என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
பெண்ணாடம் பகுதி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கிய 3 பேர் கைது
பெண்ணாடம் பகுதியில் 3 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் பகுதியில் உள்ள ஒருசில பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெண்ணாடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்அடிப்படையில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் நேற்று பெண்ணாடம் பகுதி பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது கடைவீதி, அகரம், வடக்கு ரதவீதி ஆகிய இடங்களில் உள்ள 3 பெட்டிக்கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து 3 கடைகளில் இருந்து மொத்தம் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை விற்பனை செய்த வடக்கு ராஜவீதியை சேர்ந்த கற்பகம், சக்திவேல், வடக்கு ரத வீதியை சேர்ந்த விருத்தாம்பாள் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






