search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
    X
    மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 25-வது நாளாக போராட்டம்

    சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 25-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றியதோடு, மாணவர்களிடம் அரசு கல்வி கட்டணம் வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது.

    ஆனால் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணம் அடுத்த கல்வி ஆண்டில் தான் நடைமுறைக்கு வரும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள், நடப்பு கல்வியாண்டு முதல் குறைக்கப்பட்ட அரசு கல்வி கட்டணத்தை பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவர்களின் போராட்டம் நேற்று 25-வது நாளாக நீடித்தது. இதில் மாணவர்கள் மதிய உணவு இடைவேளையின் போது, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் நடப்பாண்டு முதல் குறைக்கப்பட்ட கல்விக் கட்டணத்தை பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×