என் மலர்
கடலூர்
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் கடலூர் மாவட்டத்திற்கு வருகிறார் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் சட்டமன்ற தொகுதிசார்பில் அ.தி.மு.க. செயல்வீரர், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான எம்.சி. சம்பத் தலைமை தாங்கினார். கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிசாமி, ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மீனவரணி துணை செயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் குமரன் வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர் எம்.சி. சம்பத் கூறுகையில், தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலர நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் பிரசாரத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடுத்த வாரம் கடலூர் மாவட்டத்திற்கு வருகிறார். மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளில் கடலூர் தொகுதியே, அ.தி.மு.க.வுக்கு நம்பர்-1 தொகுதியாகும். கடந்த 2016 தேர்தலில் 26 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்றோம். எனவே, வரும் தேர்தலிலும் நாம் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற வேண்டும். ஊராட்சி தேர்தலில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரிப்பதுபோல் தேர்தல் பணியை இன்றே தொடங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில், வருகிற சட்டமன்ற தொகுதியில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை, கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து பணியாற்றி அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் மாவட்ட அவைத்தலைவர் முத்துலிங்கம், இணை செயலாளர் உமாமகேஸ்வரி பாலகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் வரதராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வெங்கட்ராமன், விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், நகர துணை செயலாளர் கந்தன் மற்றும் நிர்வாகிகள் தமிழ்செல்வன், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.
விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மந்தாரக்குப்பம்:
மதுரை கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் அஜய்கார்த்திக்(வயது 31). இவர் கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இதற்காக இவர் நெய்வேலி அடுத்த கெங்கைகொண்டான் பஸ் நிறுத்தம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார். அஜய்கார்த்திக் நேற்று முன்தினம் பணி முடிந்ததும் தன்னுடன் பணியாற்றும் சக ஊழியரான மந்தாரக்குப்பம் அடுத்த மேல்பாதி கிராமத்தை சேர்ந்த ரகுவரன்(33), ரகுவரன் அண்ணன் ரங்கநாதன்(36) ஆகியோருடன் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் வடலூர் சென்றார்.
பின்னர் அங்கு வேலை முடிந்ததும் இரவு 11.45 மணியளவில் அஜய்கார்த்திக் உள்ளிட்ட 3 பேரும் காரில் மந்தாரக்குப்பம் நோக்கி புறப்பட்டனர். கடலூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி அடுத்த சேப்ளாநத்தம் கிராம எல்லை அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது நெய்வேலியில் இருந்து நிலக்கரி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியும், அஜய்கார்த்திக் உள்ளிட்டோர் வந்த காரும் கண்இமைக்கும் நேரத்தில் நேருக்குநேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் அஜய்கார்த்திக், ரகுவரன் ஆகியோர் உயிரிழந்தனர். விபத்து குறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 11 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 6 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த என்.எல்.சி., கடலூரை சேர்ந்த 2 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 657 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 4 பேர் குணமடைந்து சென்றனர். கொரோனா பாதித்த 43 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 26 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 406 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மந்தாரக்குப்பம்:
மதுரையை சேர்ந்தவர் அஜய் (வயது 35). இவர் கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
அதே வங்கியில் அலுவலக உதவியாளராக மந்தாரக்குப்பத்தை சேர்ந்த ரகுவரன் (30) என்பவரும் வேலை பார்த்து வந்தார். ரகுவரனின் மனைவி உடல்நிலை குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து ரகுவரனின் மனைவி சிகிச்சை தொடர்பாக டாக்டரிடம் கேட்பதற்காக அஜய், ரகுவரன் மற்றும் அவரது தம்பி ரங்கராஜன் (32) ஆகிய 3 பேரும் ஒரு காரில் புதுவைக்கு சென்றனர். புதுவையில் டாக்டரை சந்தித்து விட்டு அவர்கள் மந்தாரக்குப்பத்துக்கு காரில் புறப்பட்டனர். காரை அஜய் ஓட்டினார்.
அந்த கார் நள்ளிரவில் நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் சேப்ளா நத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியில் சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியும் அஜய் ஓட்டிவந்த காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு- நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் இருந்த அஜய் மற்றும் ரகுவரன் ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரங்கராஜன் இடிபாடுக்குள் சிக்கி 2 கால்களும் துண்டித்த நிலையில் உயிருக்கு போராடினார்.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மந்தாரக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
விபத்தில் 2 கால்களையும் இழந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரங்கராஜனை மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் பலியான அஜய், ரகுவரன் ஆகிய 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான அஜய்க்கு திருமணமாகி 1½ வயதில் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் வங்கி அதிகாரி மற்றும் உதவியாளர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விருத்தாசலத்தில் குடோனில் ரூ.5 லட்சம் புகையிலை பொருட்களை பதுக்கிய பிளாஸ்டிக் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் தனிப் பிரிவு தலைமை காவலர்கள் பாலமுருகன், ராஜசேகர், சுரேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் விருத்தாசலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது விருத்தாசலம் பங்களா தெரு பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், பங்களா தெருவை சேர்ந்த பீமராவ் மகன் தினேஷ்குமார் (வயது 46) என்பவரிடம் விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணான பதிலை அளித்தார். இைதையடுத்து, அவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் கடைக்கு உரிய குடோனில் போலீசார் சோதனை செய்தனர்.
அங்கு, 21 மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, புகையிலை பொருட்களை பதுக்கிய தினேஷ்குமாரை பிடித்து விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கடலூர் மாவட்டத்தில் மது கடத்தல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மது பாட்டில்கள் கடத்தல், சாராயம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் கடலூர் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் பாதுகாப்பாக போலீஸ் நிலைய வளாகங்களில் நிறுத்தி வைக்கப்படும். அதில் ஒருசில வாகனங்களை உரிமையாளர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தி எடுத்து செல்வார்கள்.
அபராத தொகை செலுத்தாத வாகனங்கள் நீண்ட நாட்களாக போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
அந்த வாகனங்களை போலீஸ் துறை சார்பில் ஏலம் விடப்படும். அதனடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இன்று ஏலம் விடப்படும் என்று போலீசார் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று காலை மதுவிலக்கு போலீஸ் நிலைய வளாகத்தில் வாகனங்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு 321 பேர் வந்திருந்தனர். 20 கார்கள், 6 ஆட்டோக்கள், 116 மோட்டார் சைக்கிள்கள் என 142 வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது.

பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கு நடைபெற்ற நேர்முகத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்றும், பொறியாளர் தேர்வுக்கு 1.11 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 59,545 பேர் தேர்வில் பங்கேற்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வை வெளிப்படையாக நடத்தியதுடன், தேர்வு முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள் என சர்ச்சை எழுந்து எழுந்துள்ள நிலையில் என்எல்சி நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
கடலூரில், நூதன முறையில் கார் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்:
வடலூர் ஆபத்தாரணபுரம் கோவிந்தசாமிநகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் ரவி (வயது 47). இவர் வடலூர் கார் நிறுத்தத்தில் வாடகை கார் ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1.45 மணி அளவில் ரவியிடம் விருத்தாசலம் பள்ளத்தெரு கார்கூடலை சேர்ந்த பழனிவேல் மகன் மணிகண்டன் என்கிற கதிரேசன் (23) என்பவர் புதுச்சேரிக்கு சவாரி செல்ல வேண்டும் என்று வாடகை பேசி அவரை அழைத்து வந்தார்.
கார் கடலூர் வந்த போது, இம்பீரியல் சாலையில் உள்ள பிரபல ஓட்டலில் 2 பேரும் சாப்பிட்டனர். பின்னர் மணிகண்டன் சீக்கிரம் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். ரவி மட்டும் தாமதமாக சாப்பிட்டார். இதனால் அவரிடம் தான் சாப்பிட்ட சாப்பாட்டுக்கும், அவருக்கும் சேர்த்து பணத்தை கொடுத்து விட்டு, நான் காரில் காத்து இருக்கிறேன். இதனால் உனது கார் சாவியையும், யூடியூப் பார்க்க உனது செல்போனையும் தா? என்று நைசாக பேசி வாங்கினார்.
இதை நம்பிய ரவி, அவரிடம் சாவியையும், செல்போனையும் கொடுத்து அனுப்பினார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது, காரையும், அவரையும் காணவில்லை. அதன்பிறகு தான் அவர் தனது காரை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான தனிப்படையினர் அவரை தீவிரமாக தேடினர்.
இந்நிலையில் அவர் காருடன் நேற்று மதியம் சேத்தியாத்தோப்பு பகுதியில் வலம் வந்தது போலீசாருக்கு தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது அவருடன் அவரது நண்பர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பெருமாத்தூர் காமராஜ் மகன் அஜித்குமார் (24) என்பவரும் இருந்தார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டு காரை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இ்ருந்த காரையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் 2 பேர் மீதும் பரங்கிப்பேட்டை, குன்னம் ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் நூதன முறையில் டிரைவரிடம் கார் திருடிய சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.
காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதாலும் நீர் வரத்து இல்லாததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கி உள்ளது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 43.80 அடியாக இருந்தது. இன்று 42.92 அடியாக நீர்மட்டம் குறைந்துள்ளது. வடவாறு மற்றும் செங்கால் ஓடையில் இருந்து வீராணம் ஏரிக்கு தற்போது நீர்வரத்து இல்லை. இதனால் ஏரியின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது.
சென்னை மக்களின் குடிநீருக்காக வீராணம் ஏரியிலிருந்து ராட்சத குழாய் மூலம் நேற்று முன் தினம் 54 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இன்று முதல் 60 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. சென்னையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியில் இருந்து தற்போது சென்னைக்கு கூடுதலாக குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே மீன்பிடித்து விட்டு திரும்பியபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். திட்டு கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 43). மீனவரான இவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த வீரத்தமிழன் (53), தமிழன் (55), சிங்காரக்குப்பம் பகுதியை சேர்ந்த அப்பு என்கிற சுகுமார் (40) ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். பின்னர் மீன்பிடித்துக் கொண்டு நள்ளிரவில் கரை திரும்பினர். அப்போது வெள்ளாற்று முகத்துவாரம் அருகே வந்தபோது, திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் வந்த படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்தது.
இதில் படகில் வந்த குணசேகரன் உள்ளிட்ட 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதைத்தொடர்ந்து அப்பு மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேரும் நீந்தி கரைக்கு வந்தனர். ஆனால் வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் நிலை என்ன என்று தெரியவில்லை.
இதையடுத்து அப்பு, குணசேகரன் ஆகியோர் ஊரில் இருந்த சக மீனவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினர். இதைத்தொடர்ந்து மீனவர்கள் படகில் சென்று வீரத்தமிழன், தமிழன் ஆகியோரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் உடல்கள் முடசல்ஓடை கடற்கரையில் ஒதுங்கிய நிலையில் கிடந்தன.
இதுபற்றி தகவல் அறிந்த கிள்ளை போலீசார் சம்பவ இ்டத்துக்கு விரைந்து வந்து வீரத்தமிழன், தமிழன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்பிடித்துவிட்டு வந்தபோது படகு கவிழ்ந்து 2 மீனவர்கள் உயிரிழந்த சம்பவம் எம்.ஜி.ஆர். திட்டு பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேப்பூர் அருகே லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வேப்பூர்:
சென்னை கூடுவாஞ்சேரி நந்திவரம் நாரயணபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 48). இவர் தனது குடும்பத்தினருடன் காரில் தஞ்சாவூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு திரும்பினார். வேப்பூர் அருகே உள்ள அய்யனார்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென கார் பழுதாகி சாலையில் நின்றது.
இதையடுத்து அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்க்கும் ஊழியர்கள், காரை இயக்குவதற்காக சாலையில் தள்ளிக்கொண்டு சென்றனர். அப்போது, பின்னால் வந்த லாரி, காரை தள்ளி சென்றவர்கள் மீதும் கார் மீதும் மோதியது. இதில் காரின் பின்பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும் காரை தள்ளிக்கொண்டு சென்ற ஓட்டல் ஊழியர்களான சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் விஜி என்கிற தென்னவன்(22), ரவிச்சந்திரன் மகன் கலையரசன்(23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தென்னவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
கலையரசனுக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நெல்லிக்குப்பம் அருகே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லிக்குப்பம்:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. வரக்கால்பட்டு அருகே வந்தபோது, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தவச்செல்வம், கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்டவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் வரக்கால்பட்டை சேர்ந்த சிவகுரு (வயது 25) என்பதும், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை இழந்து சொந்த ஊருக்கு வந்தார். அதன் பின்னர் அவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவித்தனர். இதையடுத்து சிவகுருவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.