search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Science Awareness"

    • ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தலைமையில் நடைபெற்றது.
    • விண்கலங்கள் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வு போன்ற வற்றினை புரொஜெக்டர் திரையின் மூலம் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கி கூறப்பட்டது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றும் விஞ்ஞானி களான வேல்முருகன் மற்றும் பேராசிரியர் காளிமுத்து ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானி வேல்முருகன் கூறியதாவது, சமீபத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியால் (இஸ்ரோ) சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இதனைச் சாதித்த முதல் நாடு என்ற பெருமையை நமது நாடு கொண்டாடி வருகின்றது.

    விக்ரம் லேண்டரில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் மூலம் நிலவில் இரும்பு, அலுமினியம், சல்பர் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்தது.

    மேலும் புவி மேற்பரப்பில் உள்ள வளிமண்டலங்கள், கோள்கள், குறுங்கோள்கள், நட்சத்திரங்கள், பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொடர்பு, விண்வெளி பாதை, விண்கலங்கள் மூலம் விண்வெளிக்குச் செல்லும் நிகழ்வு போன்ற வற்றினை புரொஜெக்டர் திரையின் மூலம் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கி கூறினார்.

    மேலும் இடையிடையே மாணவிகளிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. கேள்வி களுக்கு உற்சாகத்துடன் பதில் அளித்த மாணவி களுக்கு உடனுக்குடன் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    மேலும் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சோழியப்ப கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானியான பேராசிரியர் காளிமுத்து அவர்கள் கூறுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகள் திறம்பட படித்து விஞ்ஞானிகளாக உருவாக வேண்டும், எந்த துறை சார்ந்து எடுத்து படித்தாலும், திறம்பட கற்க வேண்டும். அறிவியல் உலகத்தில் அறிவு சார்ந்த மாணவிகளாக விளங்க வேண்டும், கற்பதை தெளி வாக புரிந்து கற்றல் வேண்டும் என மாணவி களுக்கு அறிவுரை கூறினார்.

    தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி நன்றி உரையாற்றினார். ஆசிரியர் பாண்டியராஜன் நிகழ்ச்சியை ஒருங்கிணை த்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×