என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாமி ஊர்வலம் நடத்துவது குறித்து சமாதான பேச்சுவார்த்தை
கடலூர் அருகே சாமி ஊர்வலம் நடத்துவது குறித்து சமாதான பேச்சுவார்த்தை
கடலூர் அருகே பொது வழியில் சாமி கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஊர் பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே செம்மங்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியிலிருந்து கடந்த மாசி மகத்தன்று சாமி ஊர்வலம் பொது வழியில் செல்வதற்கு தயாரானார்கள். அப்போது மற்றொரு தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுவழியில் சாமி ஊர்வலம் கொண்டு செல்லக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்
இதனைத்தொடர்ந்து வருவாய் துறையினர் மற்றும் போலீசார் பொது வழியில் சாமி கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை என கூறி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் திருமேனி மற்றும் ஊர் பொதுமக்கள் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.
அப்போது இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.
இன்று காலை கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினர் நேரில் வரவழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு கலந்துகொண்டு இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
மேலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டுக்கொண்டார். அப்போது தாசில்தார் பூபாலச்சந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து இரு தரப்பினர் இடையே தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Next Story






