என் மலர்
கடலூர்
ரூ.19 லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்
ஸ்ரீமுஷ்ணம்:
தமிழகத்தில் வருகிற (6-ந் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டை பகுதியில் பறக்கும் படை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.19 லட்சம் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வேனில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் சிதம்பரம் அருகே உள்ள தேரியூர் பகுதியை சேர்ந்த ஜீவன் (வயது 30). என்பதும் அவர் லால்பேட்டை பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பி விட்டு மீதி உள்ள பணத்தை வங்கிக்கு எடுத்து செல்வதாக கூறினார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் உரிய ஆவணங்கள் இன்றி அந்த பணத்தை எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.19 லட்சத்தை பறக்கும் படை அதிகாரி கள் பறிமுதல் செய்து காட்டுமன்னார்கோவில் தாசில்தார் ராமதாசிடம் ஒப்படைத்தனர்.

கழிவுநீர் கலந்த குடிநீரை எடுத்து வந்து விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகராட்சி 6-வது வார்டு துர்க்கை அம்மன்நகரில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு பழமலை நாதர் நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் வினி யோகம் செய்யப்படுகிறது.
ஆனால் குடிநீர் குழாய், ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், அதில் கழிவுநீர் கலந்து வருகிறது. இந்த நீரை தான் தினந்தோறும் பொது மக்க ளுக்கு அதிகாரிகள் வினியோகம் செய்கிறார்கள். இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன் தலைமையில் சாக்கடை கலந்த குடிநீரை பாட்டிலில் எடுத்து வந்து, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் வந்து, போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததால், அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நல்லூர் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நல்லூர் ஒன்றியம் கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவர் புடையூர், வரம்பனூர், கொத்தனூர், திருப்பயர், நாரையூர், வேப்பூர் கூட்ரோடு, வேப்பூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், பூலாம்பாடி, நிராமணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பயர் கிராமத்திற்கு சென்ற அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பொதுமக்களுக்கு பொன்னாடை அணிவித்து வாக்கு சேகரித்து வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-
விஜயகாந்திற்கு முதல் வெற்றியை கொடுத்தீர்கள். எனக்கும் முதல் வெற்றியை கொடுத்தது விருத்தாசலம் தொகுதி என்ற சரித்திரத்தை ஏற்படுத்தி தரவேண்டும். இந்த ஒரு பெண்ணின் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி. என்னுடைய ஒரு குரல் கோடிக்கணக்கான பெண்களின் குரலாக எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஜாதி இனம் மதம் மொழி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு அனைவரும் ஒரே இனம், ஒரே குலம் என பயணிப்போம். வெற்றியை காண்போம். தொகுதியையும் மக்களையும் முன்னேற்றுவோம். மாபெரும் வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு கொடுத்தது போல முரசு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றியை தந்து முரசு வென்றது என்ற சரித்திரத்தை தாருங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து அவர் திருப்பயர் கிராமத்தில் அமைந்துள்ள சேவியர் உலகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அதிமுக சார்பில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற முருகுமாறன் 3-வது முறையாக களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனை செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் முருகுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனை செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவிக்ரம், நாம் தமிழர் கட்சி சார்பில் நிவேதா, அமமுக சார்பில் எஸ். நாராயணமூர்த்தி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் முருகுமாறன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 50,000
2. அசையும் சொத்து- ரூ. 75,29,346
3. அசையா சொத்து- ரூ. 79,14,000
விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வன் சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 4,50,000
2. அசையும் சொத்து- ரூ. 5,56,880
3. அசையா சொத்து- ரூ. 85,00,000
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.

வீராணம் ஏரி, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவில் ஆகிய பகுதிகள் அடங்கிய தொகுதியாக திகழ்கிறது. இந்த பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழிலாக திகழ்கிறது. மேலும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியாக இத்தொகுதி திகழ்கிறது.
சீரமைக்கப்பட்ட தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீமுஷ் ணம் பேரூராட்சி, காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றியம், காட்டுமன்னார் கோவில் ஒன்றியம், குமராட்சி ஒன்றியம் உள்ளடக்கி காட்டு மன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள்: ஸ்ரீ முஷ்ணம் பேரூராட்சியில் -15 வார்டுகள், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் -18 வார்டுகள், லால்பேட்டை பேரூராட்சியில் - 15 வார்டுகள். கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள். குமராட்சி ஒன்றியம் 36 ஊராட்சிகள் உள்ளன.
1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திமுக 5 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், இந்திய மனித உரிமை கட்சி 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 முறையும், காங்கிரஸ் ஜனநாயக பேரவை 1 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:
காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்வதற்கு ஏதுவாகவும், வெள்ளங்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் நோக்கில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கடலூர் மாவட்டம் மா.ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே ரூ. 387 கோடியில் மதிப்பில் உயர்மட்ட பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் நலன் கருதி காட்டுமன்னார் கோவில் பகுதியிலேயே ஒரு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களுக்கு பேருந்துகள் தங்கு தடையின்றி செல்வதற்கு ஏதுவாக அரசு பணிமனை கொண்டு வரபட்டுள்ளது.

ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையான அதனை ஒரு தாலுக்கா மாற்றப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு உட்பட்ட தேத்தாம்பட்டு பகுதியில் அரசு தொழிற் பயிற்சி மையத்தையும் கூடுவெளி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் கொண்டுவந்து மாணவர்களின் கல்வி தரம் மேம்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியை புதிய ஒன்றிய மாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தங்களுடைய பகுதியில் விளைந்த நெற்பயிர் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்க்கு ஏதுவாக மார்க்கெட் கமிட்டிக்கு ஒரு மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கை காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் புதிய குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவலகமும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டப்பட்டது காட்டுமன் னார்கோவில் பகுதியில் மழை காலத்தில் மிகப்பெரும் பாதிப்பை அளிக்கும் மண வாய்க்கால் குறுக்கே மேல ராதாம்பூர் கிராமத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டது.

நந்திமங்கலம் பூலாமேடு கிராமங்களுக்கு இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு சுமார் 5 கிராம மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
கோரிக்கைகள்
மழைகாலத்தில் வெள்ளத்தினால் காட்டுமன்னார் கோவிலில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரவேண்டும். பெரும்பாளான இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாக்காளர்கள்
மொத்தம் 2,28,721. ஆண்கள் 1,14,202
பெண்கள் 1,14,503, திருநங்கைகள் 16.

1962- எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.),
1967- எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்),
1971- எஸ்.பெருமாள் (தி.மு.க.),
1977- மருதூர் ராமலிங்கம் (தி.மு.க.),
1980- மருதூர் ராமலிங்கம் (தி.மு.க.),
1984- எஸ்.ஜெயசந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்),
1989- ஏ.தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி),
1991- ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி),
1996- மருதூர் இராமலிங்கம் (தி.மு.க.),
2001- டாக்டர் ப.வள்ளல்பெருமான் (காங்கிரசு ஜனநாயக பேரவை),
2006- துரை.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி),
2011- நாக.முருகுமாறன் (அ.தி.மு.க.).
2016- நாக.முருகுமாறன் (அதிமுக)
கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர்:
கடலூர் எஸ்.என்.சாவடி பகுதியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. 18 வயதுக்கு உட்பட்ட குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு இந்த கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 17 வயது சிறுவன் 15 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்றதாக போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அந்த சிறுவன் கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டான்.
இந்த சிறுவன் அன்று முதல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நேற்று இரவு அந்த கூர்நோக்கு இல்லத்தில் உள்ள அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அங்குள்ள காவலாளி சதீஷ்குமார் என்பவர் வழக்கம் போல் கூர்நோக்கு இல்லம் முழுவதும் சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது 17 வயது சிறுவன் தான் வைத்திருந்த போர்வையை கிழித்து ஜன்னலில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுகுறித்து கண்காணிப்பாளர் பிரபாகரனுக்கு தகவல் அளித்தார். கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தூக்கில் பிணமாக தொங்கிய 17 வயது சிறுவன் உடலை கைப்பற்றி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் கூர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திட்டக்குடி அருகே குடும்ப தகராறில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே உள்ள பட்டூர் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி தேவி (வயது 20). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தேவி தற்போது கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த தேவி துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தேவியின் தாய் கன்னிமேரி ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், சக்திவேல் எனது மகளிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் மனமுடைந்து எனது மகள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் தேவியை தற்கொலைக்கு தூண்டியதாக சக்திவேலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்து கொண்ட தேவிக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரவீன்குமார் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக நடிகை காயத்ரி ரகுராம் பிரசாரம் செய்தார்.
ராமநத்தம்:
திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளராக பெரியசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் திட்டக்குடி தொகுதிக்குட்பட்ட பகுதிக்கு சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ராமநத்தம் அடுத்த அடரியில் திட்டக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பெரியசாமிக்கு ஆதரவாக, திரைப்பட நடிகையும், பா.ஜனதா மாநில கலை மற்றும் கலாசார பிரிவு தலைவருமான காயத்ரி ரகுராம், தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், திட்டக்குடி தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாக இருப்பது வருத்தத்துக்குரியது. அதனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் தரமான மருத்துவமனை, தரமான பள்ளி கல்லூரி மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்படும். எனவே வாக்காளர்களாகிய நீங்கள் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து பெரியசாமியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். இதில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன், பா.ம.க. வடக்குஒன்றிய செயலாளர் கோபி, பா.ஜனதா மாவட்ட துணைத்தலைவர் நரேந்திரன், மங்களூர் மேற்கு ஒன்றிய தலைவர் சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
புவனகிரி கிழக்கு ஒன்றியத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிதம்பரம்:
சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் பாண்டியன் எம்.எல்.ஏ. நேற்று புவனகிரி கிழக்கு ஒன்றியத்தில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். முன்னதாக லால்புரம் ஊராட்சியில் அமைந்துள்ள எல்லை காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், பாலுத்தங்கரை, சிலுவைபுரம், மேலமூங்கிலடி, தைய்யாக்குப்பம், காஞ்சாமண்டபம், அம்பலத்தாடிகுப்பம், கீழமூங்கிலடி, வடக்கு தில்லைநாயகபுரம், தில்லைநாயகபுரம், ஏ.மண்டபம், மேல் அனுவம்பட்டு, சி.முட்லூர், தீத்தாம்பாளையம் ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து, தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் கொள்கை பரப்பு துணை செயலாளர் பு.தா.இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், புவனகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசன், பா.ம.க. மாவட்ட செயலாளர் சசிக்குமார், த.மா.கா. இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த், பா.ஜனதா தொகுதி பொறுப்பாளர் ஜனகராஜ், பாலசுப்பிரமணியம், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, தில்ைல செல்வம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லதா ராஜேந்திரன், ராமதாஸ், சொக்கநாதன், நடனமயிலோன், அன்பரசன், சுபாஷ், அண்ணா தொழிற்சங்க உறுப்பினர்கள் சந்திரசேகர், இளங்கோ, எம்.ஜி.எம்.காதர், மாரியப்பன், கோபாலகிருஷ்ணன், பிரேம்குமார், ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, பாலசுப்பிரமணியன், தங்கசாமி, கிருஷ்ணமூர்த்தி, அன்வர் பாய், கருணாகரன், செல்வராஜ், ராஜகோபால், செல்வம், மோகன், ஐ.டி.விங்.வக்கீல் பீமாராவ், ஆனந்த், ஜானகிராமன், பா.ம.க. நிர்வாகிகள் கலைச்செல்வன், ரவி உதயகுமார், ராஜேந்திரன், பா.ஜனதா நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மகளிரணி துணை செயலாளர் சுஜாதா, ரகுபதி, மனோகரன், தேவன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்தார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். நேற்று இவர் விருத்தாசலம் நகர பகுதியில் வயலூர், பாரதிநகர், மாணிக்கவாசகர் நகர், ரெயில்வே காலனி, நாச்சியார்பேட்டை, எம்.ஆர்.கே. நகர், பெரிய கண்டியங்குப்பம், மெயின் ரோடு, ஆலடி ரோடு, புதுப்பேட்டை, காட்டுக்கூடலூர் சாலை, திரு.வி.க. நகர், இந்திரா நகர், கஸ்பா, பெரியார் நகர், பூதாமூர், ஏனாதிமேடு, சி.என்.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீதி, வீதியாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.
பின்னர் செராமிக் தொழிற்பேட்டைக்கு சென்ற அவர், அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து பெரியகண்டியங்குப்பத்தில் வாக்காளர்களிடம் பேசியதாவது:-
முரசு சின்னத்திற்கு வாக்களித்தால் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும். தலைவர் விஜயகாந்த்துக்கு கொடுத்த ஆதரவை தனக்கும் கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். விருத்தாசலம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளிக்கிறேன். விருத்தாசலத்தில் விஜயகாந்த் எம்.எல்.ஏ.வாக இருந்த போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். மேலும் தனது சொந்த செலவில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்தார். இதேபோல் முழுவதுமாக குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
இதில் விருத்தாசலம் நகர செயலாளர் ரமேஷ், தலைவர் ராஜ்குமார், தொகுதி பொறுப்பாளர் ராஜ், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ரத்தினராஜன், மாநில நிர்வாகிகள் சோழன்சம்சுதின், வக்கீல் மணி, மகேந்திரன், நகர பொருளாளர் கெங்காசலம், மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தகோபால், சங்கர், குணவதி, பிரபா, ஜானகி, நாராயணன், நகர நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், சுரேஷ்பாபு, இளங்கோவன், வெற்றிச்செல்வன், சேரன், கருணா, வல்லரசுமணி, மாணிக்கவாசகம், மூர்த்தி, மகேஷ், மோகன், பழனி, ஜெகதீசன், சக்கரபாணி, சபரி, செல்வம், பழனி, விஜயகுமார், மாநில பொறுப்பாளர் பாஸ்கரன், காலிராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில் தொகுதி வி.சி.க. வேட்பாளர் சிந்தனை செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
காட்டுமன்னார்கோவில்:
காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் போட்டியிடுகிறார். இவர் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சன் கொல்லை, கொண்டாயிருப்பு, அல்லியூர், சிறுகாட்டூர், ஆச்சாள்புரம், எய்யலூர், ஈச்சம்பூண்டி, பல்வாய் கண்டன், முட்டம், மோவூர், ஆயங்குடி உள்ளிட்ட 20 கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று, பானை சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெற செய்யும்படி கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து எய்யலூரில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வேட்பாளர் சிந்தனைச் செல்வன் அங்கிருந்த மணமக்கள், அவர்களின் உறவினர்களிடம் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர்கள் முத்துசாமி, ராமலிங்கம், ஒன்றிய பொருளாளர் சண்முகம், அவைத் தலைவர் கருணாநிதி, நகர செயலாளர் கணேசமூர்த்தி, நிர்வாகிகள் கஞ்சன் கொல்லை வெங்கடேசன், புகழேந்தி சதானந்தன், ராமானுஜம், வி.சி.க. சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன், விவசாய அணி மாநில செயலாளர் அக்ரி பசுமை வளவன், தொகுதி செயலாளர் மணவாளன், துணை செயலாளர் ராவணன், ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன், நிர்வாகிகள் வக்கீல் ராதாகிருஷ்ணன், ரவி கஸ்பா பாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரகாஷ், காங்கிரஸ் கட்சி நிர்வாகி கண்ணன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முகமது நுவமான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளராக கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இவர் கடந்த 19-ந் தேதி தனது தம்பி சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
அன்று மாலை சுதீசுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே சுதீஷ் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தன்னை பரிசோதித்து கொண்டார்.
இதற்கிடையில் வேட்பு மனு தாக்கல் செய்த போது இருந்த அதிகாரிகள், வேட்பாளர் பிரேமலதா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பரவி இருக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து வேட்புமனு தாக்கலின் போது பணியில் இருந்த தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
நேற்று காலை விருத்தாசலம் ஷெராமிக் தொழிற்பேட்டையில் பிரேமலதா வாக்கு சேகரித்தார். அப்போது சுகாதாரத்துறை ஆய்வாளர் ராஜா தலைமையிலான மருத்துவ குழுவினர் அங்கு வந்தனர்.
அவர்கள் வேட்பாளர் பிரேமலதாவிடம் உங்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என்றனர். இதற்கு தே.மு.தி.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது பிரேமலதா குறுக்கிட்டு, உணவு இடைவேளையின்போது கொரோனா பரிசோதனைக்கு வருகிறேன் என்றார். இதைத்தொடர்ந்து சுகாதார துறையினர் அங்கிருந்து சென்றனர்.
நேற்று மதியம் 2.30 மணியளவில் பிரேமலதா தனக்கு கொரோனா பரிசோதனை எடுத்துக் கொண்டார். இதன் மாதிரி கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆய்வகத்தில் பிரேமலதாவின் சளி, உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டது. பரிசோதனை முடிவில் பிரேமலதாவுக்கு கொரோனா இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்த தகவலை கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் செந்தில் தெரிவித்துள்ளார்.
இதனையறிந்த தே.மு.தி.க.வினர் உற்சாகம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்டதாக இதுவரை ரூ.2 கோடி பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளதால், போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் 27 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 27 நிலையான கண்காணிப்பு குழுவும், 9 வீடியோ கண்காணிப்பு குழுவும், 9 செலவின கண்காணிப்புகுழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை இந்த குழுவினர் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த கடந்த மாதம் 26-ந் தேதி மாலை முதல் நேற்று மாலை வரை 1 கோடியே 74 லட்சத்து 52 ஆயிரத்து 402 ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதவிர ரூ.36 லட்சத்து 24 ஆயிரத்து 860 மதிப்புள்ள பாத்திரங்கள், சேலை, தொப்பிகள், டி-சர்ட்டுகள், மதுபானம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசு பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் மற்றும் பரிசு பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 262 ஆகும். மேலும் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மாவட்டத்தில் இதுவரை 65 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.