search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்
    X

    கோபுர கலத்தில் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்று வதையும், கலந்து கொண்ட பொதுமக்களையும் படத்தில் காணலாம்.

    காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

    • ராமநாதபுரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
    • கடந்த 30-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் நீலகண்டி ஊரணி மேல் கரையில் அமைந்துள்ள தொன்னை குருசாமி சித்தரால் வழிபாடு செய்யப்பட்ட 300ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட னர்.

    ராமநாதபுரத்தில் மிகவும் பழமையான இக்கோவிலில் கடந்த ஒரு வருடத்திற்கு முன் புணரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 30-ந்தேதி வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் யாகாசாலை பூஜைகள் தொடங்கியது.

    2 நாட்கள் மூன்றுகால யாக பூஜைகள் நடைபெற்று. நேற்று நான்காம் கால யாக சாலை பூஜைகள் தீபாரா தனை பூர்ணாகுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மங்கள வாத்தி யங்கள் முழங்கயாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர் வேதவிற்பன்னர் கள் ஊர்வலமாக விமானங்களுக்கு எடுத்து வந்த னர். மூலஸ்தானம், ராஜ கோபுரம், பரிவாத தெய்வங்கள் அனைத்திற்கும் வேத மந்திரம் முழங்க சிவாய நம மந்திரம் ஒலிக்க கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபி ஷேகம் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவா மிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம், தீப ஆராதனை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில் நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியார் செய்திருந்தனர். சுமார் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×