என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chungudi sarees"

    • திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இந்த சேலை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தனித்தன்மையுடன் இருப்பதால் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
    • ரசாயன கலவையின்றி இந்த சுங்குடி சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விரும்பும் தன்னிகரில்லா சேலையாக இவ்வகை சேலைகள் விளங்கி வருகிறது.

    திண்டுக்கல்:

    இந்தியாவின் தனித்துவ மான அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது சுங்குடி சேலை. இந்த சேலைகளைப் பற்றி வந்த கவிதைகளும், சினிமா பாடல்களும் வெகுபிரபலம். சுங்குடிச் சேலை ஏன் பிரபலமானது என்பதற்கு அதன் தனித்தன்மையே காரணமாக இருக்கிறது.

    சுங்குடிச் சேலைக்கு தற்போது வயது 300. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை பிறப்பிடமாகக் கொண்ட இந்த சேலை இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு தனித்தன்மையுடன் இருப்பதால் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

    முன்னொரு காலத்தில் வயதான பெண்கள் மட்டுமே அணிந்து வந்த இந்த சேலை தற்போது நவநாகரீக பெண்களையும் கவர்ந்து இழுக்கும் வகையில் தயார் செய்யப்பட்டு வரு கிறது. முற்றிலும் காட்டன் நூல்களைக் கொண்டு பாலியஸ்டர், சிந்தடிக் நூல்கள் கலப்படம் இல்லாமல் தயாரிக்கப்படு வது இதன் மற்றொரு தனிச் சிறப்பாகும். இந்த சேலை தமிழகத்தின் பாரம்பரிய பெருமையை பறைசாற்றி வருகிறது.

    நல்ல அடர்த்தியான மாறுபட்ட வண்ணங்களின் கலவையாக தயாரிக்கப்படும் இச்சேலைகள் கட்டம் போட்டது என்பது மாறி கோடுகள், பெரிய கட்டம், பூக்கள் கொண்ட நடுப்பகுதி யுடன் நவீன யுகத்திற்கு ஏற்றவாறு உருவாக்க ப்பட்டும் வருகிறது.

    இந்த சுங்குடிச் சேலையின் சிறப்பே 2 பக்க பெரிய பார்டர்கள் தான். அதனை 'சுங்குடி பார்டர்' என்றழைப்பர். கெண்டக் கால் பகுதியில் பளபளப்பு சரிகை பார்டர் தனிஅழகை ஏற்படுத்தும்.

    புவிசார் குறியீடு பெற்ற சுங்குடிச் சேலைக்கு அப்படி என்ன 'ஸ்பெஷல்'?

    ரசாயன கலவையின்றி இந்த சுங்குடி சேலைகள் நெய்யப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் நம் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் விரும்பும் தன்னிகரில்லா சேலையாக இவ்வகை சேலைகள் விளங்கி வருகிறது.

    இந்த சேலையின் முக்கிய சிறப்பு அதன் பார்டர்களைப் போல வண்ணங்களும், வடிவமைக்கப்பட்ட டிசைன்களும்தான். பட்டா ம்பூச்சி, அன்னப்பறவை, வைரம், செடி, கொடி, இலை, ருத்ராட்சம், கோபுரம், தாமரைப்பூ, யானை, மயில் என ஏகப்பட்ட ஓவியங்கள் கண்டாங்கி சேலைகளில் அணிவகுத்து வரும்.

    1000 ரூபாயில் தொடங்கி இவை விற்பனை செய்யப்படு கின்றன. தற்போது திரைநட்சத்திரங்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்லும் பெண்கள் வரை இந்த சேலைகளை அணியத் தொடங்கியுள்ளனர். சேலை அணிந்தாலே கம்பீரம். அதிலும் நம் பாரம்பரியமிக்க சேலையை அணியும் போது பெண்களுக்கு கூடுதல் அழகு கிடைத்து விடும்.

    நயன்தாரா முதல் நாற்றுநடும் கிராமத்து மூதா ட்டிவரை இந்த சேலையை கட்டிக்கொண்டால் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அதிலும், பச்சை, நீலம், பிரவுன், மாம்பழ மஞ்சள், சிகப்பு போன்ற அடர்த்தியான வண்ணங்க ளில் அகலமான சரிகை பார்டர் வைத்த இந்த புடவைகள் எல்லா காலத்தி ற்கும் ஏற்றவை. தற்போது தீபாவளி பண்டிகைக்காக விதவிதமான வண்ண ங்களில் பலவித மாடல்களில் புடவைகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் உயர இது போன்ற புடவைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கி ன்றனர்.

    ×