என் மலர்tooltip icon

    கடலூர்

    சென்னை, மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட 9 ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அலுவலகம் முன்பு பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கடலூர்:

    சென்னை, மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட 9 ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அலுவலகம் முன்பு பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன் ரவிச்சந்திரன், மகேஷ், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

    இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழ. தாமரைக்கண்ணன், தேவதாஸ் படையாண்டவர், மாநில நிர்வாகிகள் சந்திரசேகரன், கோபிநாத், ரத்தினவேல், சகாதேவன், ரமேஷ், மதி, அன்பு, பால்ராஜ், ஆனந்த், ஆறுமுகம், பிரேம், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணைமேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் அப்புறப்படுத்தினர்.

    கடலூர்:

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டி விழிப்புணர்வு பேரணி கடலூர் கடற்கரை சாலையில் நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் தாமரைச்செல்வன், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தார். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் ஊர்வலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    பின்னர் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணைமேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி அதிகாரிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள் அப்புறப்படுத்தினர்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா செந்தில், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் சாய்துனிஷா சலீம், ஏ.ஜி.எம்.வினோத்குமார், கிரேசி, தஷ்ணா, சுரேஷ்குமார், சரவணன், செந்தில்குமாரி இளந்திரையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காட்டுமன்னார்கோவில் அருகே பேக்கரி குடோனில் தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்த வருகின்றனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே பாலக்கரையில் வேலு என்பவருக்கு சொந்தமான பேக்கரிகடை உள்ளது. இந்த கடைக்கு இனிப்பு, கார வகைகள் தயாரிப்பதற்காக அருகிலேயே குடோன் உள்ளது. நேற்று இரவு இந்த குடோனில் இருந்து புகை பரவியது. இதுகுறித்து காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் கொளஞ்சிநாதன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அருகில் இருந்த மற்ற கடைகள், வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கம்மாபுரம் சின்ன குட்டி மூளை பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 70). இவர் நேற்று இரவு கோட்டிமேடு அருகே சிதம்பரம்-விருத்தாசலம் செல்லும் சாலையை கடக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. 
    இதில் தூக்கி வீசப்பட்ட இவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் கலியபெருமாளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது கலியபெருமாள் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரவு பானக பூஜையும், நாளை (17 -ந்தேதி) மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18 -ந்தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது.
    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இந்த கோவிலில் வருடம்தோறும் சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 ஆண்டுகளாக தொற்று பரவல் காரணமாக பிரம்மோற்சவம் சாதாரணமாக நடைபெற்று முடிந்தது. இதனை தொடர்ந்து தேவநாதசுவாமி கோவிலில் 12 நாட்கள் சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 7-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

    அதன் பின்னர் ஹம்ச வாகனத்தில் சாமி வீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்‌.

    கடந்த 11-ந் தேதி ஸ்ரீ வேணுகோபாலன் சேவை தங்க விமானத்திலும், சே‌ஷ வாகனத்திலும், தங்கப்பல்லக்கில் நாச்சியார் திருக்கோலத்திலும் சாமி வீதி உலா நடைபெற்றது. 12- ந்தேதி இரவு முக்கிய விழாவாக கருட மஹா உற்சவத்தன்று கருடவாகனத்தில் ஸ்ரீ தேவநாத சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இரவு வெள்ளி குதிரை வாகனத்தில் தேவநாத சுவாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் காலை 6.10 மணிக்கு நடந்தது. திருத்தேரில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாத சுவாமி அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் “கோவிந்தா கோவிந்தா” என்ற பக்தி கோ‌ஷத்துடன் பொதுமக்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேரோட்ட விழாவில் விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    இரவு பானக பூஜையும், நாளை (17 -ந்தேதி) மட்டையடி மற்றும் தங்க பல்லக்கில் வீதி உற்சவமும், இரவு தெப்ப உற்சவம், 18 -ந்தேதி காலை துவாதச ஆராதனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இணையதள வசதி செய்து தர வேண்டும் என ஐக்கிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
    சிதம்பரம்:

    தமிழ்நாடு ஐக்கிய ஜனதா தளம் மாநில தலைவர் மணி சிதம்பரம் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாவட்டந்தோறும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். கிராமங்களில் உள்ள மதுபானக்கடைகளை மூட வேண்டும். இலவசங்களை தவிர்த்து மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    மதுவால் வரும் வருமானத்தை வைத்து மக்களுக்கு இலவச பொருள்களை வழங்கக்கூடாது. மதுவால் வரும் வருமானத்தை வைத்து, தாலிக்கு தங்கம் கொடுக்க வேண்டாம். கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் கடன் தள்ளுபடி என்று அறிவிக்கப்பட்டது. யாரும் பயன்பாடு இல்லை. எனவே 5 பவுனுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 5 பவுனுக்கு கடனை தள்ளுபடி செய்து மீதமுள்ள தொகையை வசூலிக்க வேண்டும்.

    கூட்டுறவு வங்களில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறார்கள், வசதி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கடன் வழங்கப்படுகிறது. அரசின் 90 சதவீத சலுகைகள் வசதி படைத்தவர்கள்தான் அனுபவிக்கிறார்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கிராமப்புறங்களில் பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இணையதள வசதி செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கோவில் நிர்வாகம் சார்பில் தேரடி வீதியில் நின்று கொண்டிருந்த தேரை கோவில் ஊழியர்கள் முழுவதுமாக சுத்தம் செய்து வண்ண மலர்களாலும், வண்ண ஆடைகளிலும் அலங்காரம் செய்யப்பட்டு கம்பீரமாக உள்ளது.
    கடலூர்:

    கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடந்தோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8- ந் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா நடைபெற்று வருகின்றன.

    கடந்த 12 -ந் தேதி கருட சேவை உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து நாளை (16 -ந் தேதி) முக்கிய விழாவான தேர் திருவிழா காலை 6.10 மணிக்கு மேல் தொடங்கப்பட்டு நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து, திருவிழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் தேரடி வீதியில் நின்று கொண்டிருந்த தேரை கோவில் ஊழியர்கள் முழுவதுமாக சுத்தம் செய்து வண்ண மலர்களாலும், வண்ண ஆடைகளிலும் அலங்காரம் செய்யப்பட்டு கம்பீரமாக உள்ளது.

    நாளை காலை ஸ்ரீதேவி பூதேவியுடன் தேவநாதசுவாமி தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.

    மேலும் முக்கிய மாட வீதியில் உள்ள கடைகள் உள்ளிட்டவைகளை கோவில் நிர்வாகம் சார்பில் அகற்றி தேர்த்திருவிழா நடைபெறுவதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டு உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கடலூர் அருகே தனியார் பஸ்சை மறித்து மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே ரெட்டிச்சாவடி புதுக்கடை பகுதியில் தனியார் பஸ் பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் திடீரென்று தனியார் பஸ்சை கட்டையை காண்பித்து வழிமறித்தார். பின்னர் ஏன் பஸ்சை வேகமாக ஓட்டுகிறீர்கள் என கேட்டு ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தினார்.

    இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் நந்தகுமாரவேல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
    பண்ருட்டியில் சிறுமியின் திருமண நிச்சயதார்த்தத்தை தடுத்து நிறுத்திய போலீசார், சிறுமியின் பெற்றோரிடம் 21 வயதில்தான் திருமணம் நடத்த வேண்டும் என்று எச்சரித்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருசூக கட்டமுத்து பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகள் லட்சுமி (வயது 17). இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் பண்ருட்டி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    இந்த தகவல் அவசர போலீஸ் 100 மூலம் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீசார் திருமண மண்டபத்துக்கு சென்றனர். அப்போது சிறுமியின் பெற்றோரிடம் 21 வயதில்தான் திருமணம் நடத்த வேண்டும். இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர்.

    அதனை தொடர்ந்து சிறுமியின் திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் காயமடைந்தது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பம் சேர்ந்தவர் கபிலன் (வயது 37). அவரது மனைவி மங்காத்தா (28) இவர்களது மகன் சர்வேஷ் (4). இவர்கள் 3 பேரும் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் காராமணிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென்று மோதியதில் கணவன் கபிலன், மனைவி மங்காத்தா மற்றும் சிறுவன் சர்வேஷ் ஆகிய 3 பேரும் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் தெற்கு மாவட்டம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளனர்.
    கடலூர்:

    அ.தி.மு.க. புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி கடலூர் தெற்கு மாவட்டம், பண்ருட்டி தெற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வருமாறு:-

    ஒன்றிய அவைத்தலைவர்- குருநாதன், ஒன்றியச் செயலாளர்- கமலக்கண்ணன், ஒன்றிய இணைச் செயலாளர் -ஜெயமதி இராஜமணி கண்டன், ஒன்றிய துணைச் செய லாளர்கள்-தேவி மாணிக்கவேல், அண்ணாமலை, ஒன்றியப் பொருளாளர்- குருமூர்த்தி, மாவட்டப் பிரதிநிதிகள்-தமிழ்செல்வி, கருணாநிதி, கோவிந்தவேலு.

    கடலூர் மேற்கு ஒன்றிய புதிய அ.தி.மு.க. நிர்வாகிகள் வருமாறு:-

    ஒன்றிய அவைத்தலைவர்- ஆனந்தன், ஒன்றியச் செய லாளர்-வினோத், ஒன்றிய இணைச் செயலாளர்- சரளா, ஒன்றிய துணைச் செயலாளர்கள்-வளர்மதி பழனிவேல், காரை மு. சண்முகம், ஒன்றியப் பொருளாளர்-சீத்தாராமன், மாவட்டப் பிரதிநிதிகள்-மலர்கொடி சேட்டு, குருநாதன், மாயவேலு.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    விருத்தாசலம் அருகே என்.எல்.சி. அதிகாரி வீட்டில் நடந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் குறிஞ்சிப்பூ தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவர் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 2-வது தெர்மலில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் தனது மனைவியுடன் கடந்த வாரம் சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்காக சென்றிருந்தார். இன்று அதிகாலை வேலாயுதம் ஊர் திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை கண்ட வேலாயுதம் அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ½ கிலோ வெள்ளி நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் வேலாயுதம் புகார் செய்தார்.

    போலீசார் மோப்பநாயுடன் விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.எல்.சி. அதிகாரி வீட்டில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×