என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழனி வடக்கு கிரிவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்டோ, கார்களுக்கு தடை
    X

    கோப்பு படம்

    பழனி வடக்கு கிரிவீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஆட்டோ, கார்களுக்கு தடை

    • முகூர்த்த நாட்களில் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
    • பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

    பழனி:

    தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவில் திருவிழா மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை மேலும் அதிகரி க்கிறது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் முருகனை தரி சனம் செய்ய வருகின்றனர்.

    முகூர்த்த நாட்களில் பழனி அடிவாரம், கிரிவீதி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தீர்வு காணும் வகையில் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில் கோவில் உதவி ஆணையர் லட்சுமி, நகராட்சி ஆணையர் பாலமுருகன், டி.எஸ்.பி சரவணன் மற்றும் அதிகாரிகள் பழனி கிரிவீதி மற்றும் அடிவார பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

    அப்போது முதற்கட்டமாக பக்தர்கள் அதிகம் பயன்படு த்தும் பழனி அடிவாரம் வடக்கு கிரிவீதியில் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. வடக்கு கிரிவீதியில் வாகனங்கள் நுழையும் இடங்களில் பேரிகார்டுகள் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு தனியார் நிறுவன காவலாளிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வழியாக பைக் மற்றும் நடந்து செல்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படு கின்றனர்.

    மலையடிவார பகுதிக்கு வரும் வாகனங்கள் இடும்பன் கோவில் சாலை வழியாக செல்ல அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×