என் மலர்tooltip icon

    தர்மபுரி

    • பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    • தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 90 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால் அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மேலும் அதிகரித்து வினாடிக்கு 2 லட்சத்து 37 ஆயிரம் கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 5 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 55 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்தானது நேற்று மாலை நிலவரப்படி சற்று அதிகரித்து வினாடிக்கு 75 ஆயிரம் கன அடியாக வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து 98 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இதன் காரணமாக இந்த இரண்டு அணைகளில் இருந்தும் அதிகப்படியான உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இன்று 5-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.

    மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 16-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் அதனுடைய முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்கின்ற மழையைப் பொறுத்து இரு அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது.

    கர்நாடகா இரு அணைகளில் இருந்தும் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 78,443 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரத்து 326 கன அடியாக அதிகரித்து வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

    இதனைத் தொடர்ந்து நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து காரணமாக ஐந்தருவி, சினியருவி, மெயின் அருவி ஆகிய பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் மாற்றுப் பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 14-வது நாளாக நீடித்து வருகிறது.

    • காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர்.
    • தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்ததால், கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி ஆகிய அணைகள் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அந்த அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் காலை இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை சற்று அதிகரித்து வினாடிக்கு 1 லட்சத்து 66 ஆயிரம் கன அடியாக தண்ணீர் இன்று 1 லட்சத்து 43 ஆயிரம் கனஅடி அளவில் நீர் திறந்து விடப்பட்டது.

    கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடகா எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 தினங்களாக தொடர்ந்து நீர்வரத்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீரானது நேற்று காலை 9 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 55,000 கன அடியாக அதிகரித்து காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி நிலவரப்படி நீர்வரத்து மேலும் அதிகரித்து 1 லட்சத்து 60,000 கன அடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்தானது நேற்று மாலை வரை அதே நிலையில் நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று சரிந்து 1 லட்சத்து 45 ஆயிரம் கன அடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    மேலும் கர்நாடகா அணைகளான கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் தமிழகத்திற்கு திறந்து விடும் உபரி நீர் 1 லட்சத்து 43 ஆயிரம் கன அடியாக சரிந்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தும் சரிய வாய்ப்பு உள்ளது என மத்திய நீர் ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக பிலிக்குண்டுலு பகுதியில் தொடர்ந்து நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நாகர்கோவில், முதலை பண்ணை, பென்னாகரத்தில் உள்ள நாகமரை, ஏரியூர் ஆகிய காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அதிகாரிகள் வெள்ளம் சூழந்துள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்டு பொதுமக்களை மக்கள் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள தனியார் திருமண மண்டபம் மற்றும் அரசு பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா தளத்தில் பரிசல் இயக்கவும் அருவிகளில் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும் 14-வது நாளாக தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. தீயணைப்பு வீரர்கள், போலீசார், வருவாய் துறையினர் ஆகியோர் வெள்ளத் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    • வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    தருமபுரி:

    உணவுபொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார், உத்தரவின் பேரில் கோவை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், அறிவுறுத்தலின் பேரில் தருமபுரி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தல் சம்மந்தமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பஞ்சபள்ளி அருகே நல்லம்பட்டி கொல்லபுரி மாரியம்மன் கோவில் எதிரில் கிருஷ்ணகிரி அலகு சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கு உட்பட்ட கர்நாடகா பதிவெண் கொண்ட ஆம்னி வேன் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 1000 கிலோ ரேசன் அரிசியை சட்டவிரோதமாக கடத்தி சென்றது தெரிய வந்தது.

    அவரிடம் விசாரணை செய்தபோது கர்நாடகா மாநிலம், ராம் நகர் மாவட்டம் கொல்லி கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசேகரன் மகன் பிரமோத் (22) என தெரிய வந்தது. மேலும் கடத்தி வரப்பட்ட ரேசன் அரிசியை கர்நாடகா மாநிலம் ராம்நகரில் உள்ள டிபன் கடைகளுக்கு அதிக லாபத்திற்காக விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    • படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், இலக்கியம்பட்டியில் கடந்த 6-ம் தேதி புதிதாக பிரியாணி ஓட்டல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் வி.ஜெட்டி அள்ளி பகுதியை சேர்ந்த முகமது ஆசிக் (25) என்பவர் கிரில் மாஸ்டராக வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று இரவு ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்தபோது இரவு சுமார் 10 மணியளவில் ஓட்டலுக்கு 4 பேர் வந்துள்ளனர். அப்போது அவர்களில் 2 பேர் முகமது ஆசிக்கிடம் பேசுவது போல் நடித்து கண் இமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சராமாரியாக குத்தினர். இதில் படுகாயம் அடைந்த முகமது ஆசிக் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டலில் இருந்த மற்ற ஊழியர்கள் தடுக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களையும் கொலையாளிகள் கத்தியை காட்டி மிரட்டினர். இதனால் அவர்கள் உயிருக்கு பயந்து விலகி நின்றனர்.

    இதை தொடர்ந்து ஓட்டலில் அலரல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்தனர். இதனை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த நகர போலீசார் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த செய்து பார்த்த மருத்துவர்கள் முகமது ஆசிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஓட்டலில் உள்ள சி.சி.டி.வி பதிவுகளை வைத்து கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது குறித்து கொலையாளிகளை கைது செய்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

    தருமபுரி , சேலம் முக்கிய சாலையில் அமைந்துள்ள பிரபல பிரியாணி ஓட்டலில் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டு இருந்தபோதே இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் தருமபுரியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தெரியாதவாறு மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
    • பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர், ஹேமாவதி அணை உள்ளிட்ட அணைகள் நிரம்பி உள்ளன.

    இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாகர் ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் உபரி நீரின் அளவு மீண்டும் படிப்படியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால், கர்நாடகா அணைகளில் இருந்து சுமார் 1.50 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தமிழக-கர்நாடகா எல்லையான பிலிக்குண்டுலுவு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கன அடியாக இருந்தது. கர்நாடகா அணைகளில் இருந்து 1.50 லட்சம் கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால், ஒகேனக்கல்லுக்கு நேற்று இரவு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 1 லட்சத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

    இந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடியாக மேலும் உயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தெரியாதவாறு மூழ்கடித்தபடி தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    இதனால் காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு நேற்று முன்தினம் தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று ஒகேனக்கல்லில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, காவிரி ஆற்றின் கரையின் இருபுறமும் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதாலும், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ஆற்றங்கரையோர பகுதியிலும், தாழ்வான பகுதியிலும் வசித்து வரும் பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 13-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர்.

    ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து 1.50 லட்சம் கனஅடி அளவில் நீர் திறக்கப்பட்டதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • கர்நாடகாவில் இருந்து 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு.
    • ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தருமபுரி:

    கர்நாடகா கேரளா மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளில் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் கபினி கிருஷ்ணராஜ் சார் ஆகிய இரு அணைகளில் இருந்து நேற்று 1 லட்சம் கனஅடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று மாலை வரை 56 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 62 ஆயிரம் கன அடியாகவும் தற்போதைய நிலவரப்படி மேலும் அதிகரித்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

    இந்த நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக ஐந்தருவி, சினி பால்ஸ், மெயின் அருவி ஆகிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 11-வது நாளாக தடை நீடித்து வருகிறது.

    ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்புத்துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    கர்நாடகா அணைகளில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் வெள்ள பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு.
    • அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு.

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.

    அணைக்கு வரும் உபரிநீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து உபரி நீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 74 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 1.5 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், ஒகேனக்கலில் தொடர்ந்து 11 ஆவது நாளாக பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீடிக்கிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

    இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கிற மழையை பொறுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது சற்று குறைந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியானது. இந்த நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 9-வது நாளாக நீடிக்கிறது.

    இதற்கிடையே காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிட கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது.
    • அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின.

    இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கிற மழையை பொறுத்து இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பதும், குறைப்பதுமாக உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வரத்து கூடுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

    நேற்றுமுன்தினம் மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 74 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இது சற்று அதிகரித்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடியானது. இந்த நீர்வரத்து குறைந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக நீடித்து வருகிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தும், குறைந்தும் வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. மேலும் அருவிக்கு செல்லும் நடைபாதைகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 8-வது நாளாக நீடிக்கிறது.

    இதற்கிடையே காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிட கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
    • வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.

    அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.

    இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.

    இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.

    தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.

    • போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.
    • மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    தருமபுரி:

    கர்நாடகா, கேரளா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான குடகு, வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

    இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து கபினி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய 2 அணைகளில் இருந்து இன்று நீர் திறப்பு சற்று சரிந்து மொத்தம் 63 ஆயிரம் கனஅடி அளவில் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து காவிரி ஆற்றில் 40 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா-தமிழக எல்லையான பிலிக்குண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

    இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் 2 அணைகளில் நேற்று முன்தினம் நீர்திறப்பு 45 ஆயிரம் கனஅடியாக சற்று குறைந்த அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 65 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை சற்று சரிந்து 55 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்து கொண்டிருக்கிறது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் என காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை மூழ்கடித்தவாறு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து இன்று 6-வது நாளாக நீடிக்கிறது. மேலும் இன்று 2-வது நாளாக காவிரி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இன்று விடுமுறை நாள் என்பதால் ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், பரிசல் இயக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளதாலும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் சுற்றுலா பயணிகள் யாரும் குளிக்க விடாமல் தடுத்து தீவிர ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    ×