என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கடலூர் மாவட்டத்தில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதி

    கொரோனா பாதித்த 85 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 21 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 ஆயிரத்து 358 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், மேலும் 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவர்களில் சென்னையில் இருந்து சிதம்பரம் வந்த ஒருவர், சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 9 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில இருந்த 20 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.

    கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்தது. தற்போது இரட்டை இலக்கு எண்ணிக்கையில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதன்படி நேற்று முன்தினம் 16 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 987 பேர் குணமடைந்து சென்ற நிலையில், நேற்று 6 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். கொரோனா பாதித்த 85 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 21 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 31 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    Next Story
    ×