என் மலர்
திண்டுக்கல்
- ஒருதலைப்பட்சமாக முறைகேடாக ரூ.65 லட்சத்திற்கு ஏலம் விட ப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
- நகராட்சிக்கு ரூ.1.15 கோடி இழப்பு ஏற்படுத்தி கமிஷனர் ஒருதலைப்பட்சமாக ஏலம் விட்டுள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் தலை மையில் மாட்டு சந்தையை மறு ஏலம் விட வேண்டும் என்று தெரிவித்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் மாட்டு சந்தை நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வரும் இந்த சந்தையில் கரூர், திண்டுக்கல், தாராபுரம், திருப்பூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பசு, எருமை, வளர்ப்பு மாடு, வெட்டு மாடுகள் விற்பனை க்கு கொண்டு வரப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்று வருகின்ற னர்.
இந்நிலையில் கடந்த மாதம் 7ம் தேதி மாட்டு சந்தை ஏலம் ஒட்டன்சத்திரம் நகராட்சியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக திண்டுக்கல்லை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ரவி, சுரேஷ், ராஜா, ஆயக்குடி முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்ள வந்தனர். அப்போது ஏலம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்து அவர்களது டி.டி யை வாங்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் மறுநாள் 8ம் தேதி மாட்டுச் சந்தை ஏலம் ரகசியமாக நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர் மீனா தலைமையில் நடந்தது. இதில் ஒருதலைப்பட்சமாக, முறைகேடாக ரூ. 65 லட்சத்திற்கு ஏலம் விட ப்பட்டதாக ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெரிய கோட்டை ஒப்பந்ததாரர் ராஜா கூறுகையில், கடந்த 2021 இல் நடந்த மாட்டு ச்சந்தையை கள்ளிமந்த யத்தைச் சேர்ந்த அங்குச் சாமி 2022-2023 ஆண்டுக்கு ரூ.1.81 கோடிக்கு ஏலம் எடுத்தார். இந்நிலையில் இந்தாண்டு 2023 - 2024 ம் ஆண்டு ஏலத்தில் ரூ. 65 லட்சத்திற்கு ஒத்தையூரைச் சேர்ந்த முத்துக்கண்ணு ஏலம் எடுத்துள்ளார். இது நகராட்சிக்கு ரூ.1.15 கோடி இழப்பு ஏற்படுத்தி கமிஷனர் ஒருதலைப்பட்சமாக ஏலம் விட்டுள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் தலை மையில் மாட்டு சந்தையை மறு ஏலம் விட வேண்டும் என்று தெரிவித்தார்.
- பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது.
- ஜோதி வேலுக்கு யாரேனும் விரோதிகள் உள்ளார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோதி வேல் (வயது 65). மில் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் கணவன்-மனைவி மட்டும் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று இரவு வேலை முடித்து ஜோதிவேல் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார்.
நள்ளிரவில் இவரது வீட்டின் முன்பு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் ஜோதிவேல் மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அவரது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. அதன் அருகே கண்ணாடி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன.
பாட்டிலுக்குள் பெட்ரோலை நிரப்பி அதில் தீ வைத்து வீட்டின் மீது மர்ம நபர்கள் வீசிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் முன்பு சிதறிக்கிடந்த பாட்டில் துகள்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. கேமராக்கள் உள்ளதா? என்றும் அதில் மர்ம நபர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜோதி வேலுக்கு யாரேனும் விரோதிகள் உள்ளார்களா? என்றும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இந்த சேலை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தனித்தன்மையுடன் இருப்பதால் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
- ரசாயன கலவையின்றி இந்த சுங்குடி சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விரும்பும் தன்னிகரில்லா சேலையாக இவ்வகை சேலைகள் விளங்கி வருகிறது.
திண்டுக்கல்:
இந்தியாவின் தனித்துவ மான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது சுங்குடி சேலை. இந்த சேலைகளைப் பற்றி வந்த கவிதைகளும், சினிமா பாடல்களும் வெகுபிரபலம். சுங்குடிச் சேலை ஏன் பிரபலமானது என்பதற்கு அதன் தனித்தன்மையே காரணமாக இருக்கிறது.
சுங்குடிச் சேலைக்கு தற்போது வயது 300. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இந்த சேலை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தனித்தன்மையுடன் இருப்பதால் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
முன்னொரு காலத்தில் வயதான பெண்கள் மட்டுமே அணிந்து வந்த இந்த சேலை தற்போது நவநாகரீக பெண்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வரு கிறது. முற்றிலும் காட்டன் நூல்களைக் கொண்டு பாலியஸ்டர், சிந்தடிக் நூல்கள் கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படு வது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும். இந்த சேலை தமிழகத்தின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றி வருகிறது.
நல்ல அடர்த்தியான மாறுபட்ட வண்ணங்களின் கலவையாக தயாரிக்கப்படும் இச்சேலைகள் கட்டம் போட்டது என்பது மாறி கோடுகள், பெரிய கட்டம், பூக்கள் கொண்ட நடுப்பகுதி யுடன் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு உருவாக்க ப்பட்டும் வருகிறது.
இந்த சுங்குடிச் சேலையின் சிறப்பே 2 பக்க பெரிய பார்டர்கள் தான். அதனை 'சுங்குடி பார்டர்' என்றழைப்பர். கெண்டக் கால் பகுதியில் பளபளப்பு சரிகை பார்டர் தனிஅழகை ஏற்படுத்தும்.
புவிசார் குறியீடு பெற்ற சுங்குடிச் சேலைக்கு அப்படி என்ன 'ஸ்பெஷல்'?
ரசாயன கலவையின்றி இந்த சுங்குடி சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விரும்பும் தன்னிகரில்லா சேலையாக இவ்வகை சேலைகள் விளங்கி வருகிறது.
இந்த சேலையின் முக்கிய சிறப்பு அதன் பார்டர்களைப் போல வண்ணங்களும், வடிவமைக்கப்பட்ட டிசைன்களும்தான். பட்டா ம்பூச்சி, அன்னப்பறவை, வைரம், செடி, கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், தாமரைப்பூ, யானை, மயில் என ஏகப்பட்ட ஓவியங்கள் கண்டாங்கி சேலைகளில் அணிவகுத்து வரும்.
1000 ரூபாயில் தொடங்கி இவை விற்பனை செய்யப்படு கின்றன. தற்போது திரைநட்சத்திரங்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் வரை இந்த சேலைகளை அணியத் தொடங்கியுள்ளனர். சேலை அணிந்தாலே கம்பீரம். அதிலும் நம் பாரம்பரியமிக்க சேலையை அணியும் போது பெண்களுக்கு கூடுதல் அழகு கிடைத்து விடும்.
நயன்தாரா முதல் நாற்றுநடும் கிராமத்து மூதா ட்டிவரை இந்த சேலையை கட்டிக்கொண்டால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதிலும், பச்சை, நீலம், பிரவுன், மாம்பழ மஞ்சள், சிகப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்க ளில் அகலமான சரிகை பார்டர் வைத்த இந்த புடவைகள் எல்லா காலத்தி ற்கும் ஏற்றவை. தற்போது தீபாவளி பண்டிகைக்காக விதவிதமான வண்ண ங்களில் பலவித மாடல்களில் புடவைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர இது போன்ற புடவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கி ன்றனர்.
- பஸ் வந்த போது சில வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அறைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.
- புகாரின்பேரில் போலீசார் 10 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு :
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி நேற்று இரவு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ்சை விராலிப்ப ட்டியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் ஓட்டி வந்தார். பண்ணைப்பட்டி பிரிவு அருகே பஸ் வந்த போது சில வாலிபர்கள் பஸ்சை வழி மறித்து அறைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டனர்.
டிரைவர் மற்றும் கண்டக்டர் கீழே இறங்கி அவர்களை தட்டிக் கேட்ட போது தரக்குறைவான வார்த்தைகளால் பேசிய துடன் பஸ்சையும் அடித்து தாக்கினர். அதன் பிறகு பயணிகள் சத்தம் போடவே அங்கிருந்து சென்று விட்டனர்.
அதன் பிறகு அய்யப்ப னின் உறவினர்கள் அங்கு வந்து விசாரித்தபோது அவர்களையும் போதை வாலிபர்கள் தரக்குறைவாக திட்டியுள்ளனர். போதை வாலிபர்கள் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கப்ப ட்டுள்ளனர்.
இது குறித்து வத்த லக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. முருகன் தலைமை யில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போதையில் தகராறில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
- 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.
- கோவை மற்றும் கேரளாவில் இருந்து 8 கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் வசித்து வருபவர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டையில் கல்லூரிகளை வைத்து நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்டேட், மணல் குவாரிகள் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இவரது வீட்டின் அருகிலேயே தரணி குழும அலுவலகமும் உள்ளது.
இந்த அலுவலகத்திற்கு இன்று காலையில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்டோர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழையாதபடி சி.ஆர்.பி.எஃப் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இவரது முதல் மகன் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரியை நிர்வகித்து வருகிறார். 2-வது மகன் திண்டுக்கல் மாநகராட்சியின் தி.மு.க கவுன்சிலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சேகர் ரெட்டியின் தொடர்பில் இருந்து அதிகளவு பணத்தை முறைகேடாக மாற்றியதாக புகார் எழுந்தது. அப்போது இவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ரத்தினத்தை கைது செய்தனர். அதன் பின்பு தற்போது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மணல் குவாரிகள் வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக போலீசார் தெரிவித்தனர்.
தொழிலதிபர் ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன். இவர் என்.ஜி.ஓ.காலனி அருகே ஹனிபா நகரில் வசித்து வருகிறார். இவர் பெட்ரோல் பங்க், மணல் குவாரி, நிதி நிறுவனம் மற்றும் ரியல்எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். இவரது வீட்டிலும் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. திண்டுக்கல்லில் இன்று ஒரே நேரத்தில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை மற்றும் கேரளாவில் இருந்து 8 கார்களில் வந்த அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டுக்கல்லில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- தொழிலாளி திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் காமராஜ் மகன் மோகன் (வயது32). கூலித்தொழிலாளி.
இவர் அடிக்கடி வீட்டில் திருமணம் செய்து வைக்க கோரி சண்டையிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருமணமாகாததால் விரக்தியில் இருந்த மோகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- ஒட்டன்சத்திரம் உயர் அழுத்த மின் பாதை மற்றும் சிந்தலவாடம்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
வேடசந்தூர் துணைமின் நிலையத்தில் இருந்து செல்லும் ஒட்டன்சத்திரம் உயர்அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே சேனான்கோட்டை, ஒட்டநாகம்பட்டி, கோடாங்கி ப்பட்டி, பெரியபட்டி, பூவாய்பாளையம், முருநெல்லிக்கோட்டை, நவாலூத்து, சுள்ளெறும்பு, நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், ராமகவுண்டன்பட்டி, நவாமரத்துப்பட்டி, திப்பம்பட்டி, கேதையறும்பு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறி யாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதே போல் பழனி அருேக உள்ள சிந்தலவாட ம்பட்டி துணைமின் நிலை யத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிந்தல வாடம்பட்டி, சத்திரப்பட்டி, கணக்கன்ப ட்டி, பச்சல நாயக்கன்பட்டி, கோம்பை பட்டி, எரமநாய க்கன்பட்டி, போடுவார்ப ட்டி, வீரலப்பட்டி, ராம பட்டிணம்புதூர் ஆகிய பகுதிகளில் மின் வினி யோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நிலத்தகராறில் தொழிலாளியை உறவினர்கள் 2 பேர் கடுமையாக தாக்கினர்.
- படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள மோர்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லு (வயது 44). இவர் கூலி வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் இவரது தாய்மாமன் பாலா என்ற முருகையா (53). இவர்களுக்கு இடையே கடந்த சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு முருகையா மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் மாரியப்பன் (51) ஆகியோர் நல்லுவிடம் நிலம் தொடர்பாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆத்திர மடைந்த இருவரும் சேர்ந்து நல்லுவை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் நல்லுவிற்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நல்லுவின் மனைவி கருப்பாத்தாள் கணவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நல்லு உயிரிழந்தார். இதையடுத்து கருப்பாத்தாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வடமதுரை எஸ்.ஐ. அங்கமுத்து வழக்கு பதிவு செய்து முருகையா மற்றும் மாரியப்பன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று தனது நடைபயணத்தை தொடங்குகிறார்.
- 16-ந்தேதி பழனியில் நடைபயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
திண்டுக்கல்:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் நடைபயணம் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளாக சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் இன்று தனது நடைபயணத்தை தொடங்குகிறார். நாயுடுபுரத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக அவர் தனது பிரசாரத்தை இன்று மாலை மேற்கொள்கிறார். அதனைதொடர்ந்து நாளை மதியம் நிலக்கோட்டையிலும், மாலை ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளபட்டியிலும் நடைபயணம் மேற்கொண்டு பேசுகிறார்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை மதியம் நத்தத்திலும், மாலை திண்டுக்கல்லிலும் நடைபயணம் மேற்கொண்டு 2 இடங்களில் நடைபெறும் கூட்டங்களிலும் அண்ணாமலை பேசுகிறார். வருகிற 15-ந்தேதி மதியம் வேடசந்தூரிலும், மாலை ஒட்டன்சத்திரத்திலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை அங்கு நடைபெறும் கூட்டங்களிலும் பேசுகிறார்.
16-ந்தேதி பழனியில் நடைபயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 5 நாட்கள் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு 7 தொகுதிகளிலும் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்று பேசுகிறார்.
இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
- காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
வடமதுரை:
வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியை சேர்ந்தவர் அனுசியா(22). பி.எஸ்.சி பட்டதாரி. இவர் காசிபாளையம் பகுதியை சேர்ந்த அபிஷேக்(22) என்பவரை கடந்த சில மாதங்களாக காதலித்து வந்தார். என்ஜினீயரிங் படித்து வந்த அபிஷேக் தங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து விடுவார்களோ என்று அச்சம் அடைந்தார்.
இதனால் காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். மணகோலத்தில் வேடசந்தூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வடமதுரை அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.எஸ்.பி உத்தரவிட்டார்.
போலீசார் இருவரது பெற்றோரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்கள் மேஜர் என்பதால் சேர்ந்து வாழ எவ்வித இடையூறும் செய்ய வேண்டாம் என எழுதி வாங்கி கொண்டு மணமக்களை அனுப்பி வைத்தனர்.
மற்றொரு ஜோடி
இதேபோல் வடமதுரை அருகே உள்ள செங்குளத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார்(23). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் செங்குளத்துப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி(18) என்ற கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விபரம் பெண் வீட்டாருக்கு தெரியவரவே அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி வீட்டைவிட்டு வெளியேறி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் விருப்பம் போல் வாழ பெற்றோருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
- திண்டுக்கல் அருகே ஒரு மூதாட்டி இன்று தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புடை சூழ கேக் வெட்டி கொண்டாடிய அதிசய நிகழ்வு நடைபெற்றது.
- அவரது மகன் தெரிவிக்கையில், எங்கள் தலைமுறையில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அம்மா மட்டுமே.
குள்ளனம்பட்டி:
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. இன்றைய நவீன உலகில் 60 வயதை கடந்து வாழ்ந்தாலே மிகப்பெரிய ஆச்சரியமான செயலாக உள்ளது. அதிலும் நோயற்ற முறையில் 100 வயது வாழ்வது என்பது எல்லோருக்கும் கிடைக்காது.
திண்டுக்கல் அருகே ஒரு மூதாட்டி இன்று தனது 100வது பிறந்தநாளை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புடை சூழ கேக் வெட்டி கொண்டாடிய அதிசய நிகழ்வு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள வேம்பார்பட்டி சந்தனமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டி மனைவி சின்னம்மாள் என்பவர்தான் இன்று தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகள்கள், மகன் மூலம் பேரன்கள், கொள்ளுப்பேரன்கள், பேத்திகள், கொள்ளுப் பேத்திகள் என 50க்கும் மேற்பட்டோருடன் இன்று சின்னம்மாள் தனது 100 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
இது குறித்து சின்னம்மாளின் மகன் தெரிவிக்கையில், எங்கள் தலைமுறையில் 100 வயது வரை வாழ்ந்து கொண்டு இருப்பவர் எங்கள் அம்மா மட்டுமே. அவர் இன்னும் அவரது வேலையை தானாகவே செய்து கொள்கிறார். யாருடைய உதவியும் அவருக்கு தேவை இல்லை. இது தவிர வீட்டு வேலைகளையும் அவர் களைப்பின்றி செய்வதுடன் தோட்ட வேலைகளையும் செய்வார்.
அவரது காலத்தில் கம்பு, சோளம் உள்ளிட்ட உணவுகளையே அதிகம் சாப்பிட்டதாகவும் அதனால்தான் தனக்கு அதிக சக்தி உள்ளதாகவும் அடிக்கடி கூறுவார். மேலும் காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்.
கண்ணாடி அணியாமலேயே அனைத்து வேலைகளையும் செய்வார். அவர் வயது வரை எங்களால் இது போல ஆரோக்கியமாக இருக்க முடியுமா என்பது கேள்விக்குறி. மேலும் அவர் எந்த நோய்க்கும் ஆஸ்பத்திரிக்கு சென்று வைத்தியம் பார்த்தது கிடையாது. கசாயம் வைத்து தனது நோய்க்கு மருந்து சாப்பிட்டுக் கொள்வார். அதனையே எங்களையும் சாப்பிடுமாறு அறிவுறுத்துவார்.
கொரோனா காலக்கட்டத்தில் இப்பகுதியைச் சேர்ந்த பலருக்கு நோய் தொற்று அறிகுறி ஏற்பட்டது. அப்போது கூட எங்கள் அம்மா அனைத்து வேலைகளையும் சர்வசாதாரணமாக செய்து திடகாத்திரத்துடன் இருந்தார்.
தற்போது அவரது பிறந்தநாளை எங்கள் குடும்பத்தில் உள்ள 55 பேரும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறோம் என்றார்.
- இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரீஸ்வரர் கோவிலில் இன்று இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 8 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. திருமணத்தை நடத்தி வைத்த அமைச்சர் இ.பெரியசாமி பேசியதாவது:-
தமிழக முதல்-அமை ச்சரின் உத்தரவின்படி பொருளா தாரத்தில் பின்தங்கிய ஏழை, எளிய மக்களின் ஜோடிகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி உட்பட ரூ.50,000 மதிப்பில் சீர் வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வரு கிறது.
கடந்த ஆண்டு 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. தற்போது கூடுதலாக மேலும் 100 ஜோடிகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 ஜோடிகள் வீதம் 600 ஜோடிகளுக்கு திருக்கோயி ல்கள் சார்பாக திருமண விழா நடத்தப்படு கிறது.
அதன்படி திருமணத்திற்கு தேவையான 4 கிராமில் திருமாங்கல்யம், மணமகன் ஆடை ரூ.1000, மணகள் ஆடை ரூ.2000, திருமண த்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000, மாலை, புஷ்பம் ரூ.1000, பீரோ ரூ.7800, கட்டில் ரூ.7500, மெத்தை ரூ.2200, இரண்டு தலையணை ரூ.190, ஒரு பாய் ரூ.180, இரண்டு கைக்கடிகாரம் ரூ.1000, ஒரு மிக்சி ரூ.1490, பூஜை பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் ரூ.3640 என மொத்தம் ரூ.30,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் மற்றும் 4 கிராம் தங்கம் ஆகியவை வழங்க ப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் முதற்கட்டமாக திண்டுக்கல் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஜோடிகளுக்கும், தேனி மாவட்டத்தில் 5 ஜோடிகளுக்கும் என மொத்தம் 7 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தற்போது 2-ம் கட்டமாக திண்டுக்கல்அபிராமி அம்மன் கோவிலில் 8 ஜோடிகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நடப்பு ஆண்டில் இதுவரை திண்டுக்கல் இணை ஆணையர் மண்ட லத்தில் மொத்தம் 22 ஜோடி களுக்கு திருக்கோயில்களின் சார்பில் இலவச திருமணம் நடத்தப்ப ட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிகளில், மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையாளர் சுரேஷ், செயல் அலுவலர்கள் வேலுச்சாமி, முருகன், பாலசரவணன், ராமநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






