என் மலர்
கடலூர்
- சிதம்பரத்தில் இன்று பரபரப்பு 2 அரசு பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது.
- மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது. அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது. உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார்.
இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணிநோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை. உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- பண்ருட்டி அருகே வீட்டை விட்டு சென்ற பெண் காணவில்லை.
- அதிர்ச்சியடைந்த விநாயகமூர்த்தி தனது மனைவி மாயமானது கண்டு பதறிபோனார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பெரிய பகண்டை கிராமத்தை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. அவரது மனைவி பாக்கியலட்சுமி (வயது 42). இவர்களுக்கு திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. எனவே கடந்த சில நாட்களாக பாக்கியலட்சுமி மனஉளைச்சலில் காணப்பட்டார். கடந்த 24-ந் தேதி இரவு வீட்டில் இருந்த பாக்கியலட்சுமி திடீரென மாயமானார். அதிர்ச்சியடைந்த விநாயகமூர்த்தி தனது மனைவி மாயமானது கண்டு பதறிபோனார். இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பாக்கியலட்சுமி எங்கு சென்றார். என்ன ஆனார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீண்டும் கொரோனா பரவல் எதிரொலி கடலூர் மாவட்டத்தில் முக கவசம் விற்பனை அதிகரித்துள்ளது.
- 1 ரூபாய், 2, 3 மற்றும் 5 ரூபாய் என்ற விலையில்50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களில் முகக் கவசம் கடைகளில் விற்பனையாகிறது.
கடலூர்:
தமிழகத்தில் கொரோனா தொற்றுபரவல் அதிகரித்து வரும் நிலையில், அனை வரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதா ரத்துறை வலியுறு த்தியுள்ளது. மேலும் கொரோனா தொ ற்று பரவலை தடுக்க பள்ளிகளில் மாணவர்கள், பணியாளர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என கல்வித்துறையும் அறிவுறுத்தியுள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபாரா தம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாண வர்கள் பொதுமக்கள், வியாபாரிகள் முகக்க வசம் அணிவது அதிகரி த்துள்ளது. தற்போது ஒரு மாஸ்க் 1 ரூபாய், 2, 3 மற்றும் 5 ரூபாய் என்ற விலையில்50 மற்றும் 100 எண்ணிக்கை கொண்ட பாக்கெட்களில் முகக் கவசம் கடைகளில் விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக பலரும் கடை களில் முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை உள்ளிட்டவை களை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். இத னால் முககவசம் விற்பனை சூடுபிடி த்துள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் 7 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.
- பணம்கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 4 புகார் கள் பெறப்பட்டு ரூ.2.45 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் பெண்களின் நலன் காக்க 'லேடிஸ் பர்ஸ்ட்' என்ற திட்டத்தைதொடக்கி வைத்து,82200 06082 என்ற உதவி எண்ணை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் வெளியிட்டார். இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை 666 புகார் கள் வரப்பெற்று அதில், 654 புகார் மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், சிறார் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற 7 புகார்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 7 திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
குடும்பப் பிரச்சினை, கணவன்-மனைவி இடையிலான பிரச்சினை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 69புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், குடும்ப பிரச்சினை, கணவன்-மனைவி இடையிலான பிரச்சினை, பொதுப் பிரச்சினைகள் ,5 பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவை தொடர்பாக 113 புகார்களுக்கு மனு ரசீது வழங்கப்பட்டுள்ளது. பணம்கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக 4 புகார் கள் பெறப்பட்டு ரூ.2.45 லட்சம் பெற்றுத்தரப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினை , மாமியார்-மருமகள் பிரச்சினை , பணம்கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக 467 மனுக்கள் பெறப்பட்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
- சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது.
- இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
சிதம்பரம்:
சென்னையில் இருந்து காரைக்கால் நோக்கி புதுவை மாநில அரசுக்கு சொந்தமான பஸ் சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ் இன்று அதிகாலை சிதம்பரம் அருகே சீத்தாம்பாளையம் பகுதியில் சென்றது. அப்போது பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் ஒரு கும்பல் பஸ் மீது சரமாரியாக கற்களை வீசியது.
அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால் பயணிகள் அச்சத்துடன் திடுக்கிட்டனர். உடனே அவர்கள் கீழே இறங்கினர். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்திருந்தது.
உடனடியாக அரசு பஸ் டிரைவர் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி சென்றார். இதேபோல் சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி தமிழக அரசுக்கு சொந்தமான சொகுசுபஸ் சென்றது. இந்த பஸ் சீத்தாம்பாளையம் பகுதியில் வந்தபோது மர்ம கும்பல் பஸ்சின் பக்கவாட்டில் சரமாரியாக கற்களை வீசியது. இதில் பக்கவாட்டு கண்ணாடிகள் உடைந்தது. கல்வீச்சு சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
உடனடியாக இந்த பஸ் சிதம்பரம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்த கும்பல் பஸ்கள் மீது கற்களை வீசியது தெரியவந்தது. எனவே பஸ் மீது கற்களை வீசி சென்ற கும்பல் யார்? எதற்காக வீசினர்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
- விடுதலை சிறுத்தை கொடி கம்பம் கல்வெட்டை உடைத்தனர்
- முருகானந்தம் என்பவர் குடிபோதையில் கல்வெட்டில் என் பெயர் இல்லை என கூறி கல்வெட்டை உடைத்தாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த பத்திரக்கோட்டை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 35). இவர் சம்பவதன்று குடிபோதையில் அப்பகுதியில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் கல்வெட்டில் என் பெயர் இல்லை என கூறி கல்வெட்டை உடைத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சுப்பிரமணியன் கேட்டபோது திட்டியதாக தெரிகிறது. இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் முருகானந்தம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- விருத்தாசலத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வுசெய்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் விருத்தாசலம் பைபாஸ் சாலையில் உள்ள சார்பதிவாளர் அருகில் உள்ள தனியார் இடத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 46 பள்ளிகளைச் சேர்ந்த 419 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு தணிக்கை செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர வழிக்கதவு, தீயணைப்புக் கருவி, முதலுதவி பெட்டி உள்ளிட்ட அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி வாகனங்கள் இருக்கின்றனவா என சோதனை செய்யப்பட்டது.
மேலும்பள்ளி வாக னஓட்டுனர்கள் வாகன ங்களை இயக்கும்போது கவனமாகவும், பள்ளி மாணவர்கள் இறங்கு ம்போதும் ஏறும் போதும் சரியாக கவனி த்து வாகனங்களை இய க்குமாறும் அறிவுரைகளை மோட்டார் வாகன அதிகாரிகள் வழங்கினர். இதில் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம், விருத்தாசலம் மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், விருத்தாச்சலம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், விருத்தாச்சலம் காவல் கோட்ட கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின், விருத்தாச்சலம் மாவட்ட கல்வி அலுவலர் சுகப்பிரியா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர் மணி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- பண்ருட்டி அருகே தாய், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
- கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது 12 வயது மகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோப்புகொல்லைஅருகே இருசக்கர வாகனத்தில்சென்றார். அப்பொழுது நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (24), ஆதிகுரு (22) ஆகிய இருவரும், மகளுடன் சென்ற அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தைவழிமறித்து சாவியை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள்செ ன்றுள்ளனர். சாவி யை கொடுங்கள் என கேட்டுஅவர்களை பின்தொடர்ந்து சென்ற அந்த பெண்ணிடம் பாலியல்சீண்டலில்ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரும் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தனர்.
அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்காந்திமதி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினார். விசாரணையில் 2 வாலிபர்களும் தாய்- மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்துபோக்சோ, பெண் வன்கொடுமைதடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர்.
- வாங்கிய பணத்தை கொடுக்காமல் கூறியபடி வேலையும்வாங்கி கொடுக்காமல் மாதக்கணக்கில் ஏமாற்றி உள்ளார்.
- பணம் கொடுத்தவர்கள் பிரபாகரனிடம் பணத்தை கொடு என்று தொந்தரவு செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்பிரபாகரன் (வயது 34). டிப் டாப் வாலிபரான இவர் தனக்கு அரசுஅதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பழக்கம் இருப்பதாகவும் அதன்மூலம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி பல பேரிடம் ரூ.20 லட்சத்திற்குமேல் பணம் வசூல் செய்தார்.
அதனை தொடர்ந்து உரியவரிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் கூறியபடி வேலையும்வாங்கி கொடுக்காமல் மாதக்கணக்கில் ஏமாற்றி வந்ததார். இதனால் சந்தேகம் அடைந்து பணம் கொடுத்தவர்கள் பிரபாகரனை பணத்தை கொடு என்று தொந்தரவு செய்துள்ளனர். பணத்தை கொடுக்க முடியாத பிரபாகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார், தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
- பெண்ணாடம் அருகே ஏரியில் மூழ்கி அக்காள்- தங்கை பலியானர்.
- பாட்டி 2 பேத்திகளும் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என நினைத்து இருந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். கூலி தொழிலாளி. அவரது மனைவி கன்னியாகுமரி . இவர்களது மகள்கள் முத்துலட்சுமி ( வயது 17 ). சகோதரி சிவசக்தி (15). இவர்கள் 2 பேரும் திருமலை அகரம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றனர். திருவிழா முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கினர். நேற்று மாலை அக்காள் தங்கை 2 பேரும் ஏரியில் குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றனர். இரவுநேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த பாட்டி தனது உறவினர்கள் உதவியுடன் தேடினார். ஆனால் 2 பேரும் கிடைக்கவில்லை. எனவே பாட்டி 2 பேத்திகளும் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என நினைத்து இருந்தார். இன்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக திருமலை அகரத்தில் உள்ள ஏரிக்கு சென்றனர். அப்பொழுது 2 பெண்கள் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் ஏரிக்கு விரைந்தனர். அப்போது பாட்டியும் அங்கு விரைந்தார். ஏரியில் மிதந்தது தனது பேத்திகள் முத்துலட்சுமி, சிவசக்தி என கிராம மக்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார்.
தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் உடனே அங்கு விரைந்தனர். அவர்கள் அக்காள்- தங்கை 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அக்காள்-தங்கை 2 பேரும் ஏரியில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
- கடலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெ க்டர் பாலசுப்ரமணியம் விடு த்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது. கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இம்முகாமில் 25- க்கும் மேற்பட்டதனியார் துறைநிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவை யான நபர்களை தேர்வு செய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்க ப்படவுள்ளது.
எனவே, வருகிற 8 ந்தேதி (வெள்ளிக்கிழமை) கடலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்பங்குபெற தகுதியின்அடிப்படையில், பத்தாம் வகுப்பு , பிளஸ்-2 , ஐ.டி.ஐ. , டிப்ளமோ பட்டப்படிப்பு ,ஏ.என்.எம், ஜி.என்.எம், டிப்ளமோ நர்சிங் , பி.இ படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டுபயன்பெறு மாறும்,இம்முகாமில் தேர்ந்தெடுக்க ப்படும் பதிவுதாரர்களின் பதிவு எண் வேலைவாய்ப்பு அலு வலக பதிவிலிருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறுஅதில் கூறப்பட்டிருந்தது.
- அக்காள், தங்கை 2 பேரும் ஏரியில் குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றனர்.
- ஏரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலியான சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பூவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபெருமாள். கூலி தொழிலாளி. அவரது மனைவி கன்னியாகுமரி. இவர்களது மகள்கள் முத்துலட்சுமி (வயது 17). சகோதரி சிவசக்தி (15).
இவர்கள் 2 பேரும் திருமலை அகரம் கிராமத்தில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சென்றனர். திருவிழா முடிந்ததும் அந்த பகுதியில் உள்ள தனது தாய் வழி பாட்டி வீட்டில் தங்கினர்.
நேற்று மாலை அக்காள் தங்கை 2 பேரும் ஏரியில் குளித்து வருவதாக கூறிவிட்டு சென்றனர். இரவு நேரமாகியும் 2 பேரும் வீட்டுக்கு திரும்பவில்லை.
அதிர்ச்சி அடைந்த பாட்டி தனது உறவினர்கள் உதவியுடன் தேடினார். ஆனால் 2 பேரும் கிடைக்கவில்லை. எனவே பாட்டி 2 பேத்திகளும் சொந்த ஊருக்கு சென்று இருக்கலாம் என நினைத்து இருந்தார்.
இன்று காலை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இயற்கை உபாதை கழிப்பதற்காக திருமலை அகரத்தில் உள்ள ஏரிக்கு சென்றனர். அப்பொழுது 2 பெண்கள் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் ஏரிக்கு விரைந்தனர். அப்போது பாட்டியும் அங்கு விரைந்தார். ஏரியில் மிதந்தது தனது பேத்திகள் முத்துலட்சுமி, சிவசக்தி என கிராம மக்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார்.
தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் உடனே அங்கு விரைந்தனர். அவர்கள் அக்காள்-தங்கை 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் அக்காள்-தங்கை 2 பேரும் ஏரியில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று உள்ளனர். அப்போது தண்ணீரில் மூழ்கி இறந்து இருப்பது தெரியவந்து உள்ளது.
இந்த சம்பவத்தால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.






