search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோட்டார்சைக்கிள் திருட்டு"

    • சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.
    • பாலசுந்தரம் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    சென்னிமலை:

    சேலம் மாவட்டம் காவேரிப்பட்டி கிராமம், செட்டிப்பட்டியை சேர்ந்தவர் பால சுந்தரம் (27). இவர் சென்னி மலை அருகே ஈங்கூர் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆடிட்டராக வேலை பார்த்து வருகிறார்.

    பாலசுந்தரம் கடந்த 12-ந் தேதி மாலை நண்பர் ஒருவ ருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் மலை மேல் உள்ள முருகன் கோவி லுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.

    அங்கு வாகனங்கள் நிறு த்தும் இடத்தில் தனது மோட்டார் சைக்கிளை சைடு லாக் செய்து நிறுத்தி விட்டு கோவிலுக்குள் சாமி கும்பிட சென்றுள்ளார்.

    பின்னர் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்ப வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பாலசுந்தரம் இது குறித்து சென்னிமலை போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    • நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள்.
    • கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மருதன் கிணறு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் வல்லரசு (வயது 21). இவர் தற்பொழுது சங்கரன்கோவில் நல்லரசன் கோட்டை பகுதியில் வசித்து வருகிறார்.

    இவர் குமரி மாவட்டம் ஈத்தாமொழி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வல்லரசுவை ஈத்தாமொழி போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்க வல்லரசுவை அழைத்து வந்தனர். ஜெயில் வாசலில் இருந்து வல்லரசு போலீஸ் பிடியில் இருந்து நேற்று இரவு 9.45 மணிக்கு தப்பி ஓடிவிட்டார். வல்லரசு தப்பி ஓடியது குறித்து நாகர்கோவில் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறை மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    நாகர்கோவில் நகர் முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடினார்கள். இந்த நிலையில் வடசேரி பஸ் இளைய பகுதியில் வெளியூர் தப்பி செல்வதற்காக நின்று கொண்டிருந்த வல்லரசுவை போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட வல்லரசுவை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்றது தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்திலும் வல்லரசு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவரை மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தப்பியோடிய 3 மணி நேரத்தில் கைதியை பிடித்த போலீசாருக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அதே நேரத்தில் வல்லரசு தப்பி சென்றபோது பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு போலீசார் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.
    • மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது 25). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

    பிரபு அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ப்ளூ மெட்டல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார்.

    மறுநாள் காலை வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதனையடுத்து பிரபு பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
    • இறைச்சி கடைக்கு கறி வாங்க மொபட்டில் சென்றார்.

    கோவை,

    கோவை பி.என்.புதூர் பொன் நகரை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 32). தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு இறைச்சி கடைக்கு கறி வாங்க மொபட்டில் சென்றார். பின்னர் மொபட்டை இறைச்சி கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்கு சென்று கறி வாங்கி திரும்பினார். அப்போது அவரது மொபட்டை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி மறுநாள் காலையில், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என நினைத்து வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனைத்தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு மொபட் காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றார். அப்போது பி.என்.புதூர் மாரியம்மன் கோவில் அருகே மகேஷ்வரியின் மொபட்டில் வாலிபர் ஒருவர் ஜாலியாக சுற்றி கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தொழிலாளி வேலு (29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு மொபட்டில் ஜாலியாக உலா சென்ற வாலிபர் அதன் உரிமையாளரிடமே சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர்.

    காரமடை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை போலீஸ்நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருபவர் சந்திரசேகர்.

    இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் பணி முடிந்து தனது மோட்டார்சைக்கிளில் காரமடை தொட்டிபாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். வீட்டு முன்பு மோட்டார்சைக்கிளை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்த போது மோட்டார்ைசக்கிள் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து சந்திரசேகர் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதேநாளில் காரமடை கண்ணார்பாளையம் பாலாஜிநகரைச் சேர்ந்த தனபால் என்பவரது மோட்டார்சைக்கிளும் திருட்டு போனது. இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோட்டார்சைக்கிள் திருடர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருட்டு நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது மோட்டார்சைக்கிளை திருடிச் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகி இருந்தன. அதன் அடிப்படையில் போலீசார் விசாரித்து மோட்டார்சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நிசார் முஹம்மது, ஹரிகரன், தமிழ்ச்செல்வன் மற்றும் காரமடை பகுதியை சேர்ந்த நித்திஷ் ஆகி யோர் என்பது தெரிய வந்தது. கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    ×