என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. கவுன்சிலர் மாயம்
பண்ருட்டி அருகே தி.மு.க. கவுன்சிலர் மாயமானதால் பரபரப்பு
பண்ருட்டி அருகே தி.மு.க. கவுன்சிலர் வெற்றி பெற்றவுடன் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வெற்றியை கொண்டாட சென்றதால் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொரப்பாடி பேரூராட்சி கவுன்சிலர் தேர்தல் கடந்த 19-ந்தேதி நடந்தது. இதில் தி.மு.க. 8இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை பெற்றது.
அ.தி.மு.க. 6 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் பத்மநாபன் என்பவர் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட உடன் காணாமல் போனார். இவரை யாரோ கடத்தி சென்று விட்டதாக வதந்தி காட்டுத்தீ போல பரவியது. இதுபற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடலூர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவுபடி அவர் எங்கு இருக்கிறார் என தேடும் பணி தீவிரமாக நடந்தது.
இதற்கிடையில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பத்மநாபன் வெற்றி பெற்றவுடன் பெங்களூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு வெற்றியை கொண்டாட சென்றதாக தெரிய வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






