என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் இன்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-

    தமிழக முதல்-அமை ச்சரின் உத்தரவின்படி பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வரு கிறது.

    கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருக்கோயி ல்கள் சார்பாக திருமண விழா நடத்தப்படு கிறது.

    அதன்படி திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2000, திருமண த்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000, மாலை, புஷ்பம் ரூ.1000, பீரோ ரூ.7800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1000, ஒரு மிக்சி ரூ.1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்கம் ஆகியவை வழங்க ப்பட்டு வருகிறது.

    நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜோடிகளுக்கும், தேனி மாவட்டத்தில் 5 ஜோடிகளுக்கும் என மொத்தம் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    தற்போது 2-ம் கட்டமாக திண்டுக்கல்அபிராமி அம்மன் கோவிலில் 8 ஜோடிகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரை திண்டுக்கல் இணை ஆணையர் மண்ட லத்தில் மொத்தம் 22 ஜோடி களுக்கு திருக்கோயில்களின் சார்பில் இலவச திருமணம் நடத்தப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சிகளில், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ், செயல் அலுவலர்கள் வேலுச்சாமி, முருகன், பாலசரவணன், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீட்டில் இருந்த புதுப்பெண் திடீரென மாயமானார்.
    • அதிச்சி அடைந்த கணவர் மற்றும் பெண் வீட்டார்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். எங்கும் கிடைக்க வில்லை.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூைர சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது23). இவர் வேடசந்தூர் பகுதியில்உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார். சங்கீதா வுக்கும் பாலாதோட்டத்தை சேர்ந்த பாண்டித்துரை என்பவருக்கும் 5 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமண த்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் மறு வீட்டுக்கு வந்தனர்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சங்கீதா திடீரென மாயமானார். இதனால் அதிச்சி அடைந்த பாண்டி த்துரை மற்றும் பெண் வீட்டார்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்த னர். எங்கும் கிடைக்க வில்லை.

    இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்க ப்பட்டது. அந்த புகாரில் எரிேயாடு பாகாநத்தம் புதூரை சேர்ந்த மில்வேன் டிரைவர் மனோஜ்குமார் (19) என்பவர் தனது மகளை கடத்தி இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கீதாவை தேடி வருகின்றனர்.

    • பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.
    • தற்கொலை எண்ணம் தோன்றினால் அதை எவ்வாறு போக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்.

    பழனி:

    உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு பழனியில் இன்று டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பழனி அரசு ஆஸ்பத்திரி முன்பு தொடங்கிய பேரணியை தலைமை மருத்துவர் டாக்டர் உதயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.

    தற்கொலை எண்ணம் தோன்றினால் அதை எவ்வாறு போக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது.

    • வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதியில் முகாமிட்டு வருகின்றன.
    • யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பைன் பாரஸ்ட், குணாகுகை உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இருந்தபோதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரிக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அடர்ந்த வனப்பகுதியின் நடுவே குளிர்ந்த காற்றுடன் ஏரிப்பகுதியில் பயணம் மேற்கொள்வது புத்துண ர்ச்சியை தருகிறது. பேரிஜம் ஏரிக்கு செல்ல மூஞ்சிக்கல் பகுதியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்தி செல்லவேண்டும். வனப்ப குதியை ஒட்டி யுள்ளதால் தண்ணீர் தேடிவரும் வன விலங்குகள் அருவி பகுதி யில் முகாமிட்டு வருகின்றன.

    குறிப்பாக யானைகள் கூட்டமாக சுற்றி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி இன்று பேரிஜம் ஏரியில் தடை விதிக்கப்பட்டது. யானைகளை வனப்பகுதி க்குள் விரட்டிய பிறகு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரி வித்தனர்.

    • நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வோடு பயன்படுத்தி வந்தனர்.
    • இந்நிலையில் நத்தம் தர்பார் நகர் அருகே பைப் உடைந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாக கழிவு நீரில் கலந்து அருகே உள்ள நல்லாகுளத்தை நிரப்பி வருகிறது.

    நத்தம்:

    நத்தம் பகுதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பல கோடி ரூபாய் செலவில் பொது மக்கள் பயன் பாட்டிற்காக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வோடு பயன்படுத்தி வந்தனர்.

    காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பாதைகளில் ஆங்காங்கே அடிக்கடி பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாவது வழக்கமாகியுள்ளது. இந்நிலையில் நத்தம் தர்பார் நகர் அருகே பைப் உடைந்து சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக குடிநீர் வீணாக கழிவு நீரில் கலந்து அருகே உள்ள நல்லாகுளத்தை நிரப்பி வருகிறது.

    தொடர்ந்து இதுபோல் காவேரி கூட்டு குடிநீர் வீணாகி வருவதால் பொதுமக்களுக்கு தண்ணீர் பஞ்சம் ஏற்படும் சூழல் உள்ளது. உடனே குடிநீர் வாரியம் உடைந்த பைப் லைன்களை உடனடியாக சரி செய்து தண்ணீர் வீணாவதை தடுக்குமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் தோரண பூஜை, சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை ஆசிரியர்களுக்கு ரக்சாபந்தனம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மணலூர் ஊராட்சி மஞ்சள்பரப்பு மலைகிராமத்தில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு மேல் விநாயகர் அனுக்கை, கிராம தேவதைகள் அனுக்கை, சுத்தி புண்யாக வாசனம், பிரவேசபலி, வாஸ்த்து சாந்தி பூஜை, அஷ்டதிக் பாலகர்கள் பூஜைகள் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு மேல் யாகசாலையில் தோரண பூஜை, சிவசக்தி வழிபாடு, யாகசாலை பரிவார தேவதைகள் பூஜை, வேதிகை ஆசிரியர்களுக்கு ரக்சாபந்தனம் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    2-வது நாளான நேற்று காலை 6.30 மணிக்கு மேல் காளியம்மன் மற்றும் சிம்ம வாகனத்திற்கும் யந்திர பிரதிஷ்ட்டை மற்றும் அஷ்டபந்தன மருந்து சாற்று நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.30 மணிக்கு மேல் திருப்பள்ளியெழுச்சி, விநாயகர் பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள், கருடாழ்வார் வழிபாடு, கணபதி ஹோமம், சண்முக சடாட்சர ஹோமம், ருத்ர ஹோமம், நவசக்தி ஹோமம் மற்றும் 3ம் கால மகா பூர்ணாகுதி வேதபாராயணம் பஞ்சபுராணம் மற்றும் தீபாராதனைகள் நடை பெற்றது. காலை 10.30 மணிக்கு மேல் யாகசாலை யில் நாடி சந்தானம் போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, புண்ணிய கலசங்கள் ஆலயம் வலம் வந்து, வேத மந்திரங்கள் முழங்க கோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    அதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சி யளித்த காளியம்மனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் மாலை 3 மணிக்கு மேல் காளியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று சூரிய ராஜ் ஓடையில் கரைத்தனர். விழாவிற்கான ஏற்பாடு களை என்.பி.ஆர்., பி.கே.டி. பங்காளிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி கள் மற்றும் விடுதிகளில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27 ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    • முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய விண்ணப்பத்துடன் தக்க சான்றுகளை இணைத்து வருகிற 13 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

    திண்டுக்கல்:

    மதுரை கள்ளர் சீரமைப்பு இணை இயக்குநர் அலுவலக நிர்வாகத்தின் கீழ் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் இயங்கி வரும் அரசு கள்ளர் பள்ளி கள் மற்றும் விடுதிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கணினி பயிற்று நர்கள், காப்பாளர், காப்பாளினிகளுக்கு 2023-2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வருகிற 26 மற்றும் 27 ந் தேதி ஆகிய 2 நாட்கள் மதுரை மாவட்டம், முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    26ந் தேதி காலை 10.30 மணி முதல் மேல்நிலை ப்பள்ளித் தலைமையாசிரி யர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, நடுநிலை ப்பள்ளித் தலைமையாசிரி யர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு, தமிழாசிரியர் மாறுதல், பட்டதாரி ஆசிரி யர், கணினி பயிற்றுநர், காப்பாளர், காப்பாளினி மாறுதல் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்கான மாறு தல் கலந்தாய்வு நடைபெற வுள்து.

    27ந் தேதி காலை 10.30 மணி முதல் தொடக்க ப்பள்ளித் தலைமையாசிரி யர் மாறுதல் மற்றும் பதவி உயர்வும், உதவித் தொடக்க கல்வி அலுவலர் மற்றும் சரக மேற்பார்வை யாள ர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு இடைநிலை ஆசிரியர் (1 முதல் 5ஆம் வகுப்பு) இடைநிலைக் காப்பாளர், காப்பாளினி மாறுதலும் நடைபெற உள்ளது.

    எனவே, முன்னுரிமையில் உள்ளவர்கள் உரிய விண்ணப்பத்துடன் தக்க சான்றுகளை இணைத்து வருகிற 13 ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் இணை இயக்குநர் கள்ளர் சீரமைப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க ப்படும்பட்சத்தில் அதற்குரிய முன்னுரிமை வழங்கப்படும். அதற்குப் பின்னர் வரும் மனுக்கள் பரிசீலனைக்கு ஏற்று க்கொள்ள இயலாது என இணை இயக்குநர் பொன்.குமார் தெரிவித்துள்ளார்.

    • நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.
    • வழக்கில் தலைமறைவாக உள்ள வைரமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஜாக்குலின் கிறிஸ்டி (வயது 35). இவர் சம்பவத்தன்று மின் மயானம் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் ஜாக்குலின் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து திண்டுக்கல் நகர் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து டவுன் டி.எஸ்.பி.கோகுல கிருஷ்ணன் மேற்பார்வையில், நகர் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி, நகர் உட்கோட்ட குற்றப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் எட்வர்டு, தலைமை காவலர்கள் ராதாகிருஷ்ணன், முகம்மது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த காட்சியில் பதிவான வாலிபர்களின் புகைப்படம் மூலம் போலீசார் அவர்களை தேடினர்.

    விசாரணையில் அவர்கள் மதுரை நரிமேட்டைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மகன் சூர்யா (வயது 24), மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த செல்வம் மகன் வைரமணி என்பது தெரியவந்தது. இதையடுத்து மதுரை மாநகர குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் தலைமையிலான தனிப்படையினர் உதவியுடன் சூர்யாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 பவுன் நகை மற்றும் குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் சூர்யாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வைரமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு இன்று 4 தேர்வு மையங்களில் நடை பெற்றது. திண்டுக்கல்லில் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வறை களில் அனுமதிக்க ப்பட்ட 280 தேர்வர்களில் 224 நபர்களும்,

    ஒய்.எம்.ஆர்.பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வ றைகளில் அனுமதிக்கப்பட்ட 268 தேர்வர்களில் 231 நபர்க ளும், அண்ணா மலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனும திக்கப்பட்ட 380 தேர்வ ர்களில் 324 நபர்களும், பேகம்பூர் அவர்லேடி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 380 தேர்வர்களில் 319 நபர்களும் என 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

    இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 66 கண்காணிப்பாளர்கள், 8 தலைமை அலுவலர்கள், ஒவ்வொரு மையத்திற்கும் தலா 2 வீடியோ ஒளிப்பதிவாளர்கள், என மொத்தம் 82 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக காற்றோட்டமான தேர்வு அறைகள், இருக்கை வசதிகள், தடையின்றி மின் வினியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மே ற்கொள்ளப்பட்டு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்வுக்கான அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கல்வித்துறை இணை இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் உள்பட அலு வலர்கள் உடனிருந்தனர்.

    • வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர்.
    • 2 சிறுவர்கள் பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 3 நாட்களாக காலையில் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. மாலையில் சூட்டை கிளப்பி வருகிறது. மேலும் இரவில் குளிர் என சீதோஷண நிலை மாறி மாறி காணப்படுகிறது.

    பூமி வெப்பத்தை அதிகளவு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதி களுக்குள் படையெ டுத்து வருகிறது. பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் கடித்து நாள்தோறும் பலர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர். இதில் குட்டியபட்டி முகேஷ் குமார் (14), மேட்டுப்பட்டி சேர்ந்த உதயகுமார் (16) ஆகியோர் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கா க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • குளத்துப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி பிரிவு வரை சாலை குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
    • குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டும், விபத்தில் சிக்கியும் வருகிறது.

    நிலக்கோட்டை:

    நிலக்கோட்டை அருகே நூத்துலாபுரம் ஊராட்சியில் குளத்துப்பட்டி, சீத்தாபுரம், வடக்கு விராலிப்பட்டி, தெற்கு விராலிப்பட்டி, எஸ்.தும்ம லப்பட்டி, சேவுகம்பட்டி, சென்ன மாநாயக்கன ்கோட்டை, தம்பிநாயக்க ன்பட்டி, என். ஊத்துப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொது மக்கள், பள்ளி மாணவ- மாணவிகள், விவசாயிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் குளத்து ப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி பிரிவு வரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சி யளிப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும் வாகனங்கள் ஆங்காங்கே பழுது ஏற்பட்டும், விபத்தில் சிக்கியும் வருகிறது. எனவே குளத்துப்பட்டி பிரிவிலிருந்து வடக்கு விராலிப்பட்டி வரை சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை மிக அகலமாக இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது.
    • மேலும் மாணவ- மாணவிகள் பிரதான சாலையை கடக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது. கொடைக்கானல் முதல் வத்தலக்குண்டு வரை அவ்வப்போது சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும்.விரிவாக்கம் செய்யப்பட்ட இடங்களில் உடனடியாக ஆக்கிரமிப்பாளர்கள் கடைகளை அமைத்து போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.

    வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் கொடைக்கானல் ஏரிச்சாலை வரை லாஸ்காட் ரோடு என்று அழைக்கப்படும் பகுதிகளில் பிரதான நெடுஞ்சாலைகளில் சாலைகளின் இரு பகுதிகளிலும் ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் கனரக வாகனங்களை நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை நெடுஞ்சாலை துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தேவையான இடங்களில் சாலை தடுப்புகளை வைக்காமல் இட நெருக்கடி உள்ள சாலைகளில் சாலை தடுப்புகளை வைக்கின்றனர். குறிப்பாக மூஞ்சிக்கல் பஸ் நிறுத்த பகுதியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை மிக அகலமாக இருந்தும் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. இப்பகுதி உணவகங்கள், சாலையோர கடைகள், அங்கு நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மாணவ- மாணவிகள் பிரதான சாலையை கடக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

    இதே பகுதியில் தான் நெடுஞ்சாலை துறை அலுவலகம் உள்ளது. இதனை நேரடியாக கண்டும் காணாதது போல் கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறை செயல்பட்டு வருகிறது. பல வருடங்களாக மூஞ்சிக்கல் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் இன்றுவரை நடவடிக்கை இல்லை. இதனால் கனரக வாகனங்களை பிரதான சாலையில் நிறுத்துகின்றனர்.

    இதன் காரணமாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்கள் கூட செல்லமுடியவில்ைல. எனவே சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×