search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா வைரஸ்"

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,675 பேர் குணமாகி உள்ளனர்.
    • இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 36 ஆயிரத்து 92 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,108 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

    நேற்று பாதிப்பு 4,369 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 7 ஆயித்து 471 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 5,675 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 36 ஆயிரத்து 92 ஆக உயர்ந்தது. தற்போது 45,749 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கொரோனா பாதிப்பால் மேலும் 31 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,216 ஆக உயர்ந்துள்ளது.

    • தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன்.
    • கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    பொது சுகாதார வழி காட்டுதல்களை பின்பற்றி தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். தடுப்பூசி செலுத்தி இருப்பதால் தற்போது நன்றாக இருப்பதை உணர்கிறேன். எனவே நீங்கள் தடுப்பூசி போடவில்லை என்றால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    கடந்த 5 மாதங்களில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வாரம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்பி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    ×