என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Judge speaks"

    • திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
    • விபத்தில் உயிரிழந்த ஒருவரது குடும்பத்திற்கு விபத்து இழப்பீட்டு தொகை ரூ.17.50 லட்சத்திற்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,

    விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குறைந்து வருகிறது. இதனால் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் இதர பிரச்சினைகள் நீதிமன்றத்தை நாடி வருகிறது. குடும்பப் பிரச்சி னைகள் நீதிமன்றத்தில் அதிக அளவு வழக்குகளாக வருகிறது. வழக்காடிகள் அனைவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். இது இருந்தால் பிரச்சினைகளுக்கும், வழக்குகளுக்கும் நிரந்தர தீர்வு கிடைக்கும். இதுபோன்ற 500க்கும் மேற்பட்ட வழக்குகள் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் நிரந்தர தீர்வு காணப்பட்டு உள்ளன என்று தெரிவித்தார்.

    இதேபோல் திண்டுக்கல், பழநி, வேடசந்தூர், நத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றத்திலும் 13 அமர்வுகள் மூலம் 2 ஆயிரத்து 500 வழக்குகள் எடுத்து கொள்ளப்பட்டது. இதில் உடனடி தீர்வாக கடந்த 2022ல் விபத்தில் உயிரிழந்த கண்ணன் என்பவரது குடும்பத்திற்கு விபத்து இழப்பீட்டு தொகை ரூ.17.50 லட்சத்திற்கான காசோலையை முதன்மை மாவட்ட நீதிபதி முத்து சாரதா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் நீதிபதிகள் கருணாநிதி, சரண், விஜயகுமார், தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் மோகனா, முதன்மை சார்பு நீதிபதி ராமச்சந்திரன், கூடுதல் சார்பு நீதிபதி தீபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×