என் மலர்
கடலூர்
கடலூர்:
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தற்போது பல்வேறு துறைகளில் உள்ள பணிக்காலியிடங்கள் அடங்கிய தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
தேர்வாணைய இணையதளம் வாயிலாக 07.03.2022 வரை விண்ணப்பிக்கலாம். மேற்குறிப்பிட்ட தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்கவுள்ள விண்ணப்பதாரர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் 23.02.2022 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை பகல் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்புக் கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 04142 290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகி வரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அருகே திருநகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தயாமணி (வயது 23). காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். வளைகாப்புக்காக தாய் வீட்டிற்கு சென்ற தயாமணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று நடராஜன் தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.
இதேபோல வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் அபிஷா. பாலிடெக்னிக் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். 23 ந்தேதி முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் தந்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள் அப்துல் கலாம் (வயது 45) ஜெய்த்தூர். (48). இவர்கள் கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கட்டிட வேலை செய்வதற்காக கடந்த சில மாதத்திற்கு முன்பு வந்தனர்.
சம்பவத்தன்று காராமணிக்குப்பம் பகுதியில் ஜெய்தூர் என்பவர் டீ குடிக்க சைக்கிளில் சென்றபோது திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
இதனைத்தொடர்ந்து சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் சோதனை செய்து ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே கோண்டூர் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வாணி (வயது 38).
சம்பவத்தன்று கோபாலகிருஷ்ணன் தனது வேலையை முடித்து வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் சமையலறையில் புடவையால் வாணி தூக்கு மாட்டி மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் கோபாலகிருஷ்ணன், மகள் காவியா ஸ்ரீ ஆகியோர் உடனடியாக வாணியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர்.
அப்போது வாணி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது ஆடூர் பூங்குடி கிராமம். இங்கு கருமாரியம்மன் கோவில் உள்ளது.
நேற்று இரவு வழக்கம்போல் நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.
இந்த கோவிலின் அருகே உள்ள செல்வமுத்துக்குமரன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதேபோல பக்கத்து ஊரான செங்கல்மேட்டில் உள்ள மரியம்மன் கோவிலிலும் கதவின் பூட்டை உடைத்து அங்கும் அம்மன் சிலையிலிருந்து தங்க தாலி திருடப்பட்டிருந்தது.
மேலும் இந்த கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது. அதே போல பண்ணப்பட்டு மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது.
இதுகுறித்து கோவிலின் நிர்வாகிகள் கொடுத்த புகார்களின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர். 4 கோவில்களில் தொடர்ந்து நடந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ந் தேதி ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
அப்போது வாக்கு எண்ணிக்கையின்போது கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டு வாக்குச்சாவடி எண் 4-ல் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. இதையடுத்து மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டது.
அதன்படி புவனகிரி பேரூராட்சி 4-வது வார்டுக்கான திருவள்ளுவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1,170 வாக்காளர்களை கொண்ட இந்த வார்டில் 814 பேர் வாக்களித்தனர். ஆனால் கடந்த 19-ந் தேதி நடந்த தேர்தலில் 927 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.
பின்னர் வாக்குப்பதிவு நடந்த அதே வாக்குச்சாவடி மையத்திலேயே இரவு 7 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்ட லலிதா 622 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
4-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 5 பேர் போட்டியிட்டனர். இதில் வி.சி.க. வேட்பாளரை தவிர அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
மற்ற வார்டுகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் தி.மு.க. 8 இடங்களிலும், அ.தி.மு.க.- 4, காங்கிரஸ் -3, சுயேச்சை 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. தற்போது மறுவாக்குப்பதிவில் தி.மு.க. கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. இதன் மூலம் தி.மு.க. கூட்டணி புவனகிரி பேரூராட்சியை கைப்பற்றியது.






