என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடலூர் மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதி

    கொரோனா பாதித்த 57 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 25 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 342 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 16 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் அறுவை சிகிச்சைக்கு முன்பு உள்ள சிதம்பரத்தை சேர்ந்த நோயாளி, சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 5 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 979 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்ற நிலையில், நேற்று 8 பேர் குண மடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 57 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 25 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 52 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    Next Story
    ×