என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    சிதம்பரம் அருகே 2 பெண்கள் மாயம்

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 2 பெண்கள் மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே திருநகரை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி தயாமணி (வயது 23). காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். வளைகாப்புக்காக தாய் வீட்டிற்கு சென்ற தயாமணி அதன்பிறகு வீடு திரும்பவில்லை என்று நடராஜன் தந்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

    இதேபோல வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரது மகள் அபிஷா. பாலிடெக்னிக் படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார். 23 ந்தேதி முதல் அவரை காணவில்லை. இது குறித்து பெற்றோர் தந்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×