search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விநாயகர் சதுர்த்திக்காக கொடைக்கானலில் இருந்து பேரிக்காய் ஏற்றுமதி அதிகரிப்பு
    X

    வெளியூர்களுக்கு அனுப்ப தயார் நிலையில் உள்ள பேரிக்காய்கள்.

    விநாயகர் சதுர்த்திக்காக கொடைக்கானலில் இருந்து பேரிக்காய் ஏற்றுமதி அதிகரிப்பு

    • கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.
    • விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி, பீன்ஸ், காலிபிளவர் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இதுதவிர சீசன் காலங்களில் பிளம்ஸ், ஆப்பிள் உள்ளிட்ட பழ வகைகளும் விளைவிக்கப்படுகிறது. மேலும், மருத்துவ குணம் கொண்ட பேரிக்காய்களும் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. இங்கிருந்து பேரிக்காய் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு ஜாம் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் அதிகளவில் வாங்கி செல்லப்படுகிறது.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. அப்சர்வேட்டரி, வட்டக்கானல், பிரகாசபுரம், வில்பட்டி, பெருமாள் மலை, மன்னவனூர் உள்ளிட்ட கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேரிக்காய் 2வது முறையாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 2 மாதங்கள் வரை இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த சில வாரங்களாக விலை குறைந்து இருந்த நிலையில் தற்போது வெளியூர் வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் விலை சற்று அதிகரித்துள்ளது.

    விநாயகர் சதுர்த்தி வருவதால் அதிகளவில் வியாபாரிகள் பேரிக்காய்களை நேரடியாக வாங்கி செல்கின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×