என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் 20 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஆந்திரா, ஐதராபாத், வேலூரிலிருந்து என்.எல்.சி.வந்த 5 பேர், பரங்கிப்பேட்டையை சேர்ந்த கர்ப்பிணி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
இதேபோல் சிதம்பரத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 24ஆயிரத்து 239 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். நேற்று ஒரே நாளில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.கொரோனா பாதித்த 104 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 23 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.444 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

குடோன் அருகே பணம் வைத்து சூதாடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் முதுநகர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு சொந்தமான குடோன் அருகே பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த பச்சையாங்குப்பத்தை சேர்ந்த ஜெகன் (வயது 30), மதிமீனாட்சி நகர் ரகு (40), சான்றோர் பாளையம் கோபால் (28), அப்பா பள்ளி தெரு தல்பாதர்( 33), பீமாராவ் நகர் நாகப்பன்( 42), உசேன் மரைக்காயர்( 31), சோனகர் தெரு நாசர் அலி (47), சிராஜூதீன்( 48), பள்ளிவாசல் தெரு பாஷா (54), சோனாங்குப்பம் ரமேஷ் (44 ) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 32ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். சூதாடிய கும்பலை பிடித்த கடலூர் முதுநகர் போலீசாரை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி பாராட்டி வெகுமதி வழங்கினார்.
வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
வேப்பூர்:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 7-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் அதே பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் மனைவி அமிர்தவல்லி (73), ரவி மகன் விக்னேஷ்வரன் (32), சுப்பிரமணியம் மனைவி தனம்(62), கார்த்திகேயன் மகள் சசிகலாதேவி, கார்த்திகேயன் மகன் சக்தி சுந்தரம் ஆகியோருடன் ஒரு காரில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காலை அவர்கள் வீட்டுக்கு திரும்பினார்கள். காரை காளிமுத்து ஓட்டி வந்தார்.
காலை 8.30 மணிக்கு கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள பாசார் பஸ் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது காளிமுத்துவின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்ற லாரி மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய காளிமுத்து சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியானார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் இடிபாட்டிற்குள் சிக்கி அமிர்தவல்லி, விக்னேஷ்வரன், தனம், சசிகலாதேவி, சக்தி சுந்தரம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அமிர்தவல்லி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்ற 4 பேருக்கும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வேப்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கடலூர்:
பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர்கள் சுடர்மதி, உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி கலந்துகொண்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி பேசினார். மேலும் குழந்தைகளின் பாலின விகிதத்தை அறிவது சட்டப்படி குற்றம் என கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் போலீசார் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரத்தில் நிவாரணம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம், கீரப்பாளையம் ஒன்றியம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். பின்னர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் கட்சியினர் மனு கொடுத்தனர்.
இதேபோல் மாநில குழு உறுப்பினர் மூசா தலைமையில் கட்சியினர் ஊர்வலமாக தாலுகா அலுவலகத்திற்கு சென்று நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர். இதில் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்ட குழு உறுப்பினர் ஆட்டோ முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திட்டக்குடியில் நடைபெற்ற ஆர்ப்பர்ட்டத்திற்கு வட்ட செயலாளர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் விவசாய சங்க வட்ட செயலாளர் மகாலிங்கம், விவசாய சங்க துணை செயலாளர் ராஜேந்திரன், சுந்தரவடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனு தாசில்தார் சையத் அபுதாஹிரிடம் வழங்கப்பட்டது.
வேப்பூர் அருகே கார் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தக்காளி வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேப்பூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பீமன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் வெங்கட்ரமணன்(வயது 35). கும்பகோணத்தில் தக்காளி மண்டி நடத்தி வந்தார். இவர் வியாபாரம் தொடர்பாக தனது நண்பரான, கும்பகோணத்தை சேர்ந்த சதீஷ்குமார் என்பவருடன் ஒரு காரில் சேலம் சென்று விட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு புறப்பட்டார். காரை வெங்கட்ரமணன் ஓட்டினார். சதீஷ்குமார் காரில் பின்இருக்கையில் படுத்தபடி பயணம் செய்து கொண்டிருந்தார்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு விருத்தாசலம்-சேலம் சாலையில் தனியார் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த டிராக்டரும், காரும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தக்காளி வியாபாரி வெங்கட்ரமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ்குமார் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். டிராக்டர் டிரைவர் தப்பிஓடிவிட்டார்.
விபத்து பற்றி தகவல் அறிந்த வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான வெங்கட்ரமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடலூர்:
விருத்தாசலம் அருகே உள்ள கோ.பவளங்குடியை சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் அய்யாக்கண்ணு (வயது 27) . இவர் கடந்த 25.12.2018 அன்று அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார்.
இதையறிந்த சிறுமியின் தாய், இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, அய்யாகண்ணுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து போலீசார், கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யாக்கண்ணுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி எழிலரசி உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலைச்செல்வி ஆஜரானார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் ஆருத்ராவிழா தேரோட்டம் தாமதத்துக்கு பின் இன்று காலை தொடங்கியது. பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்திபெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆருத்ரா தரிசனவிழா தேரோட்டம் நடந்துவருகிறது.
இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் அரசு விதிகளின்படி ஆருத்ரா தரிசனவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்றும் (29-ந் தேதி), நாளையும் (30-ந் தேதி) ஆருத்ரா தரிசனவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தேரோட்டத்தை எந்திரம் மூலம் இழுத்து நடத்தலாமா என மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது. ஆனால் இதற்கு கோவில் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கொரோனா விதிகளின்படி உள்ளூர் பக்தர்களுக்கு தேர் இழுக்க அனுமதிக்க வேண்டும் என்று அரசிடம் வலியுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து உள்ளூர் பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் வெளியூர் பக்தர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சில நிபந்தனைகளுடன் வெளியூர் பக்தர்கள் ஆருத்ரா தரிசனவிழாவில் பங்கேற்கலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆருத்ரா தரிசனவிழாவில் பங்கேற்பவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து அனுமதி சீட்டு பெறவேண்டும் என மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார். ஒரு அனுமதி சீட்டுக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆருத்ரா தரிசனவிழாவில் ஆன்லைன் பதிவு கட்டாயம் என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை கண்டித்து கோவில் தீட்சிதர்கள், பக்தர்கள், இந்து அமைப்பினர் சிதம்பரம் நடராஜர்கோவில் முன்பு மறியல் செய்தனர். இதனால் தேரோட்டவிழா நடைபெறுமா? நடைபெறாதா? என்று பக்தர்களிடையே சோகம் ஏற்பட்டது. நேரம் அதிகரிக்க அதிகரிக்க ஏராளமான பக்தர்கள் குவியத்தொடங்கினர்.
தகவல் அறிந்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விடிய விடிய இந்த மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அபிநவ், சப்-கலெக்டர் மதுபாலன் ஆகியோர் பேச்சு நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.
இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் கடந்த ஆனிமாதம் நடைபெற்றதைபோல கோவில் வாளாகத்திலேயே நடராஜர் சுவாமி உள் புறப்பாடு நடைபெறும். ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமியை எழுந்தருள செய்து அபிஷேகம், ஆராதானை நடத்தப்படும். அதிகாலைக்குள் மாவட்ட நிர்வாகம் ஆன்லைன் அனுமதி முறையை முழுமையாக ரத்து செய்தால் மட்டுமே 4 ரத வீதிகளில் தேரோட்டம் வழக்கம்போல் நடைபெறும். இல்லாத பட்சத்தில் கோவிலுக்கு உள்ளேயே சுவாமி தேரோட்டம், ஆருத்ரா தரிசனவிழா நடைபெறும் என்று தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விடியவிடிய நடந்த போராட்டத்துக்கு பின்பு தேரோட்டத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கலாம் என்று பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து 4 ரத வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
வழக்கமாக தேரோட்டம் நடைபெறும் நேரத்தில் அதிகாலை 5 மணி அளவில் சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உச்சவமூர்த்திகளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியன், ஸ்ரீசண்டிகேசுவரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருள செய்வார்கள்.
ஆனால் இன்று காலை தாமதமாக நடராஜர் கோவில் சித்சபையில் இருந்து மூலவரான நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உச்சவமூர்த்திகளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியன், ஸ்ரீசண்டிகேசுவரர் மேளதாளம் முழங்க பக்தர்கள் சிவகோஷத்துடன் சுவாமிகள் எடுத்துவரப்பட்டனர்.
பின்னர் நடன பந்தலில் இருந்து தேர்நிலையான கீழரதவீதிக்கு சுவாமிகள் வந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட 5 தேர்களில் சுவாமிகள் எழுந்தருளினர். அதனைத்தொடர்ந்து பக்தர்கள் சிவகோஷத்துடன் தேர்களை வடம்பிடித்து இழுத்தனர். தேர்கள் தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையை வந்தடையும். அங்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும்.
அதன்பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்துக்கு கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு இரவு முழுவதும் லட்சார்சனை, சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
நாளை (30-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு மேல் மகாஅபிஷேகம், சொர்ணாபிசேகம், திருஆபரண காட்சி, புஷ்பாஞ்சலி நடக்கிறது. மதியத்துக்கு மேல் பஞ்சமூர்த்தி வீதிஉலாவுக்கு பின்னர் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு முகப்பு நடனபந்தலில் 3 முறை வளம் வந்து முன்னும் பின்னும் நடனமாடி பக்தர்களுக்கு ஆருத்ராதரிசன காட்சி தருவார்கள்.
அதனைத் தொடர்ந்து சுவாமிகள் புறப்பாடும், சித்சசபை ரகசிய பிரவேசமும் நடைபெறும்.
நாளை மறுநாள் (31-ந் தேதி) முத்துபல்லக்குடன் விழா முடிவடைகிறது.

கடலூரில் வடிகால் இல்லாததால் வெள்ளம் வடியாமல் உள்ளது. மழைவிட்டும் குடியிருப்பு வாசிகளின் துயரம் இன்னும் நீங்கவில்லை.
கடலூர்:
வங்க கடலில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரெவி புயல்களால் கடலூர் மாவட்டத்தில் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதந்தன. குடியிருப்புகளை சுற்றியுள்ள மழைநீரை வடிய வைக்கும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர்.
கடலூர் நகராட்சி பகுதியில் மோட்டார் மூலம் மழைநீரை ஊழியர்கள் வடிய வைத்தனர். சில இடங்களில் சாலைகளை வெட்டி கால்வாய் அமைத்து தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதேபோல் கடலூர் கோண்டூர் ஊராட்சிபகுதியிலும் தேங்கி நின்ற மழைநீர் அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். ஆனால் தாழ்வான பகுதியான ராகவேந்திரா நகர் பகுதியில் இது வரை மழைநீர் வடியவில்லை.
நகரை சுற்றிலும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. போதிய வடிகால் வசதியில்லாமல், தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. இதனால் அந்த நகரை சேர்ந்த மக்கள் தண்ணீரில் நடந்து செல்ல முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். முட்டளவு தண்ணீரில் சிறுவர்கள் நனையாமல் இருக்க லாாி டியூப் மூலம் நீந்தி வெளியே வருகின்றனர். இளைஞர்களும் டியூப்பில் பலகைகளை வைத்து பாதுகாப்புடன் வெளியே வருகின்றனர்.
மழை ஓய்ந்த பிறகும் இதே நிலை நீடித்து வருவதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. இந்த பகுதியில் உள்ள மழைநீரை வடிய வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் வருவதும், போவதுமாக இருக்கிறார்கள். ஆனால் தண்ணீரை வடிய வைக்க எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆகவே இதை ஊராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு தேங்கி நிற்கும் மழைநீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீண்ட நாட்கள் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே இதை மாவட்ட நிர்வாகம் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதேபோல் கடலூர் நகரில் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்று தூர்நாற்றம் வீசி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மழைவிட்டும் கடலூர் மக்களின் துயரம் இதுநாள் வரைக்கும் ஓயாமல் இருந்து வருகிறது.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு என்று பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிதம்பரம்:
தேசிய ஜனநாயக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தான் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை, அதில் மாற்றமில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை கூட்டினால் தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என கூறிருந்தார்.
இதுபோன்று, பாஜக மாநில தலைவர் எல் முருகன், தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என்று கூறியது பாஜக – அதிமுக அமைச்சர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பாஜக முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க அவர்களுக்கு முழு உரிமை உண்டு. தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி குறித்து தேசிய தலைமை அறிவிக்கும். அதிமுக கூட்டணியில் தான் பாஜக அங்கம் வகிக்கிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அதிகாரபூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பொய் பிரசாரம் செய்யும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று திட்டக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
திட்டக்குடி:
2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அ.தி.மு.க. சார்பில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் திட்டக்குடியில் நடைபெற்றது.
இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கே.பி கந்தசாமி, வாகை.இளங்கோவன், பாண்டியன், ராஜேந்திரன், பொன்னேரி முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் நீதிமன்னன் வரவேற்றார்.
அ.தி.மு.க.வின் மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று அனைவரும் கருத்து வேறுபாடு ஏதுமின்றி ஒற்றுமையாக செயல்பட்டு எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வர வேண்டும். இந்த நோக்கத்தோடு அனைவரும் தேர்தல் பணியை செம்மையாக செய்திட வேண்டும்.
ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.க. அழிந்துவிட்டதாக பலர் நினைத்தனர். ஆனால் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு நல்ல ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்களுக்கு தெரியும் யார் நல்லவர்கள் என்று, தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
உழைத்தால் மட்டுமே உயர முடியும் என்ற எண்ணத்தில் அனைவரும் எந்த பாகுபாடுமின்றி தேர்தல் பணியில் ஈடுபடவேண்டும். மேலும் ஒவ்வொரு கிளைகளிலும் பூத் கமிட்டி அமைத்து வாக்கு வங்கியை அதிகப்படுத்த வேண்டும். 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். எனவே நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் இந்த தேர்தலை எதிர்கொண்டு எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதல்-அமைச்சராக்க பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் முருகுமாறன், கலைச்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமு, பெரியசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் எழிலரசன், ஒன்றிய கவுன்சிலர் பத்மாவதி, தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் முத்தமிழ்ச் செல்வன், கூட்டுறவு வங்கி வீட்டு வசதி தலைவர் மதியழகன், வெள்ளையம்மாள் கலியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு வங்கித் தலைவர் முல்லைநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாற்று கட்சிகளை சேர்ந்த பலர் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர்.

அண்ணாமலைநகரில் மோட்டார்சைக்கிள் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கணபதி, லட்சுமிராமன் மற்றும் போலீசார் வல்லம்படுகை சோதனைசாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி, விசாரித்தனர். அதில் அந்த நபர் ஓட்டி வந்தது, வல்லம்படுகை பகுதியில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அதில், அவர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த இலக்கியன் (வயது 24) என்பது தெரியவந்தது. இதேபோன்று சிதம்பரம் அம்மாபேட்டை அருகே போலீசார் வாகன சோதனையின் போது, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த பூம்புகார் அருகே உள்ள தர்மகுளம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), மயிலாடுதுறை பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த ரகு (25) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அதில் இருவரும் சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.