search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காசிவிஸ்வநாதர் கோவில்"

    • 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
    • தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பிரசித்தி பெற்ற மற்றும் பழமையான கோவிலான தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

    இவ்வாண்டுக்கான திருவிழா கடந்த 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும், கொடியேற்றத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.

    தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்புப் பூஜைகள் அதனைத் தொடர்ந்து மண்டகப்படி பூஜைகள் நடைபெற்றன.

    விழாவின் 9-ம் நாளான இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு புறப்பட்ட உலகம்மன் தேர் 4 ரத வீதிகள் வழியாக வலம் வந்து 10.15 மணிக்கு நிலையம் வந்தடைந்தது.

    தேரினை ஏராளமான பக்தர்கள் திருவாசகம் பாடி, கோஷங்கள் எழுப்பி, பாடல்கள் பாடி, மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தில் பங்கு பெற்று தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

    • காசிவிஸ்வநாதர் கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தென்காசி:

    பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் பெயரில் அர்ச்சனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொரு ளாளர் சுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் டேவிட் நாடார், துணை செயலாளர் திருமலைகுமார், பொதுக்குழு உறுப்பினர் பாலசுப்ரமணியன், உடையார், சாம்பவர்வடகரை கிளை தலைவர் மோகன், பரமசிவன், இசக்கிமுத்து நாடார், முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள தொன்னை குருசாமி சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட 300ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரத்தில் மிகவும் பழமையான இக்கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புணரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 30-ந்தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.

    2 நாட்கள் மூன்றுகால யாக பூஜைகள் நடைபெற்று. நேற்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் தீபாரா தனை பூர்ணாகுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தி யங்கள் முழங்கயாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் வேதவிற்பன்னர் கள் ஊர்வலமாக விமானங்களுக்கு எடுத்து வந்த னர். மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவாத தெய்வங்கள் அனைத்திற்கும் வேத மந்திரம் முழங்க சிவாய நம மந்திரம் ஒலிக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவா மிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீப ஆராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர். சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    • சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
    • சுற்றுலா பயணிகளும் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கிய கோவில்களில் ஒன்றான காசி விஸ்வநாதர் கோவிலில் நேற்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

    இதில் தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவிகளில் குளிக்க வந்திருந்த வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற சனி பிரதோஷ விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் கூட்டம் கோவில் முழுவதும் அலைமோதியதால் தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாதர் கோவில் திருக்கல்யாண திருவிழா இன்று அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருகிற 22-ந் தேதி வரையில் திருவிழா நடைபெறுகிறது.

    வீதி உலா

    அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து காட்சி அளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. வருகிற 20-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 22-ந் தேதி காலையில் யானை பாலம் தீர்த்தவாரி மண்டபத்தில் அம்பாள் தபசு காட்சி எழுந்தருள்கிறார்.

    தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு தென்காசி ரத வீதியில் காசி விஸ்வநாதர் உலகம்மனுக்கு தபசு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகள் இந்து சமய அறநிலையத் துறையினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    ×