திண்டுக்கல் அருகே குளத்தில் முதியவர் பிணம்

குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் பாரதிபுரம் பாண்டி கோவில் அருகே செங்குளம் உள்ளது. இந்த குளத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் குளத்தில் மிதந்த பிணத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.கைப்பற்றப்பட்ட உடலை திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி வழக்குப்பதிவு செய்து முதியவர் குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com