என் மலர்
செய்திகள்

கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு ரோடு பகுதியில் தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
கடலூரில் தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் தீவிர பிரசாரம் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தார்
கடலூரில், தி.மு.க. வேட்பாளர் கோ.அய்யப்பன் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடலூர்:
மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கடலூர் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோ.அய்யப்பன் தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர், தற்போது பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
அவர் நேற்று கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோடு, பெண்ணையாறு ரோடு, வேணுகோபாலபும், குண்டுஉப்பலவாடி மெயின்ரோடு உள்பட பல்வேறு பகுதியில் திறந்த ஜீப்பில் சென்றும், நடந்து சென்றும் பொதுமக்களிடம் தனக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். நகராட்சிக்குட்பட்ட 8-வது வார்டு முதல் 14-வது வார்டு வண்ணாரப்பாளையம் பகுதி வரை தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.
அப்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி, சிலிண்டருக்கு மானியம், குடும்பத்தலைவிக்கு ரூ.1000, நகைக்கடன் ரத்து, கல்விக்கடன் ரத்து, பூட்டி கிடக்கும் கடலூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து, தினந்தோறும் பொதுமக்களின் குறைகள் கேட்கப்படும் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை தெரிவித்து வாக்கு சேகரித்தார். முன்னதாக அவர் மறைந்த இளம்வழுதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். பிரசாரத்தில் தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட அவை தலைவர் தங்கராசு, முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி வக்கீல் சந்திரசேகரன், மாவட்ட துணை தலைவர் ரமேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், நாகராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமது இஸ்மாயில், நகர செயலாளர் ராஜா முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் செந்தில், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், த.மு.க. சம்சுதீன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story






