என் மலர்
கடலூர்
ஒமைக்ரான் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் தியேட்டர்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவல் குறைய தொடங்கிய நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளது. இதனால் அரசு ஊரடங்கில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
மேலும் கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். தியேட்டர்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 சதவீதம் பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன.
இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள 60 சினிமா தியேட்டர்களிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து படம் பார்ப்பதற்கு வசதியாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமரும் வகையில் ஒவ்வொரு இருக்கைக்கும் இடையே ரிப்பன் மூலம் கட்டப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து தியேட்டர்களிலும் கிருமி நாசினி தெளித்தல், தூய்மையாக வைத்திருத்தல் போன்ற தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதுதவிர தியேட்டர்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப நிலை பரிசோதிக்கப்படுவதோடு, சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
பெண்ணாடம் பகுதியில் 3 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் பகுதியில் உள்ள ஒருசில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடைவீதி, அகரம், வடக்கு ரதவீதி ஆகிய இடங்களில் உள்ள 3 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளில் இருந்து மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வடக்கு ராஜவீதியை சேர்ந்த கற்பகம், சக்திவேல், வடக்கு ரத வீதியை சேர்ந்த விருத்தாம்பாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 25-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஆண்டு தென்பெண்ணை, கெடிலம் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தது.
அதன் பின்னர் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்தது. மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து கடும் குளிர் நிலவியது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மீண்டும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இதனால் கடலூர் மாவட்டம் ஆரஞ்சு அலார்ட் விடப்பட்டுள்ளது.
இந்த மழை இன்று அதிகாலை 1 மணி வரை நீடித்தது. இன்று 3-வது நாளாக அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழை நெற்பயிருக்கு நல்லது என்று விவசாயிகள் தெரிவித்தனர். தற்போது நெற்பயிரில் வெள்ளைப்பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் இந்த பூச்சிகளின் தாக்குதல் குறைந்து விடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இதுதவிர பண்ருட்டி, காடாம்புலியூர், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் முந்திரிதோப்புகள் அதிகளவில் உள்ளது. தற்போது முந்திரியில் பூப்பூக்கும் தருணம் ஆகும். எனவே இந்த மழை சிறப்பு வாய்ந்ததாக விவசாயிகள் கருதுகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் குறிஞ்சிப்பாடி, பரங்கிப் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் 25-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்றைய தினத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தில் ஒரு மாதமாக கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு தென் பெண்ணை, கெடிலம் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மிதந்தது.
அதன் பின்னர் மழையின் தாக்கம் ஓரளவு குறைந்தது. மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து கடும் குளிர் நிலவியது. இந்த நிலையில் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. கடலூர் நகர் பகுதியில் கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மீண்டும் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
இந்த மழை இன்று அதிகாலை 1 மணி வரை தொடங்கியது. இன்று 2-வது நாளாக அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, புவனகிரி, சிதம்பரம், விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில் குறிஞ்சிப்பாடி, பரங்கிப் பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

பொதுமக்கள் அதிகம் கூடினால் தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதே தவிர முழுவதுமாக அழிந்து விடவில்லை. ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறி வீரியத்துடன் பரவி வருகிறது. இந்த நோயை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.
தமிழக அரசு அறிவித்துள்ளபடி, நாளை (வெள்ளிக்கிழமை) வரை சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) புத்தாண்டு பிறப்பு, நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
ஆங்கில புத்தாண்டு, பொங்கல் பண்டிகை தொடர்பான விழாக்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ள பொதுமக்கள் அதிக அளவில் கூடினால் நோய் பரவல் அதிகரிக்கும். ஆகவே இந்த விழாக்களில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. மத வழிபாட்டு தலங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில், அந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரம் செய்யாமல், வழிபாட்டு தலங்களுக்குள் வழிபாடு நடத்தலாம்.
அப்போது முக கவசம் அணிய வேண்டும். உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு தான் நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். பொது இடங்களில் காணும் பொங்கல், பொங்கல், ஆற்றுத்திருவிழா அன்று ஆறுகள், கடற்கரைகளில் நடக்கும் விழாக்கள் இந்த ஆண்டும் நோய் பரவலை முன்னிட்டு தடை செய்யப்படுகிறது. ஆகவே மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை தர வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கடலூரில் சிறைக்காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் பணிச்சுமையால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் செல்வக்குமார் (வயது 32). இவர் கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் காவலராக பணியாற்றி வந்தார். தற்போது அவர் சிறைச்சாலையில் உள்ள உணவகத்தில் பணியாற்றினார்.
மனைவி, ஒரு குழந்தையுடன் சிறைச்சாலை எதிரே உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு சென்ற அவர், வீட்டின் மின்விசிறியில் தூக்குப்போட்டுக்கொண்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பணிச்சுமையா?சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அவர் பணிச்சுமை காரணமாக இறந்தாரா? அல்லது குடும்ப பிரச்சினை காரணமாக இறந்தாரா? என்பது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மத்திய சிறையில் நேற்று மதியம் வரை சிறைத்துறை டி.ஐ.ஜி. ஆய்வு செய்து விட்டு சென்றார். அதன்பிறகு சிறையில் கைதி ஒருவர் தற்கொலை முயற்சியிலும், சிறைக்காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நடந்து இருப்பது சிறைத்துறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நிலத்தகராறில் டிராக்டர் ஏற்றி விவசாயி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேத்தியாத்தோப்பு:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு போலீஸ் சரகம் சக்திவளாகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 45). விவசாயி.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு உள்ளது. இது தொடர்பாக 2 பேரின் குடும்பத்தினரும் அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் முன்விரோதம் உள்ளது. நேற்று மாலை ராமதாஸ் அந்த பகுதியில் உள்ள காளியம்மன்கோவில் அருகே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீதர், பரமசிவம், அதே பகுதியை சேர்ந்த மகாராஜன் ஆகியோர் அங்கு வந்தனர்.
அப்போது நிலத்தகராறு குறித்து மீண்டும் பிரச்சினை எழுந்தது. உடனே அங்குள்ளவர்கள் சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். ஆனாலும் அதே இடத்தில் ராமதாஸ் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
இதனை அறிந்த ஸ்ரீதர் தனது டிராக்டரை அங்கு ஓட்டிவந்தார். பின்னர் ராமதாஸ் மீது டிராக்டரை மோத செய்தார். இதில் சம்பவ இடத்திலேயே ராமதாஸ் துடிதுடித்து இறந்தார்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதுகுறித்து ஒரத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இறந்துபோன ராமதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீசார் ஸ்ரீதர், அவரது தந்தை பரமசிவம் மற்றும் மகாராஜன் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து தேடி வருகிறார்கள்.

திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
திட்டக்குடி புது தெருவில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கம்மாபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காமராஜ் தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். அப்போது அங்கு வந்த ஒருவர், காமராஜ் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றார். இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் ஒருவர் திருடிச்செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுப்பேட்டை:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் புதுப்பேட்டை கடைவீதி, அம்மாபேட்டை, அங்கு செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது புதுப்பேட்டை கடைவீதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் (வயது 55) என்பதும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்த முத்துக்குமரன் இதேபோல் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால், நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளை செய்துள்ளார்.
சிதம்பரம் :
கடலூர் மாவட்டம் சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன். பொற்கொல்லரான இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 2 கிராம் 790 மில்லி தங்கத்தில் வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து அசத்தியுள்ளார்.
சிறியளவில் செய்த வேளாங்கண்ணி தேவாலயத்தை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பார்த்து ரசித்து சென்றனர். முத்துக்குமரன் இதேபோல் தங்கத்தில் குறைந்த கிராமில் தாஜ்மஹால், நடராஜர் கோவில் உள்ளிட்டவைகளை செய்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்திய 1329 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க உதவி எண்களையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் அறிவித்து உள்ளார்.
அதன்படி பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் அடிப்படையில் போலீசார் ரோந்து சென்று பொது இடங்களில் மது அருந்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது வரை 580 பேரை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இருப்பினும் 28.9.2021 முதல் நேற்று முன்தினம் வரை இந்த விதிமுறைகளை மீறி பொது இடங்களில் மது அருந்திய 1329 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் என கூறி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த திட்டக்குடி பெண் கைது செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் ஒரு பெண் 4 பேருடன் பழைய மகப்பேறு பிரிவுக்கு சென்றார். பின்னர் அந்த பெண், மேஜையில் இருந்த ‘ஸ்டெதஸ்கோப்பை’ எடுத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க தொடங்கியதாக தெரிகிறது. மேலும் அங்கு பணியில் இருந்த செவிலியர்களிடம் அதிகார தோரணையில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த செவிலியர் ஒருவர், இது பற்றி நிலைய மருத்துவ அலுவலர் பாலகுமரனிடம் தெரிவித்தார். இதையடுத்து அவரும், சக டாக்டர்களும் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை பிடித்து கடலூர் புதுநகர் போலீசில் டாக்டர்கள் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திட்டக்குடி அருகே செய்யூர் வடக்கு தெருவை சேர்ந்த வெண்ணிலா(வயது 35) என்பதும், இவர் அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை டாக்டர் என்று கூறி திருமணம் செய்ததாகவும் தெரிகிறது. திருமணத்திற்கு வெண்ணிலாவின் உறவினர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்களுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்ததாகவும், அப்போது தன்னை டாக்டர் என்று நிரூபிக்க கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து, மருத்துவம் பார்த்ததும் தெரிய வந்தது. இதையடுத்து நிலைய மருத்துவ அலுவலர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெண்ணிலாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.