என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகண்டியங்குப்பத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.
    X
    பெரியகண்டியங்குப்பத்தில் பொதுமக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

    விருத்தாசலம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் - பிரசாரத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதி

    விருத்தாசலம் புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் உறுதியளித்தார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் அ.ம.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். நேற்று இவர் விருத்தாசலம் நகர பகுதியில் வயலூர், பாரதிநகர், மாணிக்கவாசகர் நகர், ரெயில்வே காலனி, நாச்சியார்பேட்டை, எம்.ஆர்.கே. நகர், பெரிய கண்டியங்குப்பம், மெயின் ரோடு, ஆலடி ரோடு, புதுப்பேட்டை, காட்டுக்கூடலூர் சாலை, திரு.வி.க. நகர், இந்திரா நகர், கஸ்பா, பெரியார் நகர், பூதாமூர், ஏனாதிமேடு, சி.என்.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீதி, வீதியாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர்.

    பின்னர் செராமிக் தொழிற்பேட்டைக்கு சென்ற அவர், அங்கு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து பெரியகண்டியங்குப்பத்தில் வாக்காளர்களிடம் பேசியதாவது:-

    முரசு சின்னத்திற்கு வாக்களித்தால் சாலை வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நிறைவேற்றித்தரப்படும். தலைவர் விஜயகாந்த்துக்கு கொடுத்த ஆதரவை தனக்கும் கொடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். விருத்தாசலம் புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என உறுதியளிக்கிறேன். விருத்தாசலத்தில் விஜயகாந்த் எம்.எல்.ஏ.வாக இருந்த போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து கொடுத்து இருக்கிறார். மேலும் தனது சொந்த செலவில் குடிநீர் பிரச்சினையை தீர்த்து குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் விநியோகம் செய்தார். இதேபோல் முழுவதுமாக குடிநீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றால் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

    இதில் விருத்தாசலம் நகர செயலாளர் ரமேஷ், தலைவர் ராஜ்குமார், தொகுதி பொறுப்பாளர் ராஜ், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் ரத்தினராஜன், மாநில நிர்வாகிகள் சோழன்சம்சுதின், வக்கீல் மணி, மகேந்திரன், நகர பொருளாளர் கெங்காசலம், மாவட்ட நிர்வாகிகள் ஆனந்தகோபால், சங்கர், குணவதி, பிரபா, ஜானகி, நாராயணன், நகர நிர்வாகிகள் சரவணன், பாலமுருகன், சுரேஷ்பாபு, இளங்கோவன், வெற்றிச்செல்வன், சேரன், கருணா, வல்லரசுமணி, மாணிக்கவாசகம், மூர்த்தி, மகேஷ், மோகன், பழனி, ஜெகதீசன், சக்கரபாணி, சபரி, செல்வம், பழனி, விஜயகுமார், மாநில பொறுப்பாளர் பாஸ்கரன், காலிராஜன், சுந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×