search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் இன்று வட்டார கல்வி அலுவலர்  தேர்வு எழுதிய 1,098 பேர் - கலெக்டர் ஆய்வு
    X

    திண்டுக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டி தேர்வை கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திண்டுக்கல்லில் இன்று வட்டார கல்வி அலுவலர் தேர்வு எழுதிய 1,098 பேர் - கலெக்டர் ஆய்வு

    • திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் பூங்கொடி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார கல்வி அலுவலருக்கான போட்டித்தேர்வு இன்று 4 தேர்வு மையங்களில் நடை பெற்றது. திண்டுக்கல்லில் அரசு மகளிர் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வறை களில் அனுமதிக்க ப்பட்ட 280 தேர்வர்களில் 224 நபர்களும்,

    ஒய்.எம்.ஆர்.பட்டி புனித வளனார் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 14 தேர்வ றைகளில் அனுமதிக்கப்பட்ட 268 தேர்வர்களில் 231 நபர்க ளும், அண்ணா மலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனும திக்கப்பட்ட 380 தேர்வ ர்களில் 324 நபர்களும், பேகம்பூர் அவர்லேடி பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தேர்வு மையத்தில் அமைக்கப்பட்ட 19 தேர்வறைகளில் அனுமதிக்கப்பட்ட 380 தேர்வர்களில் 319 நபர்களும் என 4 மையங்களில் மொத்தம் 1,308 தேர்வர்கள் தேர்வு எழுத அழைப்பாணை அனுப்பப்பட்டதில், 1098 நபர்கள் தேர்வு எழுதினர். 210 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை.

    இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 66 கண்காணிப்பாளர்கள், 8 தலைமை அலுவலர்கள், ஒவ்வொரு மையத்திற்கும் தலா 2 வீடியோ ஒளிப்பதிவாளர்கள், என மொத்தம் 82 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அனைத்து தேர்வு மையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    தேர்வர்கள் எவ்வித சிரமமுமின்றி தேர்வு எழுதுவதற்கு வசதியாக காற்றோட்டமான தேர்வு அறைகள், இருக்கை வசதிகள், தடையின்றி மின் வினியோகம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மே ற்கொள்ளப்பட்டு எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தேர்வுக்கான அனைத்து ஏற்பா டுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது கல்வித்துறை இணை இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் உள்பட அலு வலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×