என் மலர்tooltip icon

    கடலூர்

    • விளையாட்டுப் போட்டிக்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    • மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் தீயணைப்பு துறை சார்பில் நாகப்பட்டினத்தில் நடைபெறும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிக்கு 52 வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 36 வீரர்கள் அணிவகுப்பு மற்றும் கயிறு ஏறுதல் போன்ற தேர்வுகள் மூலம் தேர்வு செய்யபட்டனர். இதில் தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் குமார், நிலைய அலுவலர் விஜயகுமார், மற்றும் பண்ருட்டி நிலைய அலுவலர் ஜமுனா ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக காதலன் மிரட்டியதால் காதலன் மீது வழக்கு.
    • மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் தனியார் கல்லூரியில் பண்ருட்டியை சேர்ந்த மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவி சம்பவத்தன்று கடலூர் பஸ் நிலையத்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பஸ்ஸில் அமர்ந்திருந்தார். அப்போது மாணவியின் காதலன் திடீரென்று பஸ்சில் இருந்த மாணவி கையை பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவருடன் செல்ல மறுத்தார். அப்போது காதலன் நம் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து விடுவேன்‌. மேலும் குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி மாணவி கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விஷால், சங்கர் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனைவியின் கழுத்தை அறுத்து கொல்ல கணவன் முயற்சித்தார்.
    • ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி யூனியன் ஆபீஸ் பகுதியை சேர்ந்தவர் ஆதிகேசவன். கூலி தொழிலாளி. அவரது மனைவி சரோஜினி (வயது 42). கடந்த சிலநாட்களாக ஆதிகேசவன் தனது மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இன்று காலையும் பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த ஆதிகேசவன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்தார். பின்னர் மனைவி என்றுகூட பாராமல் சரோஜினியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்தம் பீறிட்ட நிலையில் சரோஜினி அலறித்துடித்தவாறு கீழே விழுந்தார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்தனர். ஆட்கள் வருவதை அறிந்த ஆதிகேசவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு போராடிய சரோஜினி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்குபதிந்து ஆதிகேசவனை தேடி வருகிறார்கள்.

    • கடலூர் பெண்ணையாறு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க மேயர் சுந்தரி ராஜா அதிரடி உத்தரவிட்டார்.
    • ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால் கட்டும் பணி, மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்‌. அப்போது பெண்ணை யாறு சாலைப் பகுதியில் மழைநீர் வடிகால் மேல் 10 கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    இது சம்பந்தமாக ஏற்கனவே மாநகராட்சி சார்பாக கட்டிடங்களை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கையில் இருந்து வந்தது. ஆனால் அவர்கள் கட்டிடங்கள் இடிக்காமல் இருந்து வந்ததால் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மீண்டும் நோட்டீஸ் வழங்கி உடனடியாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளி அருகில் புதிதாக நூலகம் கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனை பார்வையிட்ட மேயர் சுந்தரி ராஜா மற்றும் அதிகாரிகள், இந்த இடம் சற்று குறுகிய இடமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கு தடையின்றி நூலகத்திற்கு வந்து செல்வதற்கு ஏதுவாக ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். 

    இருந்தபோதிலும் எந்த இடத்தில் நூலகம் அமைத்தால் அனைவரும் ஏதுவாக வந்து செல்வதற்கு அமையும் என்பதனை ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நத்தவெளி ரோட்டில் உள்ள குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மழைக் காலங்களில் குண்டுஉப்பலவாடி பகுதியில் பல்வேறு நகரங்களில் மழைநீர் வடிகால் இல்லாததால் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆகையால் அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா அறிவுறுத்தி உள்ளார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கல்வி குழு தலைவர் ராஜமோகன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • விருத்தாசலத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் கார்கூடல் கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரின் மகன் வெற்றிவேல் (20). இவர் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து விருத்தாச்சலம் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு வந்த புகாரின் பேரில் வெற்றிவேலை அழைத்து விசாரித்தனர். புகார் உறுதியான நிலையில் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடலூர் தி சுசான்லி டாக்டர் ரவி, உஷா ரவிக்கு விருது வழங்கப்பட்டது.
    • கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் பல இலட்சம் மூலிகை மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள்.

    கடலூர்:

    கடலூர் தி சுசான்லி அக்குபஞ்சர் மற்றும் ஆயுர்வேதிக் கிளினிக்கின் தலைமை மருத்துவர் பேராசிரியை டாக்டர் உஷாரவி, சுசான்லி டாக்டர் ரவி கடந்த 30 வருடங்களாக இயற்கை மருத்துவத்துறையில் தனித் திறனுடனும், தனிப்பற்றுடனும் சேவை செய்து கொண்டுள்ளனர். இவரும் குறு, சிறு தானியங்கள், மூலிகைகள் குறித்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருவதோடு, பல சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, நிறுவனங்களுக்கு ஆலோசகராக உள்ளனர்.

    இந்த நிலையில் பேராசிரியை உஷாரவி பைபாஸ் அக்குபஞ்சர் என்ற தனது ஆய்வுக் கட்டுரையின் மூலமாக உலக அக்குபஞ்சர் கருத்தரங்கு 2000-ம் ஆண்டில் சீனாவில் சிறப்பு விருது பெற்றார்.

    அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்ற தாய்க்கு ஏற்படும் சில பின் விளைவுகளை எளிய முறையில் அக்குபஞ்சரில் குணப்படுத்துவது எப்படி என ஆய்வு செய்திருந்தார். சுசான்லி டாக்டர் ரவி , பேராசிரியர் உஷா ரவி மருத்துவ ஆய்வுக்கட்டுரைகள், மருத்துவ மற்றும் பொதுநலன் விழிப்புணர்வு கட்டுரைகள், கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மருத்துவ சேவைகள் பல இலட்சம் மூலிகை மருந்துகளை இலவசமாக வழங்கினார்கள். இவ்வாறு பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

    இவர்களின் சேவைப் பணியினை பாராட்டி கோவையில் பேரவை மற்றும் தனியார் ஏஜென்சி உள்ளிட்டவைகள் இவர்களை தேர்ந்தெடுத்து க்ரைம் கதையாசிரியர் ராஜேஷ் குமார், திரைப்பட இயக்குனர் உதயகுமார், எழுத்தாளர்கள் லேனா தமிழ்வாணன், மோகன்தாஸ் மற்றும் சுபா சுப்புரத்தினம் ஆகியோரால் பின்னாக்கல் பெர்பார்மர் அவார்டு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

    • சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
    • தேரோட்டத்தில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    சிதம்பரம் :

    பூலோக கைலாயமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடந்து வருகிறது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆனி திருமஞ்சன விழா நடை பெறவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நடத்த கோவில் பொது தீட்சிதர்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றம் கடந்த 27-ந்தேதி தொடங்கியது.

    அன்றைய தினத்தில் இருந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடந்தது. கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடந்தது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் சித்சபையில் இருந்து சிவகாம சுந்தரி, நடராஜ மூர்த்தி சாமிகள் புறப்பட்டனர்.

    அதன் பின்னர் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனியே புறப்பட்டன. 5 சாமிகளும் தேர் நிற்கும் இடமான கீழரத வீதிக்கு புறப்பாடு ஆகி வந்தனர். அங்கு தனித்தனித் தேரில் எழுந்தருளினர். 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. கைலாய வாத்தியம் முழங்க பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரினை வடம்பிடித்து இழுத்தனர். தேரோட்ட நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

    பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர் தெற்கு ரதவீதி, மேல ரதவீதி. வடக்கு ரதவீதி வழியாக கீழ ரதவீதிக்கு இன்று மாலை தேர் நிலையை வந்தடையும். அங்கு சிறப்பு தீபாராதனை காட்டப்படும். அதன்பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி ஆகிய சாமிகள் ஆயிரம்கால் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அங்கு தீபாராதனைக்கு பிறகு மஹா அபிஷேகம், சொர்ணாபிஷேகம், லட்சார்ச்சணை நடைபெறும்.

    சிகர நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன விழா நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும்.

    அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.

    தேரோட்டத்தையொட்டி போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது.

    • கருவாடு வாங்க மக்கள் குவிந்தனர்.
    • பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள்.

    கடலூர்: 

    கடலூர் அருகே காராமணிக்குப்பத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கருவாடு சந்தை நடந்து வருகிறது. அங்கு பல்வேறு வகையான கருவாடுகளை குவியல் குவியலாக வைத்து வியாபாரிகள் விற்பனை செய்வார்கள். இன்று நடந்த கருவாடு சந்தையில் அதனை வாங்க பொதுமக்கள் கூடினர்.

    • திட்டக்குடி அருகே: நள்ளிரவில் தாய் - மகளை தாக்கி நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
    • சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே வடகரை கிராமத்தை சேர்ந்தவர் சேகர் விவசாயி. இவரது மனைவி பரமேஸ்வரி(வயது43). இவர்களது மகள் பவானி(24) மற்றும் 9 மாத குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது இரவு சேகர் மட்டும் வீட்டின் பின்புறம் உள்ள கரும்பு வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டார். இந்நிலையில் இரவு சுமார் ஒரு மணி அளவில் மூன்று மர்ம நபர்கள் வீட்டில் பின்பக்க கதவை லாவகமாக திறந்து உள்ளே சென்றனர். அப்போது தூக்கத்தில் இருந்த பவானி கழுத்தில் இருந்த 8 பவுன் தாலி செயினை பறித்தனர். இதனால் பவானியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் படுத்திருந்த பரமேஸ்வரி முழித்துக் கொண்டு அருகில் கிடந்த அருவாமனையை எடுத்து திருடர்களை வெட்ட முயன்றார்.

    சுதாரித்துக் கொண்ட திருடர்கள் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரமேஸ்வரியின் கையில் கிழித்து விட்டு வலது காலில் கட்டையால் பலமாக தாக்கினர். தொடர்ந்து பவானியின் முகத்தில் செங்கலால் தாக்கினர். இவர்களின் சத்தத்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஓடி வந்து மர்ம நபர்களை துரத்தி பிடிக்க முயற்சித்தனர் அப்போது திருடர்கள் அணிந்திருந்த செருப்பை விட்டு விட்டு அருகில் உள்ள கரும்பு வயலில் குதித்து தப்பிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீஸ் டி.எஸ்.பி. அங்கித்ஜெயின் மற்றும் பெண்ணாடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருட வந்த மர்ம நபர்கள் கால் சட்டை மற்றும் டீ-ஷர்ட் அணிந்தும் முகத்தில் முகமூடி அணிந்தும் திருட வந்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்கள் யாரேனும் வந்தது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்

    • சிதம்பரத்தில் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன விழா தேரோட்டம் நாளை காலை நடைபெற இருக்கிறது.
    • மாலை இரு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    கடலூர்:

    பஞ்ச பூத தலங்களில் ஆகாயதலமாக விளங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடை பெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடை பெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திரும ஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடரா ஜமூர்த்தி, சிவ காம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார்.அதன்படி இந்தாண்டுக்கான ஆனி திரு மஞ்சன திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் பல்வே று வாகனங்களில் பஞ்சமூ ர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    விழாவில் முக்கிய நிக ழ்ச்சியான ேதரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் நடராஜர்,சிவகாமசுந்தரி, விநாயகர்,முருகர், சண்டி கேஸ்வரர்ஆகிய சாமிகள் தனித்தனிதேரில் வலம் வருவார்கள். சிகர நிகழ்ச்சியான திருமஞ்சன விழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரம் கால் மண்டபத்தில் நடரா ஜருக்கும், சிவகாமசுந்தரிக்கும் மகா அபிஷேகம் நடைபெறும். அதைத் தொடர்ந்து மதியம் 1 மணிக்கு பஞ்ச மூர்த்தி கள் வீதி உலாவும், 2 மணிக்கு ஆனி திருமஞ்சன தரிசனமும் நடைபெற உள்ளது.தேரோட்டத்தை யொட்டிகீழரதவீதியில் 5 தேர்கள் அலங்கரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
    • கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கடலூர் அருகே மேல் அழிஞ்சிப்பட்டு கிராமத்தில் கொடியேற்று விழா ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி துணை மேயர் வக்கீல் தாமரைச்செல்வன் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் கலந்து கொண்டு கட்சியின் கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் நிர்வாகிகள் பன்னீர், சம்பத், செந்தில், கலைஞர், ராஜேஷ், தமிழரசன், சக்தி முருகன், குணத்தொகையன், கலியமூர்த்தி, மணிகண்ட ராஜா, பரசு.முருகையன், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரத்தில் கடத்தப்பட்ட தனியார் கல்லூரி பஸ் மீட்பு 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பாஸ்கரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பஸ்சை சிதம்பரத்தில் நிறுத்தி இருந்தார். இன்று காலை வழக்கம்போல் பஸ்சை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றார்.

    கடலூர்:

    புதுவையை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் வழக்கம் போல் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து செல்வதற்காக சிதம்பரம் செல்வது வழக்கம். அதன்படி கல்லூரி பஸ் டிரைவர் சிதம்பரத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் கடந்த சனிக்கிழமை கல்லூரி பஸ்சை சிதம்பரத்தில் நிறுத்தி இருந்தார். இன்று காலை வழக்கம்போல் பஸ்சை எடுப்பதற்கு பாஸ்கரன் சென்றார். அப்போது நிறுத்தியிருந்த இடத்தில் பஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனை மர்ம நபர்கள் கடத்தி உள்ளனர். இதுகுறித்து அவர் கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும், கல்லூரி ஊழியர்களும் பஸ்சை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை கடலூர் அருகே எஸ்.என்.சாவடி பகுதியில் கல்லூரி பஸ் நிற்பதாக கல்லூரி ஊழியர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக புதுநகர் போலீசார் விரைந்து சென்று பஸ்சை மீட்டு சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த பஸ்சை கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்த பெரியசாமி, நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் இந்த பஸ்சை கடத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் உண்மை நிலவரம் தெரியவரும்.

    ×