என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    • மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வமாக வாங்கி சென்றனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவ ரசியான கொடைக்கானலை காண வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகி ன்றனர். கடந்த சில நாட்க ளாக தொடர்ந்து மழை பெய்தது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பல்வேறு சுற்றுலா இடங்களும் வெறி ச்சோடி காணப்பட்டன. ஆனால் தற்போது கொடை க்கானலில் மேகமூட்டத்து டன் கூடிய இதமான சீதோசனம் நிலவி வருகிறது. மேலும் மலைப்பகுதியில் தரையிறங்கும் மேக கூட்டத்தை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். வார விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக காண ப்பட்டது. கொடை க்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனை த்தும் நிரம்பி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

    பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி, பைன்பாரஸ்ட், குணாகுகை, மோயர் பாயிண்ட், தூ ண்பாறை, பசுமை ப்பள்ள த்தாக்கு உள்ளிட்ட இடங்க ளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மைய ப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சா கமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

    கடந்த சில நாட்களாக மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, பூம்பாறை பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகி ன்றனர். இதனால் மன்ன வனூரில் உள்ள சூழல் சுற்றுலா மையம், எழு ம்பள்ளம் ஏரியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் அங்கு விளைவிக்கப்படும் காய்கறி களை சுற்றுலா பயணி கள் ஆர்வமாக வாங்கி சென்றனர். தொடர்மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்ப டைந்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்த காரணத்தினால் வாகன போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இனி வரும் காலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது.
    • போட்டிக்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிட ப்பட்டது.

    இவ்வறிவிப்பின்படி நிகழாண்டில் (2023-2024) அண்ணா பிறந்தநாளை யொட்டி கல்லூரி களில் பயிலும் மாணவ-மாணவி களிடையே பேச்சுப் போட்டி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் 15ந் தேதி காலை 1 0 மணி முதல் நடை பெறவுள்ளது. இப்போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் கலந்துக்கொள்ளலாம்.

    அண்ணாவும் மேடைப் பேச்சும், கடமை, கண்ணியம், கட்டு பாடு, மக்கள் தொண்டே மகேசன் தொண்டு, வாய்மையே வெ ல்லும், ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காணலாம் ஆகிய தலைப்புகளில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறும் மாணவ ர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் பரிசுகள் வழங்கப்படும். மேலும், பேச்சு ப்போட்டியில் பங்கேற்கும் கல்லூரி மாணவர்களை ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்தக் கல்லூரி முதல்வர் மூலம் தெரிவு செய்து போட்டி க்குரிய பரிந்துரை படிவத்துடன் தொடர்பு டைய போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மா வட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • நத்தம் அருகே சிறுகுடி கருங்குட்டு கோவில் சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து மகிழ்ந்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கருங்குட்டு கோவில் சிறுகுடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது.

    கடந்த ஆண்டு பெய்த பருவமழையினால் இந்த குளம் நிரம்பியது. தற்போது குளத்தில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் உள்ளது. குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்ப ட்டது. இது தொடர்பாக அ றிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதனையடுத்து இன்று காலை கிராம மக்கள் சிறுகுடி கண்மாய்க்கு திரண்டு வந்தனர். பின்னர் அங்குள்ள கருங்குட்டு கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர். அதன்பிறகு மீன்பிடி திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து பூசாரிப ட்டி, அர ண்மனைபுதூர், சமுத்திராப்பட்டி, நல்ல கண்டம், ஒடுகம்பட்டி, மஞ்ச நாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம ங்களை சேர்ந்த மக்கள் குளத்தில் இறங்கி போட்டி ப்போட்டு மீன்களை பிடித்தனர். ஊத்தா கூடை, வலை மூலம் மீன்கள் பிடிக்க ப்பட்டது. கட்லா, ஜிலேபி, விறால், பாறை, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்தன. தங்களுக்கு கிடைத்த மீன்களை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.
    • சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் பேசினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.10 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் கூடுதல் வகுப்பறை கட்டிடப்பணிகளை அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார். கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். வேலுச்சாமி எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட செட்டியபட்டி யில் தமிழ்நாடு நக ர்ப்புற மேம்பாட்டு த்திட்டத்தில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி, போளியம்ம னூரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி, திருமலைராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டுமான பணிகள் என மொத்தம் ரூ.4.10 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அப்போது அமைச்சர் பேசியதாவது:-

    தமிழக மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்ப டுத்தப்ப ட்டு வருகின்றன. பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீர், சுகாதாரம், வகுப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. திருமலைரா யபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது நபார்டு திட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிக்கு இன்னும் தேவையான வசதிகள் செய்து தரப்படும்.

    கருணாநிதி முதலமை ச்சராக இருந்தபோது, போளி யம்மனூரில் முதன்முறை யாக சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தற்போது கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேவர்பிளாக் கல் பதிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்குத் தேவையான கல்வி வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் வாயிலாக சாலை மேம்பாட்டுப் பணிகள் மே ற்கொள்ளப்பட்டு வருகி ன்றன. முதல்-அமைச்சர் கிராமப்புற சாலை திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 10,000 கி.மீட்டர் துாரம் சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் மேம்பாட்டுக்காக ரூ.180 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமப்புறங்களில் மின் வசதி, தெருவிளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்ந்து நிறை வேற்றப்பட்டு வருகின்றன. நான் கூட்டுற வுத்துறை அமைச்சராக இருந்தபோது கூட்டுறவுத்துறையில் 7000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் மட்டும் தகுதியின் அடிப்படையில் 180 பணி நியமனங்கள் மே ற்கொ ள்ளப்பட்டு, காலிப்பணி யிடங்கள் பூர்த்தி செய்ய ப்பட்டன. சுகாதா ரத்துறை, போக்குவரத்து த்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள பணியிட ங்கள் விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    • மது போதைக்கு அடிமையான தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நாகல் நகர், பாரதிபுரம் இளைஞர் படிப்பகம் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (53). நெசவு தொழிலாளி. இவரது மனைவி புஷ்பம். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்கள் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் மது போதைக்கு அடிமையானார். நேற்று இரவு வழக்கம் போல் தனது அறைக்கு படுக்க சென்றார். இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை.

    இதனையடுத்து இன்று காலை அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த மனைவி புஷ்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நகர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோசடி செய்த நைஜீரிய வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு கைது செய்தனர்.
    • இவ்வழக்கில் நைஜீரிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    திண்டுக்கல்:

    நிலக்கோட்டை அருகே பள்ளபட்டிைய சேர்ந்தவர் வெங்கடாஜலபதி(45). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் வெளிநாட்டில் வேலை குறித்து இணையதளத்தில் தேடினார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதை பின்பற்றிய வெங்கடா ஜலபதி எதிர்முனையில் பேசிய நபர் கனடாவில் வேலை உள்ளது என தெரிவித்துள்ளார். இதனை நம்பிய வெங்கடாஜலபதி அவர் கூறிய வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்து 4 ஆயிரத்தை செலுத்தினார்.

    ஆனால் அதன்பின்னர் வேலை குறித்து எந்த தகவலும் இல்லை. மேலும் அந்த நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடாஜலபதி திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மீனா தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் வெங்கடாஜலபதியிடம் போனில் பேசியது நைஜீரியாவை சேர்ந்த உச்சண்ணா கிறிஸ்டியன்(45) என தெரியவந்தது.

    ஈேராடு மாவட்டம் பெருந்துறையில் பதுங்கி யிருந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் ேஜ.எம்.1 கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரியா மோசடி செய்த வாலிபர் உச்சண்ணா கிறிஸ்டியனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • விபத்தில் உயிரிழந்த ஒருவரது குடும்பத்திற்கு விபத்து இழப்பீட்டு தொகை ரூ.17.50 லட்சத்திற்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

    விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. இதனால் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சினைகள் நீதிமன்றத்தை நாடி வருகிறது. குடும்பப் பிரச்சி னைகள் நீதிமன்றத்தில் அதிக அளவு வழக்குகளாக வருகிறது. வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இது இருந்தால் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

    இதேபோல் திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றத்திலும் 13 அமர்வுகள் மூலம் 2 ஆயிரத்து 500 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் உடனடி தீர்வாக கடந்த 2022ல் விபத்தில் உயிரிழந்த கண்ணன் என்பவரது குடும்பத்திற்கு விபத்து இழப்பீட்டு தொகை ரூ.17.50 லட்சத்திற்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் கருணாநிதி, சரண், விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனா, முதன்மை சார்பு நீதிபதி ராமச்சந்திரன், கூடுதல் சார்பு நீதிபதி தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மூங்கில்பள்ளம் ஆதிவாசி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
    • மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் அருகே மேல்மலைகிராமமான மன்னவனூர் பஞ்சாய த்துக்குட்பட்ட மூங்கில்ப ள்ளம் ஆதிவாசி கிராமத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடி ப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு குடிநீர் வழங்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீழானவயல் கிராமத்தில் இருந்து பைப் மூலம் மூங்கில் பள்ளத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அங்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தேக்கப்பட்டு மலைகிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

    வனத்துறையினரின் முயற்சியால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் தங்களுக்கு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • இந்நிலையில் தொழிலாளியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வீமாஸ் நகரில் டாஸ்மாக் கடை அருகே கடந்த 6-ம் தேதி ஒரு வாலிபர் இறந்து கிடந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தவர் லிங்கவாடி எல்.வலையபட்டியைச் சேர்ந்த அழகுப்பிள்ளை மகன் சீனி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார்.

    சாலையோர பள்ளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் நத்தம் போலீசார் அவர் கொலை செய்யப்பட்டா ரா? அல்லது விபத்தில் இறந்தாரா? என்ற கோண த்தில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    விசா ரணையில் சீனி கொலை செய்ய ப்ப ட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இத னைத் தொட ர்ந்து அதே பகுதி யை சேர்ந்த சில ரிடம் போலீ சார் தீவிர விசா ரணை மே ற்கொ ண்ட னர்.

    சம்பவம் நடந்த அன்று வத்தி பட்டியில் ஆசை என்ப வரின் பெட்டி க்கடையில் சீனி பொரு ட்கள் வாங்கி னார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு ள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசை, தென்னரசு, ரஜினி என்ற நல்லியப்பன் மற்றும் பாபு ஆகிய 4 பேரும் சேர்ந்து சீனி யை தாக்கினர்.

    அதன்பி ன்னர் சீனி அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மது வாங்க செ ன்றார். அப்போது பின் தொட ர்ந்து வந்த அவர்கள் 4 பேரும் டா ஸ்மாக் கடை யில் மீண்டும் தகராறு செய்து தாக்கினர். இதனால் சீனி பரிதாபமாக உயிரிழந்தார் என்பது தெரிய வந்தது. முதலில் சந்தேக மர ணமாக வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் இது கொலை வழக்காக மாற்ற ப்பட்டது.

    வழக்கில் தொடர்பு டைய புதுக்கோ ட்டையை சேர்ந்த தென்னரசு, வலைய பட்டி ஆசை ஆகிய 2 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். மேலும் தலைமறை வாக உள்ள வலையப ட்டியைச் சேர்ந்த ரஜினி மற்றும் கவராயபட்டியை சேர்ந்த பாபு ஆகிய 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்ட சீனிக்கு சின்னப்பிள்ளை என்ற மனைவியும், 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    • கொடைக்கானலில் பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.
    • இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் ஆய்வு செய்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு நகராட்சி சார்பில் பல்வேறு மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகிறது.

    கொடைக்கானல் அண்ணா சாலை பகுதியில் அமைந்துள்ள தினசரி சந்தை, கொடைக்கானல் பஸ் நிலைய புதிய கழிவறை கட்டிடம் மற்றும் பஸ் நிலைய கட்டிட பராமரிப்புபணிகள், படகு குழாம், செண்பகனூர் அய்யர் கிணறு பகுதி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.31.28 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடை பெற்று வருகிறது.

    இந்த பணிகளை மண்டல செயற்பொறியாளர் மனோகரன் ஆய்வு செய்தார். ஆய்வின்போது கொடைக்கானல் நகர் மன்றத்தலைவர் செல்லத்துரை, துணைத் தலைவர் மாயக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மண்டல செயற்பொறியாளர் மனோகரன் நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    • மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கணவர் கண்டித்து வந்துள்ளார்.
    • மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்ததில் படுகாயமடைந்:து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மனைவி பஞ்சவர்ணம் (வயது33). குணசேகர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி கண்டித்து வந்துள்ளார்.

    இதனையடுத்து கன்னிவாடி போலீசில் பஞ்சவர்ணம் தனது கணவர் மீது புகார் அளித்தார். விசாரணைக்கு இன்று போலீசார் அழைத்திருந்த நிலையில் வீட்டிலேயே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி பஞ்சவர்ணம் தீக்குளித்தார்.

    இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடலில் தண்ணீர் ஊற்றி அணைத்தனர். இதனை யடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு வந்தனர். 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இச் சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து பயிற்சி அளித்தனர்.
    • இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு இயக்குவது பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    சின்னாளப்பட்டி:

    காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. வேளாண்மை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் 6 மாத காலம் கிராமங்களில் தங்கி விவசாயிகளை நேரில் சந்தித்து பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெற்று வருகின்றனர்.

    இதன் ஒரு கட்டமாக மாணவர்கள் அருண்குமார், விஷ்வா, அரவிந்த், அஸ்வின், நிவேதன், கனிஷ்கர் ஆகியோர் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் உள்ள மாங்கரை, அம்மாப்பட்டி ஆகிய கிராமங்களில் தங்கி விவசாயிகளோடு இணைந்து பல்வேறு வகையான பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.

    இப்பகுதியில் அதிகமாக பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளத்தை அதிகளவு தாக்கும் படைப்புழுவை எவ்வாறு இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி தடுக்கும் வழி முறைகள் பற்றியும், வேதி உயிர்கொல்லி மருந்துகளை குறைப்பது பற்றியும், மண்ணின் ஊட்டச்சத்தை சிதைக்காமல் மண்ணை நிலையாக பாதுகாப்பது உள்ளிட்ட பயிற்சிகளை விவசாயிகளுக்கு மாணவர்கள் அளித்தனர்.

    இப்பயிற்சி முகாமில் தமிழக அரசின் உழவன் செயலி பற்றிய முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு இயக்குவது பற்றியும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

    ×