என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை - என்எல்சி நிறுவனம் விளக்கம்
பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பொறியாளர் பணிகளுக்கு நடைபெற்ற நேர்முகத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. மேலும் தேர்வில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொறியாளர் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என்று என்எல்சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக வெளியான தகவல்கள் தவறானது என்றும், பொறியாளர் தேர்வுக்கு 1.11 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 59,545 பேர் தேர்வில் பங்கேற்றனர் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வை வெளிப்படையாக நடத்தியதுடன், தேர்வு முழுவதும் கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் என்எல்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்ட 1,582 பேரில் 8 பேர் மட்டுமே தமிழர்கள் என சர்ச்சை எழுந்து எழுந்துள்ள நிலையில் என்எல்சி நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
Next Story






