என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏழுகிணறு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது - 12 வாகனங்கள் பறிமுதல்
    X

    ஏழுகிணறு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது - 12 வாகனங்கள் பறிமுதல்

    ஏழுகிணறு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
    ராயபுரம்:

    சவுகார்பேட்டை, கொண்டித்தோப்பு, ஏழு கிணறு, பாரிமுனை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக போலீசுக்கு புகார்கள் வந்தன.

    இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ஏழுகிணறு பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய ஒருவர் சிக்கினார்.

    அந்த பகுதி மக்கள் அவரை அடித்து உதைத்து மடக்கிப் பிடித்தனர். ஏழு கிணறு போலீசில் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் அவருடைய பெயர் நசீர் (48). சாலிகிராமத்தை சேர்ந்தவர். ஏற்கனவே சென்னை நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள், மொபட், ஸ்கூட்டி போன்ற இருசக்கர வாகனங்களை திருடியதும் பல திருட்டு வழக்குகள் அவர்மீது இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து நாசரை ஏழு கிணறு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×