என் மலர்
உள்ளூர் செய்திகள்

அதிமுக
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம்- கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சியில் இன்று அவசர கூட்டம் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. அப்போது பா.ம.க கவுன்சிலர் சரவணன் என்பவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் மாநகராட்சிக்கு கூட்டத்திற்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த கண்ணன், அருள் பாபு ஆகியோர் இதே கோரிக்கையை கண்டித்து சைக்கிளில் மாநகராட்சி கூட்டத்தில் வந்தனர். பின்னர் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அதிமுக கவுன்சிலர்கள் சங்கீதா வசந்தராஜ், ஏ.ஜி.எம். வினோத்குமார், தஷ்ணா உள்ளிட்ட 5 கவுன்சிலர்கள் திடீரென்று சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து திடீரென்று வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அதிமுக கவுன்சிலர் சங்கீதா வசந்த ராஜ் கூறுகையில்,கடலூர் மாநகராட்சி சொத்து வரி உயர்வை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம் .மேலும் திமுக தேர்தல் அறிக்கையிலும் சட்டமன்றக்கூட்டத் தொடரிலும் சொத்துவரி ஏற்றபடாது என வாக்குறுதி அளித்தனர்.
ஆனால் தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது இதனால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைவார்கள் ஆகையால் சொத்து வரியை உடனடியாக குறைக்க வேண்டும் என கூறி அங்கிருந்து சென்றனர்.இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
Next Story






