என் மலர்
உள்ளூர் செய்திகள்

மீன் குஞ்சுகள் குளத்தில் விடும் பணிகள்
மீன் உற்பத்தியினை அதிகரித்திட மீன் குஞ்சுகள் குளத்தில் விடும் பணிகள்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
கடலூர் திருப்பணாம்பாக்கம் மாரியம்மன் கோவில் குளத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கடலூர்:
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையால் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் 2020 2021 கீழ் கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி குளங்களில் மீன் உற்பத்தியினை அதிகரித்திட மீன்குஞ்சு இருப்பு செய்தல் திட்டத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட 25 லிட்டர் இலக்கில் ரூ. 2 லட்சத்து 43 ஆயிரம் செலவு செய்யப்பட்டது. தற்போது கூடுதலாக 50 கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 55 ஊராட்சி குளங்கள் தெரிவு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து கடலூர் திருப்பணாம்பாக்கம் மாரியம்மன் கோவில் குளத்தில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்து திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அப்போது ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் முருகன் குமரேசன் ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி முருகன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Next Story






