என் மலர்

  நீங்கள் தேடியது "ccupation"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடலூர் பெண்ணையாறு சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்க மேயர் சுந்தரி ராஜா அதிரடி உத்தரவிட்டார்.
  • ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர்.

  கடலூர்:

  கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் சுத்தம் செய்யும் பணி, மழைநீர் வடிகால் கட்டும் பணி, மழைநீர் தேங்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர். இன்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் பெண்ணையாறு சாலையில் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன், செயற்பொறியாளர் புண்ணியமூர்த்தி, நகர் நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி ஆகியோர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்‌. அப்போது பெண்ணை யாறு சாலைப் பகுதியில் மழைநீர் வடிகால் மேல் 10 கட்டிடங்கள் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

  இது சம்பந்தமாக ஏற்கனவே மாநகராட்சி சார்பாக கட்டிடங்களை அகற்றுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நடவடிக்கையில் இருந்து வந்தது. ஆனால் அவர்கள் கட்டிடங்கள் இடிக்காமல் இருந்து வந்ததால் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மீண்டும் நோட்டீஸ் வழங்கி உடனடியாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என அறிவுறுத்தினார். இதனை மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் கட்டிடங்கள் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து கடலூர் வேணுகோபாலபுரம் பள்ளி அருகில் புதிதாக நூலகம் கட்டிடம் கட்டுவதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதனை பார்வையிட்ட மேயர் சுந்தரி ராஜா மற்றும் அதிகாரிகள், இந்த இடம் சற்று குறுகிய இடமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கு தடையின்றி நூலகத்திற்கு வந்து செல்வதற்கு ஏதுவாக ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் அருகில் உள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். 

  இருந்தபோதிலும் எந்த இடத்தில் நூலகம் அமைத்தால் அனைவரும் ஏதுவாக வந்து செல்வதற்கு அமையும் என்பதனை ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து நத்தவெளி ரோட்டில் உள்ள குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு அகற்றி தூர்வாரும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என மேயர் சுந்தரி ராஜா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மழைக் காலங்களில் குண்டுஉப்பலவாடி பகுதியில் பல்வேறு நகரங்களில் மழைநீர் வடிகால் இல்லாததால் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆகையால் அந்தப் பகுதியில் மழைநீர் வடிகால் அமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா அறிவுறுத்தி உள்ளார். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, கல்வி குழு தலைவர் ராஜமோகன், கவுன்சிலர் அருள்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.

  ×