என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது.
    • மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

    நத்தம்:

    நத்தம் பஸ் நிலைய ரவுண்டானா முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தாலுகா செயலாளர் வெள்ளை ச்சாமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விலை வாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்ட ங்களை கண்டு கொள்ளாத மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பபட்டது.

    இதில் தாலுகா துணை செயலாளர் தவநூதன், தாலுகா குழு உறுப்பினர்கள் பொன்னு ச்சாமி, பழனியம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 55 பேரை நத்தம் போலீசார் கைது செய்தனர்.

    • 8 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை விற்பனை முறைப்படுத்த ப்பட்டுள்ளது.
    • திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    வேளாண் விளை பொருள் விற்பனை சட்டம் 1987 ன் படி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், கோபால்பட்டி, நத்தம், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், பழனி, வடமதுரை மற்றும் வேட சந்தூர் ஆகிய 8 ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்க ளில் அறிக்கையிடப்பட்ட அங்காடிப்பகுதிகளில் கண்வலிக்கிழங்கு விதை விற்பனை முறைப்படுத்த ப்பட்டுள்ளது.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் கண்வலி கிழங்கு விதை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் அறிக்கையிடப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை க்கூடங்களில் ஒருங்கி ணைந்த ஒற்றை உரிமம் பெற்று கண்வலி கிழங்கு விதை விளை பொருளினை கொள்முதல் செய்திட வேண்டும். விவசாயிகள் கண்வலி கிழங்கு விதை விளைபொருளினை ஒழுங்குமுறை விற்பனை க்கூடங்களில் செயல்பட்டு வரும் தேசிய மின்னணு வேளாண் சந்தை திட்டத்தின் மூலம் விற்பனை செய்திட ஏதுவாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தங்களது விவரங்களை பதிவு செய்திட வேண்டும்.

    எனவே, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.
    • பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்குனியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்ச த்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், அரசு மருத்துவ மனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் பருவகால நோய்கள் பரவுவதை தடுக்கும் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெ ச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கலெக்டர் பூங்கொடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்த தாவது:- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் போதுமான அளவு பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமி நாசினிகள் இருப்பில் வைத்திருக்க வேண்டும். அவைகளை முறையாக பயன்படுத்திட வேண்டும். அனைத்து மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ங்களில் தேவையான அளவு மருந்துகள் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.

    பொதுமக்கள் தாங்கள் வாழும் பகுதிகளில் கொசுப்புழு, முதிரி கொசு அழிக்கும் பணிகளுக்கு வருகை தரும் பணியாளர்க ளுக்கு முழு ஒத்துழைப்பு தர சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பொதுமக்களுக்கு தெரி விக்க வேண்டும். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பற்றியும் அவற்றின் தடுப்பு நடவடிக்கைள் குறித்தும் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து தூய்மைப் பணியாளர்களையும், கொசுப்புழு தடுப்புப் பணியாளர்களையும் ஒருங்கிணைத்து அனைத்து மேல்நிலை மற்றும் தரைநிலை தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் கொண்டு தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்புகள் பருவ மழைக்கு முன்னதாக அப்பகுதிகளிலுள்ள அனைத்து அரசு பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் மூன்று நாட்களுக்குள் முழுமையான தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையின் மூலம் காய்ச்சல் தொடர்பான கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வும், காய்ச்சல் மற்றும் டெங்கு பாதித்த பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அப்பகுதிகளில் காய்ச்சல் தொடர்பான சிறப்பு முகா ம்கள் நடத்திட வேண்டும்.

    அனைத்து அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் பயிலும் மாணவ, மாணவி களுக்கு கொசு ப்புழு, முதிர் கொசு பற்றியும், பள்ளி மற்றும் கல்லூரி வளாக ங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் சுகாதார மான முறையில் வைத்துக் கொள்ள விழிப்பு ணர்வு அளித்திட வேண்டும்.

    பொதுமக்கள் டெங்கு, மலேரியா மற்றும் சிக்கன்கு னியா போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும்பட்ச த்தில் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், அரசு மருத்துவ மனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், சுயமாக மருந்து உட்கொள்ளுதல் மருத்துவர்கள் ஆலோசனை யின்றி மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்த வேண்டும் என்று கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்சுகந்தி ராஜகுமாரி, மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் 37 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர்.
    • மகளிர் உரிமைத்தொகை ரூ.2 கோடியே 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு பெருமை பேசி கொள்கின்றனர்.

    நிலக்கோட்டை:

    என் மண், என் மக்கள் பிரசார பயணத்தில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். நிலக்கோட்டையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    தமிழகத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறேன். தென்தமிழகம் வளர்ச்சியில் பின்தங்கி உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பிற்கு எந்த திட்டத்தையும் அரசு ஏற்படுத்தவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. நிலக்கோட்டை மல்லிகை பூக்கள்தான் உலகம் முழுவதும் மதுரை மல்லி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

    தமிழகத்தில் 37 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் 11 பேர் ஊழல் வழக்கில் சிக்கி உள்ளனர். நிலக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் மது அருந்தி மாணவிகள் பிறந்தநாள் கொண்டாடியதாக நாளிதழ் மூலம் அறிந்தேன். மேலும் பல்லடம் பகுதியில் குடிபோதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை கும்பல் வெட்டி கொலை செய்தது. தமிழகத்தில் மதுவால் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

    ஆனால் தி.மு.க. அரசு இதைப்பற்றி கவலைப்படவில்லை. பெரும்பாலான மதுஆலைகள் தி.மு.க. பிரமுகர்களின் ஆலைகளாக உள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளை மூட தி.மு.க. நடவடிக்கை எடுக்காது. மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

    மகளிர் உரிமைத்தொகை ரூ.2 கோடியே 25 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு வழங்குவதாக கூறிவிட்டு 1 கோடியே 6 லட்சம் பேருக்கு மட்டுமே வழங்கிவிட்டு பெருமை பேசி கொள்கின்றனர். 10 சதவீத தேர்தல் வாக்குறுதியை கூட நிறைவேற்றாத தி.மு.க. அரசு 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    மோடி பிரதமராவதற்கு முன்பு நாடு பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்தது. தற்போது உலக நாடுகள் மெச்சும் அளவிற்கு சந்திராயன் 3 மூலம் நிலாவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். பிரதமர் மோடி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையால் இந்தியா வளர்ந்து வருகிறது. ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது. எனவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார்.

    உச்சநீதிமன்றம் நோக்கி கர்நாடகம் செல்கிறது. தமிழகத்தின் வாதங்கள், விவசாயிகளின் கஷ்டத்தை உச்சநீதிமன்றம் புரிந்துகொள்ளும். காவிரி நீர் வழக்கில் தமிழகத்திற்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும். இதில் காங்கிரஸ் அரசியல் செய்கிறது. கர்நாடகா துணைமுதல்வர் சிவக்குமார் காவிரி நீர் தரமாட்டேன் என பேசி வருகிறார். மேகதாது அணை கட்ட குறியாக இருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் விவசாயிகளுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பளிக்கும்.

    இதை வைத்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். போதிய அளவு பாதுகாப்பு இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் ஒரு எப்.ஐ.ஆர்.கூட போடவில்லை. கைது நடவடிக்கை இல்லை. ஏ.ஆர்.ரகுமான் அவரது பணியை சரியாக செய்துள்ளார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம் சரியாக செயல்படவில்லை. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர்.
    • இதற்காக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    திண்டுக்கல்:

    நாடு முழுவதும் வருகின்ற 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பொது இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்த உள்ளனர். இதற்காக பல்வேறு இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    தாமரை விநாயகர், சிவன் விநாயகர், அன்ன விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத சிலைகள் தயார் செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலின் படி குறிப்பிட்ட இடங்களில் வைத்து வழிபாட்டுக்கு பின் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் நகர் பகுதியில் பொது இடங்களில் 60 சிலைகள் வைக்க இந்து அமைப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சிவசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, இந்து தர்ம சக்தி உள்ளிட்ட அமைப்பினர் சார்பிலும் விநாயகர் சதுர்த்தி அன்று பொது இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளது.

    அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் வைக்க வேண்டும் என போலீசார் தெரிவி த்திருப்பதால் சிலைகள் வைத்தற்கான இடங்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது.

    • வே.குரும்பபட்டி துணைமின்நிலையத்தில் நாளை(14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.
    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    வே.குரும்பபட்டி துணைமின்நிலையத்தில் நாளை(14-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறஉள்ளது.

    இதனால் கோபால்பட்டி, அஞ்சுகுழிபட்டி, மணியகாரன்பட்டி, சில்வார்பட்டி, மருனூத்து, சாணார்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, மேட்டுக்கடை, மேட்டுப்பட்டி, ஆவிளிபட்டி, ஒத்தக்கடை, ராமராஜ்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பாரதிபுரம் பாண்டி கோவில் அருகே செங்குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.கைப்பற்றப்பட்ட உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி வழக்குப்பதிவு செய்து முதியவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
    • கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.

    நத்தம்:

    நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வேலுச்சாமி எம்.பி. கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் தாசில்தார் ராமையா, யூனியன் ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் ராஜகோபால், கவுன்சிலர்கள் இஸ்மாயில், பாக்கியலட்சுமி சிவஞானம், மாவட்ட பிரதிநிதிகள் குடகிப்பட்டி அழகர்சாமி, சிறுகுடி சேக்சிக்கந்தர், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் மணி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நத்தம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அய்யாபட்டி வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதைப்போலவே துவராபதி, சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டி, குட்டுப்பட்டி-பெரிய மலையூர், சேத்தூர்-சின்னமுளையூர் பகுதிகளிலும் புதிய ரேசன் கடைகள் திறக்கபட்டது. முன்னதாக கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.

    • குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1000-க்கு விற்பனை செய்து வருகிறது.
    • பணத்தை எண்ணுவதற்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் நீர்வளத்துறையின் சார்பில் 15 ஆற்றுமணல் குவாரிகள் செயல்படுகின்றன. இதில் 12 மணல்குவாரிகள் மட்டும் முழுமையாக செயல்பட்டு வருகின்றன. நீர்வளத்துறையின் பிரத்யேகமான இணையதளத்தில் (டி.என்.சாண்ட்) பதிவு செய்து பணத்தை செலுத்தி ரசீது பெற்று அதன்மூலம் சம்பந்தப்பட்ட குவாரிகளில் மணலை பெற வேண்டும் என்பது விதிமுறையாகும்.

    இந்த குவாரிகளில் அரசு ஒரு யூனிட் மணல் ரூ.1000-க்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால் குவாரிக்குள் லாரி செல்ல முடியாது என்பதால் அங்குள்ள யார்டுக்கு மணல் கொண்டுவரப்பட்டு அங்கு லாரிகளில் ஏற்றப்படுகிறது.

    இதற்காக கூடுதல் கட்டணமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.650 வரை பெறப்படுவதாக புகார் எழுந்தது. சாதாரணமாக ஒரு லாரியில் 3 யூனிட் மணல் வரை மட்டுமே ஏற்றமுடியும் என்பதால் 3 யூனிட் மணல் யார்டில் ரூ.8000 வரை விற்கப்படுகிறது.

    யார்டில் மணலை இருப்பு வைத்து லாரியில் ஏற்றுவதற்கு தனியாருக்கு அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மணல் குவாரிகளில் இந்த ஒப்பந்த பணியை புதுக்கோட்டை மாவட்டம் முத்துபட்டிணத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ஜி.டி.என்.சாலையில் வசித்துவரும் தொழிலதிபர் ரத்தினம் ஆகியோர் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இணைய வழியில் அரசுக்கு பணம் செலுத்தப்பட்டு பெயரளவில் மட்டும் மணல் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் வந்தவண்ணம் இருந்தன. மேலும் பல குவாரிகளில் போலி ரசீதுகள் மூலமாகவும், ரசீதுகள் இல்லாமலும் மணல் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இதன்மூலம் அரசுக்கு ரூ. பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்பட்டது. பெரும்பாலான நாட்களில் தொழில்நுட்ப கோளாறு காரணங்களால் இணையதள சேவை செயல்படாமலே இருந்ததால் போலி ரசீதுகள் பெற்று அதிக விலை கொடுத்து மணல் வாங்க வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டனர்.

    இதனைதொடர்ந்து மணல் விற்பனையில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினத்திற்கு சொந்தமான வீடு, அலுவலகம், அவரது உறவினர் கோவிந்தனின் வீடு ஆகிய 3 இடங்களில் சென்னை, கோவை, கேரளாவில் இருந்து வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை 9 மணிமுதல் சோதனை மேற்கொண்டனர்.

    ரத்தினத்தின் அலுவலகத்தில் நேற்று மாலை சோதனை நிறைவடைந்தது. கோவிந்தனின் வீட்டில் இன்று அதிகாலை 5 மணியளவில் சோதனை நிறைவடைந்தது. ரத்தினத்தின் வீட்டில் தொடர்ந்து நள்ளிரவு வரை சோதனை நடைபெற்ற நிலையில் இன்று 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

    இதில் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பணத்தை எண்ணுவதற்கு எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு பணி நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சோதனைக்கு அதிகாரிகள் வந்தபோது ரத்தினம் வீட்டில் இல்லை. அவரது மனைவி செல்வி, முதல் மகன் துரைராஜ், அவரது மனைவி மற்றும் 2-வது மகன் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர்கள் அனைவரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    ரத்தினம் தற்போது வெளியூரில் இருப்பதாகவும், சோதனை குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். ரத்தினத்தின் 2-வது மகன் வெங்கடேஷ் திண்டுக்கல் மாநகராட்சி 17-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    நேற்று மாலை அப்பகுதி மக்கள் ஏராளமானோர் ரத்தினத்தின் வீட்டு முன்பு குவிந்தனர். நள்ளிரவை தாண்டியும் அவர்கள் அதே இடத்தில் இருந்ததால் போலீசார் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமலும், அமலாக்கத்துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இன்று காலையிலும் அப்பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்த முயன்றதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

    • தமிழகத்தில் தி.மு.க அமைச்சர்கள் மோடியை பார்த்து பயப்படுகின்றனர்.
    • என் மீதும், பா.ஜ.க. மீதும் குற்றச்சாட்டுகளை வாரி இரைக்கும் முதலமைச்சர் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும்.

    கொடைக்கானல்:

    தமிழகம் முழுவதும் என் மண், என் மக்கள் நடைபயணத்தை பா.ஜ.க.மாநிலத்தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் 5 நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள அவர் கொடைக்கானல் நாயுடுபுரம், சித்திவிநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கினார்.

    ஏரிச்சாலை, பஸ்நிலையம், அண்ணாசாலை வழியாக மூஞ்சிக்கல் பஸ்நிலையம் வரை நடந்து சென்றார். அப்போது அவர் பேசியதாவது,

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் ரூ.30ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். ஊழல்வாதிகளாக திகழும் தி.மு.க கமிசனுக்காக கடன் வாங்கும் அரசாக உள்ளது. ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசு விரட்டியடிக்கப்பட்டு தற்போது இந்தியா பாதுகாப்பான நாடாக திகழ்ந்து வருகிறது.

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எத்தனை குண்டுவெடிப்புகள், எத்தனை பயங்கரவாத தாக்குதல்கள் நாட்டுக்கு இருந்தது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். கடந்த 9 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா? இந்தியா உலகளவில் தலைநிமிர்ந்து வல்லரசு நாடுகளை வழிநடத்தும் நாடாக மாறி வருகிறது.

    இதனால்தான் தமிழகத்தில் தி.மு.க அமைச்சர்கள் மோடியை பார்த்து பயப்படுகின்றனர். சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலககோரி முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட என்னை கைது செய்யாததற்காக 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.

    என் மீதும், பா.ஜ.க. மீதும் குற்றச்சாட்டுகளை வாரி இரைக்கும் முதலமைச்சர் ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும். ஒரே ஒரு குடும்பத்திற்காக அவர் உழைத்து வருகிறார். மகனும், மருமகனும் சம்பாதிக்கவேண்டும் என்பதற்காக தி.மு.க ஆட்சி நடந்து வருகிறது.

    சனாதான தர்மம் என்றால் தி.மு.க.வினருக்கு குழப்பம் வருகிறது. மக்கள் எவ்வாறு வாழவேண்டும் என்பதை சொல்லி கொடுக்கும் தர்மமே சனாதானம். அனைவரையும் அரவணைத்து செல்லும் இந்த கொள்கையை பா.ஜ.க தொடர்ந்து கூறி வருவதால் குடும்ப ஆட்சி நடத்தும் தி.மு.க.விற்கு கசப்பாக தெரிகிறது.

    விரைவில் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தின் இடையே திடீரென காட்டுமாடு கூட்டத்தில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை நிர்வாகிகள் விரட்டியடித்தனர். தொண்டர்களை மகிழ்விக்கும் வகையில் அண்ணாமலை நடனமாடியும், குதிரை மீது அமர்ந்து சவாரி செய்தும் பிரசாரம் செய்தார்.

    நிலக்கோட்டை, ஆத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் இன்றுமாலை அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.

    • உயிரிழந்த ஜஸ்டின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை சாலை தோமையார்புரம் ஏ.டி.காலனியை சேர்ந்தவர் ஜஸ்டின்(38). இவரது மனைவி பிரேமா(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர்.

    இன்று அதிகாலை மைசூரில் இருந்து தேனிக்கு அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அதிகாலை நேரத்தில் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு சிறுநீர் கழிக்கச்சென்றார். அப்போது திடீரென லாரி தானாக நகர்ந்து அங்கிருந்த ஜஸ்டின் வீட்டிற்குள் புகுந்தது.

    இதில் ஜஸ்டின் மீது சுவர் இடிந்து விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரேமாவிற்கு தலையில் பலத்த காயமும், மகன்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. லாரி வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேமா மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த ஜஸ்டின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேமா நிலைமை கவலைக்கிடமாக இருக்கவே மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். லாரி டிரைவரான திருவண்ணாமலையை சேர்ந்த பழனி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வீட்டை விட்டு வெளியே சென்ற வாலிபர் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார்.
    • போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சி மொட்ட மலை பட்டியை சேர்ந்த வர் ராமன் (வயது 25). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 9-ம் தேதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக மிதந்து கிடந்தார். இது குறித்து தகவலறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவர் உடலுடன் கல்லை க்கட்டி வைத்திருந்த தால் தானாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்தாரா? அல்லது யாரேனும் கல்லை க்கட்டி கிண ற்றில் தூக்கி எறிந்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இறந்து போன ராமனுக்கு 3 சகோதரிகள் உள்ளனர்.

    ×