என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    காட்டுமன்னார்கோவில் தொகுதி
    X
    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    ஹாட்ரிக் அடிப்பாரா அதிமுக வேட்பாளர் முருகுமாறன்?- காட்டுமன்னார்கோவில் தொகுதி கண்ணோட்டம்

    அதிமுக சார்பில் இரண்டு முறை தொடர்ந்து வெற்றி பெற்ற முருகுமாறன் 3-வது முறையாக களம் இறங்கியுள்ளார். அவரை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனை செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.
    அதிமுக சார்பில் முருகுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிந்தனை செல்வன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தங்கவிக்ரம், நாம் தமிழர் கட்சி சார்பில் நிவேதா, அமமுக சார்பில் எஸ். நாராயணமூர்த்தி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    அதிமுக வேட்பாளர் முருகுமாறன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 50,000
    2. அசையும் சொத்து- ரூ. 75,29,346
    3. அசையா சொத்து- ரூ. 79,14,000

    விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனை செல்வன் சொத்து மதிப்பு

    1. கையிருப்பு- ரூ. 4,50,000
    2. அசையும் சொத்து- ரூ. 5,56,880
    3. அசையா சொத்து- ரூ. 85,00,000

    கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி கிழக்கு, தெற்கே நாகை மாவட்டமும், மேற்கே அரியலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களையும், வடக்கே புவனகிரி தொகுதியையும் எல்லையாக கொண்டு அமைந்துள்ளது.

    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    வீராணம் ஏரி, திருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் கோயில், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சாமி கோவில் ஆகிய பகுதிகள் அடங்கிய தொகுதியாக திகழ்கிறது. இந்த பகுதியில் விவசாயம்தான் பிரதான தொழிலாக திகழ்கிறது. மேலும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் அதிகம் வசிக்கும் தொகுதியாக இத்தொகுதி திகழ்கிறது.

    சீரமைக்கப்பட்ட தொகுதியில் சிதம்பரம் தொகுதியிலிருந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி சேர்க்கப்பட்டுள்ளது. இத்தொகுதியிலிருந்து அண்ணாமலைநகர் பேரூராட்சி மற்றும் குமராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 4 ஊராட்சிகள் சிதம்பரம் தொகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது ஸ்ரீமுஷ் ணம் பேரூராட்சி, காட்டுமன்னார் கோவில் பேரூராட்சி, லால்பேட்டை பேரூராட்சி, கீரப்பாளையம் ஒன்றியம், காட்டுமன்னார் கோவில் ஒன்றியம், குமராட்சி ஒன்றியம் உள்ளடக்கி காட்டு மன்னார்கோவில் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    தொகுதியில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள்: ஸ்ரீ முஷ்ணம் பேரூராட்சியில் -15 வார்டுகள், காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் -18 வார்டுகள், லால்பேட்டை பேரூராட்சியில் - 15 வார்டுகள். கீரப்பாளையம் ஒன்றியத்தில் 21 ஊராட்சிகள் உள்ளன. காட்டுமன்னார்கோவில் ஒன்றியத்தில் 55 ஊராட்சிகள். குமராட்சி ஒன்றியம் 36 ஊராட்சிகள் உள்ளன.

    1962 முதல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் திமுக 5 முறையும், காங்கிரஸ் கட்சி 2 முறையும், இந்திய மனித உரிமை கட்சி 2 முறையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1 முறையும், காங்கிரஸ் ஜனநாயக பேரவை 1 முறையும், அதிமுக 2 முறையும் வென்றுள்ளது.

    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்:

    காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயர்வதற்கு ஏதுவாகவும், வெள்ளங்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை சேமிக்கும் நோக்கில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கடலூர் மாவட்டம் மா.ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே ரூ. 387 கோடியில் மதிப்பில் உயர்மட்ட பாலத்துடன் கூடிய தடுப்பணை கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    மாணவர்களின் நலன் கருதி காட்டுமன்னார் கோவில் பகுதியிலேயே ஒரு அரசு கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் கிராமங்களுக்கு பேருந்துகள் தங்கு தடையின்றி செல்வதற்கு ஏதுவாக அரசு பணிமனை கொண்டு வரபட்டுள்ளது.

    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையான அதனை ஒரு தாலுக்கா மாற்றப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்கு உட்பட்ட தேத்தாம்பட்டு பகுதியில் அரசு தொழிற் பயிற்சி மையத்தையும் கூடுவெளி பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் கொண்டுவந்து மாணவர்களின் கல்வி தரம் மேம்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது. 

    ஸ்ரீமுஷ்ணம் பகுதியை புதிய ஒன்றிய மாக தரம் உயர்த்தப் பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தங்களுடைய பகுதியில் விளைந்த நெற்பயிர் களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்க்கு ஏதுவாக மார்க்கெட் கமிட்டிக்கு ஒரு மிகப்பெரிய சேமிப்புக் கிடங்கை காட்டுமன்னார்கோவில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் புதிய குற்றவியல் மற்றும் உரிமையியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டது. புதிய தாலுகா அலுவலகமும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் கட்டப்பட்டது காட்டுமன் னார்கோவில் பகுதியில் மழை காலத்தில் மிகப்பெரும் பாதிப்பை அளிக்கும் மண வாய்க்கால் குறுக்கே மேல ராதாம்பூர் கிராமத்தில் தடுப்பணை அமைக்கப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    நந்திமங்கலம் பூலாமேடு கிராமங்களுக்கு இடையே பழைய கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு சுமார் 5 கிராம மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.

    கோரிக்கைகள்

    மழைகாலத்தில் வெள்ளத்தினால் காட்டுமன்னார் கோவிலில் உள்ள கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரவேண்டும். பெரும்பாளான இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாக்காளர்கள் 

    மொத்தம் 2,28,721. ஆண்கள் 1,14,202
    பெண்கள் 1,14,503, திருநங்கைகள் 16.

    காட்டுமன்னார்கோவில் தொகுதி

    1962- எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க.), 
    1967- எஸ்.சிவசுப்பிரமணியன் (இந்திய தேசிய காங்கிரஸ்), 
    1971- எஸ்.பெருமாள் (தி.மு.க.), 
    1977- மருதூர் ராமலிங்கம் (தி.மு.க.), 
    1980- மருதூர் ராமலிங்கம் (தி.மு.க.), 
    1984-  எஸ்.ஜெயசந்திரன் (இந்திய தேசிய காங்கிரஸ்), 
    1989- ஏ.தங்கராசு (இந்திய மனிதஉரிமை கட்சி),
    1991- ராஜேந்திரன் (இந்திய மனிதஉரிமை கட்சி), 
    1996-  மருதூர் இராமலிங்கம் (தி.மு.க.), 
    2001- டாக்டர் ப.வள்ளல்பெருமான் (காங்கிரசு ஜனநாயக பேரவை), 
    2006- துரை.ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), 
    2011- நாக.முருகுமாறன் (அ.தி.மு.க.).
    2016-  நாக.முருகுமாறன் (அதிமுக)
    Next Story
    ×