என் மலர்
கடலூர்
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்தபுதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 61). இவர் நேற்று மாலை 108 எண்ணுக்கு தொடர்பு கொண்டு புதுப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார். இதுபற்றி புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர் அப்போது போலீஸ் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிவப்பிரகாசத்தை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வார்டு கவுன்சிலர் ராஜவேல் நகராட்சி அலுவலகத்தில் பல முறை நேரில் புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து சாக்கடை நீர் சாலையில் வழிய தொடங்கியது.
கவுன்சிலர் ராஜவேல் கூறுகையில் எங்கள் வார்டுகளை நகராட்சி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. எனவே இன்று முதல் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து பணிகளையும் நகராட்சி நிர்வாகத்தை புறக்கணித்து இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கழிவுநீர் வாய்கால்களை தூர்வாரும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என கூறினார்.
வடலூர் நகர அ.தி.மு.க. சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, ஜூஸ், வெள்ளிரிக்காய், மோர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வடலூர் நகர செயலாளர் சி.எஸ்.பாபு வரவேற்றார். அண்ணா தொழிற் சங்க இணை செயலாளர் சூரியமுர்த்தி, மாவட்ட வக்கில் பிரிவு ராஜசேகர், மாவட்ட பொருளாளர் தேவநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் சுப்பிரமணியன், நெய்வேலி நகர செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர் பஷ்யம், ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கிருஷ்ணன், வடலூர் நகர நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி பாலு, ராஜாராமன், நடராஜ், வேல்முருகன், ராமமுர்த்தி, பக்தவச்சலம்,சேகர்,கண்ணன், செந்தமரைகண்ணன், மோகன், மல்லிகா, அம்மு மணிகண்டன், லோகு, அந்தோணி, முத்துலிங்கம் வேல்முருகன், வார்டு செயலாளர்கள் ஆனந்த், மாயவேல், செல்வராசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வார்டு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது, ரூ.1லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும்.
அதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது, எதிர் வரும் 15.08.2022 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக கீழ்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.15 வயது 35 வயது வரை உள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1 ந்தேதி 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் மார்ச் 31, 2022 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும். கடந்த நிதி ஆண்டில் ( 202122 ) அதாவது 01.04.2021 முதல் 31.03.2022 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். ( சான்று இணைக்கப்பட வேண்டும்)
விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கிற் கொள்ளப்படும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 10.05.2022 அன்று மாலை 4.00 மணி ஆகும்.
விருப்பமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். மேலும் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1-ந் தேதி தொடங்கும் காலாண்டிற்கு படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
10-ம் வகுப்பு (தோல்வி), பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து, மார்ச்சு 31ஆம் தேதி ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித் தொகை வழங்கப்படுகிறது.மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித் தொகையினைப் பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.03.2022 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். உதவித்தொகை விண்ணப்பப் படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, கடலூர், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவச மாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனு தாரர்கள் மே 31-ந் தேதி வரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலை வாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கணக்குப் புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
பண்ருட்டி அருகே ஆண்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. செங்கல் சூளை நடத்திவருகிறார். இவரது மகள் தமிழ்செல்வி (வயது 23). கல்லூரி படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துவந்தார்.
சம்பவத்தன்று எலி மருந்தை சாப்பிட்டு தமிழ்செல்வி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு தமிழ்செல்வி உயிரிழந்தார்.
இது குறித்து வேலு தந்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் புஸ்பராஜ் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






