வருகின்றனர்.

    முகூர்த்த நாட்களில் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தீர்வு காணும் வகையில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, நகராட்சி ஆணையர் பாலமுருகன், டி.எஸ்.பி சரவணன் மற்றும் அதிகாரிகள் பழனி கிரிவீதி மற்றும் அடிவார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது முதற்கட்டமாக பக்தர்கள் அதிகம் பயன்படு த்தும் பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வடக்கு கிரிவீதியில் வாகனங்கள் நுழையும் இடங்களில் பேரிகார்டுகள் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தனியார் நிறுவன காவலாளிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக பைக் மற்றும் நடந்து செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படு கின்றனர்.

    மலையடிவார பகுதிக்கு வரும் வாகனங்கள் இடும்பன் கோவில் சாலை வழியாக செல்ல அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் பிளம்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளும் விளைவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்களும் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து பேரிக்காய் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அதிகளவில் வாங்கி செல்லப்படுகிறது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அப்சர்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம், வில்பட்டி, பெருமாள் மலை, மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிக்காய் 2வது முறையாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2 மாதங்கள் வரை இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில வாரங்களாக விலை குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை சற்று அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

    • இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது.
    • வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மூங்கில்பட்டியை சேர்ந்தவர் சின்னையா(45). கூலித்தொழிலாளி. இவருக்கு கோகிலா என்ற மனைவியும், மாரிச்செல்வம்(14), கவிவர்மன்(11), பிரநிஷா(5) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் கம்பி கட்டும் வேலைக்காக ஈராக் சென்றார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 1-ந்தேதி சின்னையா தற்கொலை செய்து கொண்டதாக மனைவி கோகிலாவுக்கு தகவல் கிடைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என நத்தம் தாசில்தார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பூங்கொடி உறுதி அளித்தார். இந்நிலையில் தன்னைபற்றி சிலர் அவதூறு பரப்பியதால் தற்கொலை செய்து கொண்ட வாட்ஸ்அப் மூலம் சின்னையா தகவல் அனுப்பியுள்ளார். இந்திய தூதரக முயற்சியால் சின்னையாவின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் சொந்தஊருக்கு வந்தது.

    சின்னையாவின் உடலை பார்த்து மனைவி கோகிலா மற்றும் குழந்தைகள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. வேலைதேடி வெளிநாடு சென்ற தொழிலாளி சடலமாக ஊர் திரும்பியது கிராம மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.
    • எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவத்தை வைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து அவர்களது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா மாநில ஒருங்கிணைப்பாளர்பாலாஜி, இந்து மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் தர்மா, மாநில இளைஞரணி துணைத்தலைவர் மோகன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்துமக்கள் கட்சி தலைவர் நாகராஜன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயலாளர் மணிகண்டன், சிவசேனா இளைஞரணி மாநில செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர். இதனால் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுட்டனர்.
    • தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தியவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    திண்டுக்கல்:

    மத்திய அரசின் விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலையில்லா திண்டாட்டம், தொழிலாளர் விரோத கொள்கைகள், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல்லில் ரெயில் மறியல் போராட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இன்றுகாலை மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர்ராமலிங்கம் தலைமையில் நகரச்செயலாளர் அரபுமுகமது, ஒன்றிய செயலாளர் சரத்குமார், நிர்வாகிகள் ஜோதிபாசு, கணேசன், மாரியம்மாள், தவக்குமார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பியவாறு ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இருந்தபோதும் அவர்கள் தடுப்புகளை தாண்டி உள்ளே நுழைந்து ரெயிலை மறித்தும், தண்டவாளத்தில் படுத்தும் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ைகது செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

    இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் கொடைக்கானல் விடுதியில் மாரடைப்பால் இறந்தார்.
    • கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    தேனி ஆயுதப்படையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்ட ராக பணியாற்றியவர் பாஸ்கரன் (வயது 56). இவருக்கு திருமணமாகி நாகஜோதி என்ற மனைவியும், ஜெகதீஸ் (23) என்ற மகனும், பிரியதர்ஷினி (22) என்ற மகளும் உள்ளனர்.

    பாஸ்கரன் தனது நண்பரான லெனின் என்ப வருடன் கொடைக்கா னலுக்கு சென்றார். இவர்கள் அங்குள்ள தனது நண்பர்களை சந்தித்து விட்டு நாயுடுபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் தங்கினார்.

    மறுநாள் காலையில் லெனின் எழுந்து தனது நண்பர் பாஸ்கரனை எழுப்பினார். அப்போது அவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். உடனே விடுதி ஊழியர்களுடன் சேர்ந்து பாஸ்கரனை கொடைக்கா னல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மார டைப்பால் உயிரிழந்திரு க்கலாம் என தெரிவித்தனர்.

    ×