என் மலர்
கடலூர்
கடலூர் அருகே புதுவைக்கு வேலைக்கு சென்ற போது வேன் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 17 பெண்கள் படுகாயமடைந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள கலையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் புதுவை மங்களம் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தினமும் ஒரு வேனில் கலையூரில் இருந்து புதுவைக்கு செல்வார்கள்.
அதன்படி இன்று காலை கலையூர் கிராமத்தை சேர்ந்த கவுரி (வயது 30), சிவரஞ்சினி (33), அருணா (22) உள்ளிட்ட 17 பெண்கள் ஒரு வேனில் புதுவைக்கு புறப்பட்டனர். வேனை அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் (28) ஓட்டி சென்றார். அந்த வேன் கடலூர் அடுத்த பள்ளிப்பட்டு- தென்னம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. வேனில் இருந்த பெண்கள் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என்று கூக்குரலிட்டனர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். வேனின் இடிபாடுக்குள் சிக்கிய பெண்களை வெளியே மீட்டனர்.
இந்த விபத்தில் வேனில் வந்த கவுரி, சிவரஞ்சனி, அருணா, பாத்திமா உள்ளிட்ட 17 பெண்கள் பலத்த காயம் அடைந்தனர். டிரைவர் ஆனந்த குமாரும் காயம் அடைந்தார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சேறும்- சகதியுமான சாலையில் மாணவ, மாணவிகள் நாற்று நட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலை முற்றிலும் சேதம் அடைந்து குண்டும்- குழியுமாக காட்சி அளித்தது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளானார்கள்.
எனவே இந்த சாலையை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த சாலையின் ஓரம் உள்ள மணலை எடுத்து ஊழியர்கள் சாலையில் போட்டு குண்டும்- குழியுமாக இருந்த இடத்தை மூடினர்.
ஆனால், அதன் பின்னர் பெய்த மழையால் அந்த சாலை மீண்டும் குண்டும்-குழியுமாக மாறியது. மேலும் நேற்று இரவு பெய்த மழையால் அந்த சாலை சேறும்-சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.
இந்த நிலையில் இன்று காலை அந்த சாலை வழியாக நேருக்கு நேர் வந்த தனியார் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி கொண்டது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரம் என்பதால் பள்ளி-கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைகளுக்கு செல்லும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாணவ-மாணவிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அங்கு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் சாலை ஆய்வாளர் விமலா ராணி, உதவி கோட்ட பொறியாளர் நல்லத் தம்பி மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொது மக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.
இந்த பிரச்சனை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியபோது, 6 மின்கம்பங்கள் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மற்றும் பெண்ணாடம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. இந்த சூறாவளி காற்றினால் பெண்ணாடம்-கொள்ளத்தன்குறிச்சி சாலையில் வள்ளலார் அறநிலையம் அருகே 100 ஆண்டு பழமை வாய்ந்த அரச மரம் வேரோடு சாய்ந்தது.
இதனால் அந்த பகுதியில் இருந்த 6 மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
பெண்ணாடம் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் மழைநீர் செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
கடலூர்:
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சுனாமி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று தமிழக கடலோர மாவட்டங்களில் மாதிரி சுனாமி ஒத்திகை பயிற்சியை நடத்தியது.
கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தை அடுத்த சாமியார் பேட்டை, காயல்பட்டு மதுரா, அய்யம்பேட்டை, சிலம்பிமங்கலம் மதுரா ஆகிய கிராமங்களில் உள்ள கடற்கரையில் இன்று சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. இதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள், அரசு அலுவலர்கள், டாக்டர்கள், நீச்சல் வீரர்கள், பேரிடர் மீட்பு குழு என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒத்திகை பயிற்சியில் முதலில் ஒலிபெருக்கி மூலம் கடலோர கிராமங்களில் சுனாமி குறித்து எச்சரிக்கப்பட்டது. அதன் பின்னர் பொதுமக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். சுனாமியில் சிக்கியவர்களை எப்படி மீட்க வேண்டும் என தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினர். பின்னர் சுனாமியில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து அரசு டாக்டர்கள் விளக்கமளித்தனர்.
சுனாமி அறிவிப்பு வந்த உடனே பொதுமக்கள் பீதியடையாமல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று காலை நீச்சல் வீரர்கள் மாநில பேரிடர் மீட்புக்குழு, மருத்துவ குழு உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் மற்றும் கடலூர் மாவட்ட போலீசார் 150-க்கும் மேற்பட்டோர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து படகு, லைப்ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு சிதம்பரம் சாமியார்பேட்டை உள்ளிட்ட சுனாமி ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடங்களுக்கு சென்றனர்.

அடையாள அட்டை புதுப்பிக்ககோரி கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு 20-க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டையை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்து கொள்வார்கள். தற்போது அரசு டாக்டர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்ககோரி எந்தவித மருத்துவ முகாம்களிலும் கலந்து கொள்ளவில்லை.
இதனால் கடலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று தங்களுக்கு மருத்துவ சான்றிதழ் பெறமுடியாததால் அடையாள அட்டையை புதுப்பித்துக் கொள்ள முடியவில்லை.
இதனை கண்டித்து இன்று மாற்றுத்திறனாளிகள் 20-க்கும் மேற்பட்டோர் கடலூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அங்கு அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அடையாள அட்டை புதுப்பித்து தரக்கோரி கோஷம் எழுப்பினர்.
தகவல் அறிந்த அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவத்தால் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும். #VeeranamLake
ஸ்ரீமுஷ்ணம்:
விவசாயிகளின் உயிர்நாடியாகவும், சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,350 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து சற்று குறைந்து 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.
விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கன அடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்று வினாடிக்கு 277 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இது நேற்றையவிட 23 கன அடி குறைவாகும்.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ந் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 72 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 73 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றையவிட 1 கன அடி அதிகமாகும். #VeeranamLake

புளூவேல்கேம் விளையாடிய என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள அங்குச்செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சேஷாத்திரி (வயது 22). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
புதுவை மேட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சேஷாத்திரி அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு 7 மணி அளவில் பணிமுடிந்து வீட்டுக்கு வந்தார். வீட்டில் பெற்றோர் யாரும் இல்லை. பின்பு தனது அறையில் சேஷாத்திரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புதுபேட்டை போலீசில் புகார் செய்யப்பட் டது. இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய சேஷாத்திரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
பின்பு தற்கொலை செய்து கொண்ட சேஷாத்திரியின் அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஆவி மற்றும் பேய்கள் பற்றிய கதை புத்தகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றை போலீசசர் கைப்பற்றினர்.
மேலும் சேஷாத்திரி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்தனர். அதில் புளூவேல் (நீலதிமிங்கல விளையாட்டு) விளையாடியதற்கான அடையாளங்கள் தெரிந்தது. புளூவேல்கேம் விளையாடிய சேஷாத்திரி மன அழுத்தம் காரணமாக தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

சேஷாத்திரிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #PetrolPriceHike
கடலூர்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கடலூர் மாவட்ட மீனவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தங்களது பைபர் மற்றும் விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
மீனவர்கள் கூறும்போது, பெட்ரேல், டீசல் விலை உயர்வால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பைபர் படகில் டீசல் நிரப்புவதற்கே அதிக அளவில் பணம் செலவு ஆகிறது. எங்களுக்கு பெரிய அளவில் லாபம் இல்லை. உடனடியாக டீசல், பெட்ரோல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர்.
அதன்படி இன்று 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம், ராசாப் பேட்டை உள்ளிட்ட 50 கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. #PetrolPriceHike

விபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் கடலூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் முதுநகர் சுண்ணாம்புகாரதெருவை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் ராஜா(வயது 22) வெல்டர். சம்பவத்தன்று இவர் கடலூர் முதுநகரில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிப்காட் நோக்கி சென்று கொண்டிருந்தார். சுத்துக்குளம் சந்திப்பு அருகே சென்றபோது பின்னால் கடலூரில் இருந்து விருத்தாசலம் மார்க்கமாக சென்ற அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.
விபத்தில் பலியான ராஜா குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்கக்கோரி அவரது தந்தை வேலாயுதம் வக்கீல்கள் சிவமணி, சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கடந்த 25.2.2014 அன்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் முடிவில் விபத்தில் பலியான ராஜா குடும்பத்துக்கு அரசு போக்குவரத்து கழகம் ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என மாவட்ட நீதிபதி தீர்ப்பு கூறினார்.
ஆனால் குறித்த காலத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்காததால் மாவட்ட நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை வேலாயுதம் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் முடிவில் இழப்பீட்டு தொகையை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று கடலூர் பஸ்நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்து கடலூர் கோர்ட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்தனர்.

பண்ருட்டி அருகே குடும்ப பிரச்சனையில் தம்பியை அடித்து கொன்ற அண்ணனை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே கீழகுப்பம் காலனியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 45). தொழிலாளி. இவருடைய மனைவி பழனியம்மாள். குடும்ப பிரச்சினை காரணமாக வீரமுத்துவை பிரிந்து பழனியம்மாள் சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று வீரமுத்து, தன்னுடைய அண்ணன் சக்திவேலிடம்(50) என்னுடைய மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க ஏன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறி அவரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சக்திவேல் கீழே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து வீரமுத்துவை சரமாரியாக தாக்கினார். இதில் வீரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது பற்றி முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்தனர். #tamilnews

காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரியில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கருணாகரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 38). கூலிதொழிலாளி.
பாலமுருகன் தினமும் காலையில் வீராணம் ஏரியில் குளித்து விட்டு வேலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இன்று காலை பாலமுருகன் வீராணம் ஏரியில் குளிப்பதற்காக வீட்டில் இருந்து நடந்து சென்றார். பின்னர் வீராணம் ஏரியில் குளித்தார். அப்போது திடீரென பாலமுருகனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கரைக்கு திரும்ப முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
அவரின் உடல் ஏரியில் மிதந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி காட்டுமன்னார்கோவில் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகனின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஏரியில் பிணமாக மிதந்த பாலமுருகனின் உடலை போலீசார் வெளியே மீட்டனர். அவரது உடலை பார்த்து மனைவி ரமா மற்றும் மகன் சந்தோஷ், மகள் சந்தியா கதறி அழுதனர். இது பார்ப்போரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து பாலமுருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தனிக்குடித்தனம் வர கணவர் மறுத்ததால் மனவேதனையில் இருந்த புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி சுண்ணாம் புக்கரை தெருவைச் சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகள் மாலதி(வயது 32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் இடையே கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இதையடுத்து மாலதி தனது கணவருடன் மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார்.
தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மாலதி தன் கணவரிடம் வலியுறுத்தினார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். இதனால் மாலதி தனது கணவருடன் கோபித்துவிட்டு புவனகிரியில் உள்ள தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.
தனது கணவர் தனிக்குடித்தனம் வர மறுக்கிறார் என எண்ணி மனவேதனை அடைந்தார். நேற்று இரவு மாலதி தாய் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த மாலதி திடீரென மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டுக்கு வந்த தாய் தனது மகள் மாலதி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து புவனகிரி போலீசில் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமாகி 5 மாதத்தில் மாலதி தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.
இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.