என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை நடந்த கோவில்களை படத்தில் காணலாம்.
    X
    கொள்ளை நடந்த கோவில்களை படத்தில் காணலாம்.

    சிதம்பரம் அருகே 4 கோவில்களில் துணிகர கொள்ளை

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 4 கோவில்களில் நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது ஆடூர் பூங்குடி கிராமம். இங்கு கருமாரியம்மன் கோவில் உள்ளது.

    நேற்று இரவு வழக்கம்போல் நிர்வாகிகள் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அப்போது அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

    இந்த கோவிலின் அருகே உள்ள செல்வமுத்துக்குமரன் கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு திருடப்பட்டிருந்தது. இதேபோல பக்கத்து ஊரான செங்கல்மேட்டில் உள்ள மரியம்மன் கோவிலிலும் கதவின் பூட்டை உடைத்து அங்கும் அம்மன் சிலையிலிருந்து தங்க தாலி திருடப்பட்டிருந்தது.

    மேலும் இந்த கோவிலில் இருந்த 2 உண்டியல்களும் உடைக்கப்பட்டு பணம் திருடு போயிருந்தது. அதே போல பண்ணப்பட்டு மாரியம்மன் கோவிலிலும் கொள்ளை நடந்து உள்ளது.

    இதுகுறித்து கோவிலின் நிர்வாகிகள் கொடுத்த புகார்களின் பேரில் சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரமேஷ்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    கொள்ளையில் ஈடுபட்ட மர்மஆசாமிகளை தேடி வருகின்றனர். 4 கோவில்களில் தொடர்ந்து நடந்த கொள்ளை சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×