என் மலர்
கடலூர்
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 19-ந்தேதி தனது தம்பி சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அன்று மாலை சுதீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார்.
அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சுதீஷ் ஆஸ்பத்திரியில் தனிமைபடுத்தப்பட்டு கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது இருந்த அதிகாரிகள், வேட்பாளர் பிரேமலதா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கலின் போது பணியில் இருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது வேட்பாளர் பிரேமலதா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இன்று காலை விருத்தாசலம் ஷெராமிக் தொழிற்பேட்டையில் பிரேமலதா வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.
வேட்பாளர் பிரேமலதாவிடம் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். இதற்கு அங்கிருந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், தே.மு.தி.க. நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை சமரசம் செய்தனர்.
உடனே பிரேமலதா நான் தற்போது பிரசாரத்தில் உள்ளேன். மாலை இது பற்றி உங்களிடம் தெரிவிக்கிறேன் என்றார். அதன் பின்னர் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில், குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் அவருடன் தொடர்பில் இருக்கும் நபர்களையும் கொரோனா பரிசோதனைக்கு அழைப்பது வழக்கம். அந்த எண்ணத்தில் பிரேமலதாவை கொரோனா பரிசோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்று அவர் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றார்.
கடலூர்:
தமிழகத்தில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது. என கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி அறிவுறுத்தி வருகிறார்.
சுருக்கு மடி வலை பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மீனவர்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் உட்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் தேவனாம்பட்டினம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தக் கூடாது என அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
எனவே கடலூர் மாவட்டத்திலுள்ள மீனவர்கள் யாரும் சுருக்குமடி வலையை பயன்படுத்தக்கூடாது என்று அதிகாரிகள் கூறினர். இருப்பினும் சுருக்குமடி வலை பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் மீனவர்களின் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதைத்தொடர்ந்து தேவனாம்பட்டினம் பகுதியில் உள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் படகுகள் அனைத்தும் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அந்த பகுதியில் ஒன்று திரண்டனர். மீனவர்கள் தங்களது குடும்பத்தினருடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமாதான பேச்சுவார்த் தை நடத்தினர். அப்போது மீனவர்கள் கூறியதாவது:-
சுருக்குமடி வலைக்கு அரசு தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதிக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மீனவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இது வரை அரசியல் கட்சியினர் யாரும் அந்த பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றியதோடு, மாணவர்களிடம் அரசு கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.
ஆனால் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணம் அடுத்த கல்வி ஆண்டில் தான் நடைமுறைக்கு வரும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள், நடப்பு கல்வியாண்டு முதல் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் போராட்டம் நேற்று 25-வது நாளாக நீடித்தது. இதில் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ராமநத்தம் அருகே கொரக்கவாடி அம்மாகுளம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சென்னையில் இருந்து சிதம்பரம் வந்த ஒருவர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 9 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில இருந்த 20 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்தது. தற்போது இரட்டை இலக்கு எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் 16 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 987 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். கொரோனா பாதித்த 85 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 21 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 16 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள சிதம்பரத்தை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 8 பேர் குண மடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 57 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 25 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 52 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.






